Latest Updates
-
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க -
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர் -
குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது! -
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைச்சது நடக்கும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (05 ஏப்ரல் 2026-11 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம் -
சுவையான வேர்கடலை புதினா சட்னி ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க -
வரப்போகும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் பணக்கார மற்றும் ஏழை வேட்பாளர்கள் யார் தெரியுமா?
10 நிமிடத்தில் சப்பாத்திக்கு கிரேவி செய்யணுமா? எப்படி-ன்னு பாருங்க.. இதுல எந்த காய் வேணாலும் சேக்கலாம்...
Chapati Gravy Recipe In Tamil: இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் வீட்டில் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவியில் பட்டாணிக்கு பதிலாக காளான், மீல் மேக்கர், பன்னீர் என்று எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
எதை சேர்த்தாலும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். வேலை முடிந்து வீட்டிற்கு வருபவர்கள், சப்பாத்திக்கு மாவு பிசையும் சமயத்தில் இந்த கிரேவியை செய்துவிடலாம். அந்த அளவு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு சப்பாத்தி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* முந்திரி பொடி - 2 டீஸ்பூன்
* சுடுநீர் - தேவையான அளவு
* பட்டாணி - 1/2 கப்
* கசூரி மெத்தி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் சிறிது
உப்பு தூவி நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, நீர் வற்றும் வரை நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து மிதமான தீயில் வைத்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து முந்திரி பொடியை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு
சுடுநீரை ஊற்றி, பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10
நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கி, கசூரி மெத்தியை கையால்
நசுக்கி தூவி கிளறினால், சுவையான சப்பாத்திக்கு ஏற்ற பட்டாணி கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications











