Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
மழை நேரத்தில் இந்த செட்டிநாடு மிளகு பூண்டு குழம்பை செய்யுங்க.. நோயெதிர்ப்பு இருமடங்கு அதிகரிக்கும்..
Chettinad Milagu Poondu Kulambu Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து கொண்டிருக்கிறது. இப்படி மழை பெய்வதனால் சளி, இருமல் தொல்லையால் நிறைய பேர் அவதிப்படுவதுண்டு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த சளி தொல்லையில் இருந்து விடுபட, செட்டிநாடு மிளகு பூண்டு குழம்பை செய்து சாப்பிடுங்கள்.
இப்படியான குழம்பை செய்யும் போது, அது மழை நேரத்தில் சாப்பிட வாய்க்கு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் மிளகு, பூண்டு, மஞ்சள் போன்று மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள் நிறைய உள்ளன. எனவே இந்த குழம்பை செய்து சாப்பிடும் போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும். அதோடு இந்த குழம்பை ஒருமுறை செய்தால், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு மிளகு பூண்டு குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மிளகு பூண்டு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி விதை - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 3/4 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* பூண்டு - 100 கிராம்
* சின்ன வெங்காயம் - 150 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிய எலுமிச்சை அளவு (1/2 கப் நீரில் ஊற வைத்தது)
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு, கடலைப்
பருப்பு, மல்லி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வரமிளகாய், சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, நிறம்
மாறும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்ழுன்
நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு
நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து
வதக்கி, கறிவேப்பிலை தூவி சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள் மற்றும் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து,
மிதமான தீயில் வைத்து, நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி,
புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை
பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம்
கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிளறி, மீண்டும் மூடி வைத்து, குறைவான தீயில்
வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு பூண்டு மிளகு
குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications











