Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
2 குடைமிளகாய் இருந்தா.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு டக்கரா இருக்கும்...
Capsicum Gravy Recipe In Tamil: நைட் உங்கள் வீட்டில் பெரும்பாலும் சப்பாத்தி தான் செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு எப்போதும் ஒரே சைடுடிஷ் செய்தால், சப்பாத்தியின் மீது வெறுப்பே வந்துவிடும். எனவே அவ்வப்போது சற்று வித்தியாசமான சைடு டிஷ் செய்ய வேண்டும். அதுவும் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் காய்கறிகளைக் கொண்டு சைடு டிஷ் செய்து வந்தால், இன்னும் நல்லது.
குறிப்பாக உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். அதுவும் இந்த கிரேவி வழக்கமாக செய்யும் கிரேவியை போன்று இல்லாமல் வித்தியாசமாக இருக்கும். ஆனால், சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.

உங்களுக்கு குடைமிளகாய் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை வேர்க்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* இஞ்சி - சிறிய துண்டு
* தேங்காய் - 2 சில்லு (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* குடைமிளகாய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு பற்கள், இஞ்சி, தேங்காய் ஆகியவற்றை சேர்த்து
நிறம் மாறும் வரை வதக்கி இறக்கி, அவற்றை ஒரு தட்டில் எடுத்து வைத்து
குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன்
தக்காளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், நீளமாக துண்டுகளாக்கப்பட்ட குடைமிளகாயை சேர்த்து
லேசாக நிறம் மாறும் வரை வதக்கி, அதை ஒரு தட்டில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் சீரகம், மிளகு சேர்த்து தாளித்து, நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும்
கசூரி மெத்தியை சேர்த்து நன்கு கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி மூடி வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, வதக்கி வைத்துள்ள குடைமிளகாயை
சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான குடைமிளகாய்
கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications











