Just In
Don't Miss
- Finance
ரிஷி சுனக் தான் அடுத்த பிரிட்டன் பிரதமரா..? இதுமட்டும் நடந்தால்..!!
- Automobiles
பெண்ட்லீ கார்களாக வாங்கி குவிக்கும் முகேஷ் அம்பானி!! 3வது பெண்டைகா கார் புதியதாக - வீடியோ!
- Technology
Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?
- Movies
சுந்தரி, கண்ணம்மாவிற்கு அடிச்சது ஜாக்பாட்...கிடைச்சது புது சான்ஸ்...எதுல தெரியுமா?
- News
நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் தமிழை மறந்த மாணவர்கள்! ஃபெயில்கள் அதிகரிப்பு- டிஜிபி சைலேந்திர பாபு
- Sports
என்னுடைய பணிக்காலம் பிசிசிஐயின் பொற்காலம்.. எந்த சர்ச்சைகளுக்கும் இடமில்லை.. கங்குலி கருத்து
- Travel
ஆசியாவிலேயே மிக உயரமான பாராகிளைடிங் ஸ்பாட் – பிர் பில்லிங்கில் ஒரு சகாசச் சுற்றுலா!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
Capsicum chicken gravy recipe : குடைமிளகாய் சிக்கன் கிரேவி
இதுவரை நீங்கள் எத்தனையோ ஸ்டைலில் சிக்கன் கிரேவி செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வைட்டமின் சி அதிகம் நிறைந்த குடைமிளகாயை கொண்டு சிக்கன் கிரேவி செய்ததுண்டா? இல்லையென்றால், இனி முயற்சித்துப் பாருங்கள். இந்த குடைமிளகாய் சிக்கன் கிரேவி சப்பாத்தி, பூரி, நாண், சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதோடு இதன் சுவை சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.
உங்களுக்கு குடைமிளகாய் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குடைமிளகாய் சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கனை வேக வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 3 (நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 2 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் சிக்கனுடன், அதை வேக வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களையும் சேர்த்து கிளறி, குக்கரை மூடி குறைவான தீயில் 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* குக்கர் விசில் போனதும், குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளியை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, 5-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகள், தக்காளி கெட்சப், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்துள்ள சிக்கனை நீருடன் சேர்த்து நன்கு கிளறி, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, 15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், குடைமிளகாய் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi