Latest Updates
-
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா?
தயிர் சட்னி
தயிர் சட்னி பற்றி கேட்டதுண்டா? என்ன தயிரைக் கொண்டு சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து சட்னி செய்யலாம். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம்.
இதுவரை எத்தனையோ சட்னியை நீங்கள் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தயிர் சட்னி பற்றி கேட்டதுண்டா? என்ன தயிரைக் கொண்டு சட்னியா என்று நீங்கள் கேட்கலாம். ஆம், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து சட்னி செய்யலாம். இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு தயிர் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தயிர் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கெட்டி தயிர் - 1 கப்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் தயிருடன் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயிர் கலவையை சேர்த்து கிளறி, குறைவான தீயில் மூடி வைத்து சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* சட்னியில் இருந்து மசாலாவின் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் தனியே பிரிய ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து இறக்கினால், தயிர் சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











