வீட்ல ப்ரெட் இருந்தா இந்த மாதிரி ரோல் செஞ்சு சாப்பிடுங்க... ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்ட மாதிரியே இருக்கும்...!

Posted By:

Bread Vegetable Roll Recipe in Tamil: மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது உங்கள் வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கொஞ்சம் ப்ரெட் துண்டுகளும் , உருளைக்கிழங்கும் இருந்தால், அட்டகாசமான சுவையில் மொறுமொறுப்பான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ப்ரெட் ரோல் செய்து சாப்பிடலாம். இந்த ப்ரெட் ரோல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சூப்பரான சுவையில் இருக்கும்.

காய்கறிகள் சாப்பிடாத குழந்தைகளுக்கு அவற்றை இதுபோல செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதன்மூலம் அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். உங்களுக்கு இந்த சுவையான ப்ரெட் ரோலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான எளிமையான செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Bread Roll Recipe How to Make Bread Roll
தேவையானப் பொருட்கள் :

- ப்ரெட்15 துண்டுகள்
- துருவிய சீஸ் - 2 கப்
- பெரிய வெங்காயம் - 3
- கேரட் - 2
- உருளைக்கிழங்கு - 4
- மிளகாய் தூள் - டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- கடுகு - அரை ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

- பிரெட் ரோல் செய்வதற்கு முதலில் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

- பிறகு உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை வேக வைத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும்.

- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெங்காயம், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

- மசாலா வாசனை போனதும் அதில் மசித்து வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.

- ஆறியதும் மசாலாக் கலவையை உருட்டிக் கொள்ளவும். ப்ரெட் துண்டுங்களின் ஓரங்களை நறுக்கிவிட்டு, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை அழுத்தவும். மீதமுள்ள ப்ரெட் துண்டுகளையும் இதே போல் தண்ணீர் தொட்டு அழுத்தி வைக்கவும்.

- ப்ரெட் துண்டுகளின் மேல் சீஸ் துருவலைப் பரவலாகத் தூவி, உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டையை ப்ரெட்டின் மீது ஒரு ஓரமாக வைக்கவும்.

பிறகு தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை ரோல் செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ரெட் ரோல்ஸைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.

- சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ப்ரெட் ரோல் தயார். இதை தக்காளி சாஸுடன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிடவும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, August 30, 2025, 14:21 [IST]
Desktop Bottom Promotion