Latest Updates
-
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி பன்னீர் கீமா மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
பிராமின் ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி... ஈஸியா இப்படி செய்யுங்க... சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும்...! -
மீன ராசியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க... -
உங்க சீலிங் பேனிலிருந்து காத்து வரலையா? இதான் பிரச்சினையா இருக்கும்... எப்படி ஈஸியா சரி பண்ணலாம் தெரியுமா? -
எப்பவும் ஒரே மாதிரி ரசம் வெக்காம.. ஒரு டைம் புளி சேர்க்காம இப்படி ரசம் வையுங்க.. ஊத்தி குடிப்பாங்க.. -
தமிழ்நாட்டின் பிரபல அரசியல்வாதிகளின் ராசிகள் என்ன?ராசிப்படி அவர்கள் எப்படிப்பட்ட தலைவராக இருப்பார்கள் தெரியுமா -
Nombu Kanji Benefits: நோன்பு கஞ்சி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
செட்டிநாடு இட்லி பொடி
இட்லி, தோசைக்கு இட்லி பொடி வைத்து சாப்பிட விரும்புபவரா? அதே வேளையில் உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் இட்லி பொடியை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள்.
நீங்கள் இட்லி பொடி பிரியரா? இட்லி, தோசைக்கு இட்லி பொடி வைத்து சாப்பிட விரும்புபவரா? அதே வேளையில் உங்களுக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் இட்லி பொடியை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு இட்லி பொடி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். உங்கள் வீட்டில் மதிய வேளையில் சாதத்திற்கு என்ன ஊற்றி சாப்பிடுவது என்ற யோசனை இருப்பின், செட்டிநாடு இட்லி பொடி இருந்தால், அதை சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு இட்லி பொடி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு இட்லி பொடி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 10
* எள்ளு விதைகள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, எள்ளு விதைகள், கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வாணலியில் போட்டு வறுத்து குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால், செட்டிநாடு இட்லி பொடி தயார். இந்த இட்லி பொடியை நல்லெண்ணெயுடன் தேவையான போது சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
குறிப்பு:
* உங்களுக்கு இட்லி பொடி காரமாக வேண்டுமானால், வரமிளகாயை இன்னும் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம்.
* உங்களுக்கு கடலை பருப்பு சேர்க்க விருப்பமில்லாவிட்டால், அதை தவிர்த்துக் கொள்ளலாம்.
* பெருங்காயத் தூள் மற்றும் எள்ளு விதைகள் இரண்டையும் எப்போதும் நல்ல தரமானதாகவே பயன்படுத்த வேண்டும். அது தான் நல்ல ப்ளேவரையும், மணத்தையும் தரும்.
Image Courtesy: chitrasfoodbook



Click it and Unblock the Notifications











