Latest Updates
-
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
சௌ சௌ காயை வெச்சு.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்..
Chow Chow Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று காலை இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? என்ன சட்னி செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? சற்று வித்தியாசமான, அதே சமயம் சுவையான சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சௌ சௌ காய் உள்ளதா?
அப்படியானால் அந்த காயைக் கொண்டே அட்டகாசமான சுவையில் சட்னி செய்யலாம். இந்த சௌ சௌ சட்னி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதுவும் இட்லி தோசைக்கு இந்த சட்னியை செய்தால், ஒரு இட்லி சாப்பிடும் உங்கள் குழந்தை இன்னொரு இட்லி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சௌ சௌ சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சௌ சௌ சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சௌ சௌ காய் - 250 கிராம்
* தக்காளி - 2
* பூண்டு - 1 பல்
* பச்சை மிளகாய் - 3
* கொத்தமல்லி - 1 கையளவு
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1/2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
* கல் உப்பு - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சௌ சௌ காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும். அதேப் போல் தக்காளியையும் துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சௌ சௌ காயைப் போட்டு,
அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை,
மஞ்சள் தூள், சாம்பார் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
சிறிது நீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் மத்து கொண்டு மசித்து சட்னியாக்க வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து,
சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான சௌ சௌ சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications











