Latest Updates
-
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்..
டயட்டில் இருப்போருக்கான... நோ ஆயில்.. க்ரீமி பன்னீர் கிரேவி... எப்படி செய்றது-ன்னு பாருங்க...
No Oil Creamy Paneer Gravy Recipe In Tamil: உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் தங்கள் உணவில் புரோட்டீனை அதிகம் சேர்ப்பார்கள். அதுவும் பன்னீரை அதிகம் சேர்ப்பார்கள். அதோடு தங்களின் உணவில் எண்ணெயை சேர்ப்பதைத் தவிர்ப்பார்கள். இப்படி எண்ணெய் சேர்க்காமல் சமைப்பது என்று சவாலாக இருக்கலாம். சிலருக்கு எண்ணெய் சேர்க்காமல் எப்படி சமைப்பது என்ற கேள்வியும் எழலாம்.
ஆனால் பன்னீரைக் கொண்டு அருமையான சுவையில் கிரேவி செய்யலாம். அதுவும் க்ரீமியான பன்னீர் கிரேவியை செய்யலாம். இந்த பன்னீர் கிரேவி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவியில் எண்ணெய் மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு என்று எதுவுமே சேர்க்க வேண்டாம். எதுவும் சேர்க்காமலேயே அருமையான சுவையில் கிரேவி செய்யலாம்.

உங்களுக்கு எண்ணெய் சேர்க்காமல் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் சேர்க்காத பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கனிந்த தக்காளி - 2 (நறுக்கியது)
* முந்திரி - 1 கையளவு
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் - 1/2 கப்
* பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் 1 கையளவு முந்திரியை நீரில் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய 2 தக்காளி மற்றும் ஊற வைத்த
முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்ததை ஊற்றி, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில்1 டீஸ்பூன் மிளகாய் தூள், 3/4 டீஸ்பூன் மல்லித்
தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு
பச்சை வாசனை போக வதக்க வேண்டும். இதற்கு சற்று நேரம் எடுக்கும்,
இருந்தாலும், குறைவான தீயில் வைத்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் காய்ச்சிய பாலை 1/2 கப் ஊற்றி கிளறி கொதி வந்ததும்,
பன்னீர் துண்டுகளை சேர்த்து 3-4 நிமிடம் வேக வைத்து, கசூரி மெத்தியை
மேலே தூவி கிளறி இறக்கினால், சுவையான க்ரீமி பன்னீர் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











