Latest Updates
-
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...! -
மணமணக்கும்.. மட்டன் நோன்பு கஞ்சி - சிம்பிளா குக்கரில் எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
1 கப் துருவிய தேங்காய் இருந்தா இந்த மாதிரி மசாலா தேங்காய் சாதம் செய்யுங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்! -
மீன ராசியில் உதயமாகும் செவ்வாய்: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது... -
Eid-ul-Fitr 2026: இந்தியாவில் ரம்ஜான் பண்டிகை எந்த நாளில் கொண்டாடப்பட போகிறது? மார்ச் 20 அல்லது மார்ச் 21? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய இடிச்ச தயிர் சட்னி - சூடான சாத்துக்கு செமயா இருக்கும்.. ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசி பெண்களுக்கு ரொம்ப நேர்மையான கணவர் கிடைக்கும் அதிர்ஷ்டமிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி: மார்ச் இறுதி முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறப்போகுது! -
38 நிமிடங்கள் மட்டுமே நடந்த வரலாற்றின் மிகவும் வினோதமான போர்... இந்த போரில் எந்த நாடு ஜெயித்தது தெரியுமா? -
வெள்ளை பணியாரமும்.. மிளகாய் சட்னியும் - இந்த காம்போவை ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க... அள்ளும்..
செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ்
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. அதில் ஒன்று தான் செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ். இந்த சைடு டிஷ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. செட்டிநாடு ரெசிபிக்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதில் ஒன்று தான் செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ். இந்த சைடு டிஷ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது. குறிப்பாக இதை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று வித்தியாசமாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்த செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் செய்யுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பாராட்டைப் பெற்றுத் தரும்.

இப்போது செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை
தேவையான பொருட்கள்:
* சின்ன கத்திரிக்காய் - 5
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* வெல்லம் - 2 டீஸ்பூன்
* கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* கருப்பு எள்ளு விதைகள் - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவி நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் கத்திரிக்காய், தக்காளி சேர்த்து, குறைவான தீயில் 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வெல்லம், புளிச்சாறு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான அளவு நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
* பிறகு மூடி வைத்து 12-15 நிமிடம் குறைவான தீயில் கத்திரிக்காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications










