Latest Updates
-
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா?
இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? ஒருமுறை பன்னீரை இப்படி செஞ்சு சாப்பிடுங்க...
Dhaba Style Paneer Bhurji Gravy Recipe In Tamil: காலையில் பெரும்பாலும் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் செய்வீர்களா? இந்த இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியைத் தான் செய்வீர்களா? விடுமுறை நாட்களில் சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் சுவையாகவும் ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் என்றால் பிடிக்குமா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு தாபா ஸ்டைலில் கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த தாபா ஸ்டைல் பன்னீரை புர்ஜி கிரேவி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வதற்கு சுலபமாகவும், விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.

உங்களுக்கு தாபா ஸ்டைல் பன்னீரை புர்ஜி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாபா ஸ்டைல் பன்னீரை புர்ஜி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* தயிர் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* பன்னீர் - 200 கிராம்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், லேசாக நிறம் மாறும் வரை கிளறி ஒரு
கிண்ணத்தில் ஊற்றி நன்கு குளிர வைக்க வேண்டும்.
* கடலை மாவு நன்கு குளிர்ந்ததும், அதில் புளிக்காத தயிர், மிளகாய்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சீரகத் தூள், மிளகுத்
தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு
வதக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கலந்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி
விட வேண்டும்.
* பின்பு அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, கொத்தமல்லியைத்
தூவி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அதில் பன்னீரை கைகளால்
உதிர்த்து விட்டு, 2 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால்,
சுவையான தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவி தயார்.
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications











