Latest Updates
-
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Kadamba Chutney Recipe : செட்டிநாடு கதம்ப சட்னி
உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது ஒரே மாதிரியான சட்னி செய்யாமல், சற்று வித்தியாசமாக சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் கதம்ப சட்னி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யும் போது ஒரே மாதிரியான சட்னி செய்யாமல், சற்று வித்தியாசமாக சட்னி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு ஸ்பெஷல் கதம்ப சட்னி செய்யுங்கள். இந்த கதம்ப சட்னி இட்லி, தோசை, வெண் பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். மேலும் இந்த சட்னியை சப்பாத்தியுடனும் சாப்பிடலாம். அதோடு இந்த சட்னியை செய்வது சுலபம்.

உங்களுக்கு செட்டிநாடு கதம்ப சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கதம்ப சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பச்சை மிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* இஞ்சி - 1/4 இன்ச்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* புதினா - 1/4 கப்
* கொத்தமல்லி - 1/4 கப்
* தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்கி, வெங்காயம், தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து சுருங்கும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு தேங்காய் மற்றும் புளி சேர்த்து ஒருமுறை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து இறக்கி, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான செட்டிநாட்டு கதம்ப சட்னி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











