Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
செட்டிநாடு பட்டாணி குருமா
நீங்கள் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைப்பவரா? அதுவும் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இன்று செட்டிநாடு பட்டாணி குருமா செய்யுங்கள்.
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. இதற்கு அந்த ரெசிபிக்களில் சேர்க்கப்படும் மசாலா தான் காரணம். நீங்கள் உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய நினைப்பவரா? அதுவும் இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் இன்று செட்டிநாடு பட்டாணி குருமா செய்யுங்கள். இந்த குருமா மிகவும் ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு பட்டாணி குருமா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பட்டாணி குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் மசாலாவிற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* துருவிய தேங்காய் - 1/2 கஙப
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பிற பொருட்கள்...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* புளி நீர் - 1/2 கப்
* பச்சை பட்டாணி - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் தேங்காய் மசாலாவைத் தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பொட்டுக்கடலை, கசகசா, கிராம்பு, பட்டை, சோம்பு மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு சில நொடிகள் வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் தேங்காய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு அத்துடன் மிளகாய் தூளையும் சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பட்டாணியைப் போட்டு, சிறிது உப்பு மற்றும் அரை கப் நீரை ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, கறிவேப்பிலை, தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மசாலா, வேக வைத்துள்ள பட்டாணி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் புளி நீர் மற்றும் குருமா பதத்திற்கு தேவையான அளவு நீரையும் ஊற்றி, 3-4 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பட்டாணி குருமா தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











