Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: ஏப்ரல் 16-ல் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்! -
கொங்குநாடு ஸ்பெஷல் தட்டைப்பயறு சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க -
வருடத்திற்கு 2 ரயில்கள் மட்டுமே வரும் இந்தியாவின் மிகவும் வினோதமான ரயில் நிலையம் எது தெரியுமா? -
40 வயதிற்கு மேல் ஒன்றாக சேர்த்து சாப்பிட வேண்டிய சைவ மற்றும் அசைவ உணவுகள்! - பட்டியலிடும் டாக்டர்! -
இந்த 5 ராசிக்காரங்க யார் பொய் சொன்னாலும் ஈஸியா கண்டுபிடிக்கும் அசாத்திய புத்திசாலிகளாம் -
12 ஆண்டுகள் கழித்து குருபகவான் உருவாக்கும் ஹன்ஸ் மகாபுருஷ ராஜயோகம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
உடல் எடையை குறைக்க உதவும் ஆம்லெட் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க! -
இன்றைய ராசிபலன் 03 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சோதனையான நாளாக இருக்குமாம்...! -
சனிபகவான்-புதனின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
மட்டன் பஞ்சு போல சாப்ட்டா இருக்கணுமா? அப்ப இந்த 2 பொருட்களை சேத்துக்கோங்க போதும்!
Cooking Tips In Tamil: அசைவ பிரியர்களின் மிகவும் விருப்பமான இறைச்சி என்றால் அது ஆட்டிறைச்சியாக தான் இருக்கும். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டன் பிரியர்கள் ஏராளம் என்றே கூறலாம். இப்படி அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்கள் நிச்சயம் புதன், ஞாயிறு என வாரத்திற்கு இரண்டு முறையாவது அசைவ உணவுகளை தங்களின் உணவில் சேர்த்துக் கொள்வார்கள். உங்கள் வீட்டிலும் அப்படி தானா?
ஆனால் அப்படி மட்டனை வாங்கி சமைக்கும் போது, அதை சரியான பக்குவத்தில் வேக வைப்பது என்பது பலருக்கும் சவாலானதாக இருக்கும். ஏனெனில் குறைவான விசில் விட்டால், மட்டன் சாப்பிட கடினமாக இருக்கும். அதுவே நீண்ட நேரம் விசில் விட்டு வேக வைத்தால், அது ரப்பர் போன்று ஆகிவிடும்.

மட்டனின் முழு சுவையை அனுபவிக்க வேண்டுமானால், அதை சரியான பக்குவத்தில் வேக வைக்க வேண்டும். அதற்கு மட்டன் வாங்கும் போது ஒருசில விஷயங்களை கவனிக்க வேண்டியதோடு, சமைக்கும் போது மட்டனுடன் ஒருசில பொருட்களையும் சேர்க்க வேண்டும். இப்போது மட்டனை பஞ்சு போன்று சாப்ட்டாக வேக வைப்பதற்கான சில வழிகளைக் காண்போம்.
1. பார்த்து வாங்கவும்
மட்டன் ருசியாக இருக்க வேண்டுமானால், முதலில் சரியான மட்டனை பார்த்து வாங்க வேண்டும். மட்டன் அடர் பிங்க் அல்லது அந்த சிவப்பு நிறத்தில் இருந்தால் அந்த மட்டன் பிரஷ் மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். அதேப் போல் ஆட்டிறைச்சியின் கொழுப்பு மஞ்சள் நிறத்தில் இருந்தால், அதை வாங்காதீர்கள். அதுவும் ஆட்டிறைச்சி மிகவும் தளர்வாக இருந்தால், அந்த ஆட்டிறைச்சி பழையதாக இருக்கலாம்.
2. சரியான முறையில் வெட்டவும்
இறைச்சியை வெட்டும் விதமும், இறைச்சியின் ருசியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இறைச்சி கடினமாக இல்லாமல் மென்மையாக இருக்க, இறைச்சியை மையப்பகுதியிலிருந்து வெட்டாமல், தசை இழைகளுக்குக் குறுக்காக வெட்ட வேண்டும். இப்படி வெட்டும் போது, இறைச்சியில் உள்ள புரோட்டீன் உடைக்கப்பட்டு, இறைச்சி வேகமாக வெந்து வருவதோடு, இறைச்சியும் சுவையாக இருக்கும்.
3. வெந்தயம் சேர்க்கவும்
மட்டன் பஞ்சு போன்று மென்மையாக இருக்க, குக்கரில் மட்டனை சேர்த்து வதக்கிய பின், நீர் ஊற்றுவதற்கு முன் 4-5 வெந்தய விதைகளை சேர்த்து வதக்குங்கள். இப்படி வதக்கும் போது, அதில் உள்ள பண்புகள் இறைச்சியை விரைவில் வேக வைக்க உதவும். முக்கியமாக இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கேஸையும் மிச்சப்படுத்தும். ஆயினும், வெந்தயத்தை சேர்க்கும் போது அதிகமாக சேர்த்துவிட வேண்டாம். இல்லாவிட்டால், அது மட்டனை கசப்பாக்கிவிடும்.
4. தயிர் சேர்க்கலாம்
மட்டன் மென்மையாகவும், ருசியாகவும் இருக்க வெந்தயத்தை சேர்க்க பிடிக்காவிட்டால், மட்டனை கழுவிய பின், அத்துடன் சிறிது தயிர், உப்பு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சமைத்தால், இறைச்சி பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
5. பப்பாளி காய் சேர்க்கலாம்
இன்னும் சிம்பிளான வழியில் மட்டனை எளிதில் வேக வைப்பதற்கு, மட்டனை சமைக்கும் போது, அத்துடன் சிறிய துண்டு பப்பாளி காயை சேர்த்து சமைக்கலாம். இதனால் அதில் உள்ள அமிலம் கொலாஜனுக்கு இடையில் உள்ள தசை இழைகளை எளிதில் உடைத்தெறிய உதவி புரிந்து, மட்டனை மென்மையாகவும், ஜூஸியாகவும் வைத்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications









