இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. ஒரே மாசத்துல தொப்பை குறைஞ்சு சிக்குன்னு மாறிடுவீங்க...

Posted By:

Karuppu Kavuni Arisi Kanji Recipe In Tamil: உங்களுக்கு பானை போன்று தொப்பை உள்ளதா? உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையுடன் இல்லாமல் உடல் பருமனால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இப்படி அதிகரித்த உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைக்க வழியை தேடிக் கொண்டிருக்கிறர்களா? அதற்காக உடற்பயிற்சி, டயட் போன்றவற்றை மேற்கொள்கிறீர்களா?

அப்படியானால் உங்களின் எடை இழப்பு டயட்டில் கருப்பு கவுனி அரிசி கஞ்சியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கஞ்சியில் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் பண்புகள் அதிகம் உள்ளன. மேலும் இவற்றில் சேர்க்கப்பட்டுள்ள பல பொருட்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கக்கூடியவை.

Black Rice Kanji How To Make a Karuppu Kavuni Arisi Kanji

முக்கியமாக இந்த கஞ்சியை அனைவருமே குடிக்கலாம். அதுவும் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் இந்த கஞ்சியை குடித்து வந்தால், ஒரே மாதத்தில் எடையிலும், தொப்பையிலும் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த கஞ்சி பெருமளவில் உதவி புரியும்.

உங்களுக்கு கருப்பு கவுனி அரிசி கஞ்சியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு கவுனி அரிசி கஞ்சி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

கருப்பு கவுனி அரிசி கஞ்சி பவுடருக்கு...

* கருப்பு கவுனி அரிசி - 400 கிராம் அல்லது 2 கப்
* கொள்ளு - 200 கிராம் அல்லது 1 கப்
* பார்லி அரிசி - 200 கிராம் அல்லது 1 கப்
* பச்சை பயறு - 200 கிராம் அல்லது 1 கப்
* கருப்பு உளுந்து - 1/4 கப்
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

கஞ்சிக்கு...

* தண்ணீர் - 2 கப்
* காய்கறிகள் - 1/2 கப் (பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ்)
* பூண்டு - 3 பல்
* கஞ்சி பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 கப் அல்லது 400 கிராம் அளவில் கருப்பு கவுனி அரிசியை போட்டு, நன்கு வறுத்து, ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1 கப் அல்லது 200 கிராம் கொள்ளு பருப்பை சேர்த்து, நன்கு நிறம் மாற வறுத்து, அதை கவுனி அரிசியுடன் சேர்த்து குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் 1 கப் அல்லது 200 கிராம் பார்லி அரிசியை சேர்த்து அதையும் நன்கு நிறம் மாறும் வரை வறுத்து, இறக்கி தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதே வாணலியில் பச்சை பயறை சேர்த்து அதையும் வறுத்து தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
* கடைசியாக மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கருப்பு உளுந்து, சீரகம், மிளகு, வெந்தயம் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த பொட்டிகளை ஒன்றாக சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது கருப்பு கவுனி கஞ்சி பவுடர் தயார்.
* பிறகு கஞ்சியை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பொடியாக நறுக்கிய 1/2 கப் காய்கறிகள் மற்றும் பூண்டு பற்களை சேர்த்து கலந்து, மூடி 5 நிமிடம் காய்கறிகளை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் கருப்பு கவுனி அரிசி பவுடரை சேர்த்து, அதோடு சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கஞ்சியானது நன்கு வெந்து, கெட்டியானதும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கருப்பு கவுனி அரிசி கஞ்சி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, September 3, 2025, 6:30 [IST]
Desktop Bottom Promotion