Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
மணமணக்கும்.. சுவையான... செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா
Chettinad Brinjal Masala Recipe: இன்று மதியம் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காய் கொண்டு செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்யுங்கள்.
இந்த செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். அதுவும் இது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு கத்திரிக்காய் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* கருப்பு எள்ளு - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
மசாலா செய்வதற்கு...
* சின்ன கத்திரிக்காய் - 5
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* வெல்லம் - 2 டீஸ்பூன்
* புளி பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை கழுவி நீளத் துண்டுகளாக்கி, உப்பு கலந்த
நீரில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கருப்பு
எள்ளு, வேர்க்கடலை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து இறக்கி
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் இஞ்சி,
பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூளை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசலாவை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் துண்டுகளாக்கப்பட்ட கத்திரிக்காயை சேர்த்து, அதோடு
தக்காளியையும் சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 2
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வெல்லம், புளி பேஸ்ட், 1/2 கப நீரை
ஊற்றி கிளறி 10-2 நிமிடம் நன்கு கத்திரிக்காய் வேகும் வரை கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் மசாலா
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications











