பீட்ரூட் வெச்சு ஒருடைம் இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...

Posted By:

Beetroot Chutney Recipe In Tamil: உங்கள் வீட்டில் எப்போதும் காலை வேளையில் இட்லி அல்லது தோசை தான் செய்வீர்களா? அதற்கு எப்போதும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கார சட்னி என்று தான் செய்வீர்களா? தினமும் இப்படி ஒரே மாதிரியான சட்னி செய்து போடிக்குதா? சற்று வித்தியாசமான சுவையில் சட்னி செய்ய விரும்புகிறீர்களா?

வீட்டில் பீட்ரூட் உள்ளதா? இதுவரை பீட்ரூட் வைத்து பொரியல் தான் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த பீட்ரூட கொண்டு அருமையான சுவையில் சட்னி செய்யலாம் தெரியுமா? இந்த பீட்ரூட் சட்னி இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த சட்னி சட்டென்று 5 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

Beetroot Chutney How To Make a Simple And Tasty Beetroot Chutney Recipe

உங்களுக்கு இந்த பீட்ரூட் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பீட்ரூட் - 1
* பச்சை மிளகாய் - 2
* புதினா - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை - பாதி
* துருவிய தேங்காய் - 1/4 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

* முதலில் பீட்ரூட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய பீட்ரூட், பச்சை மிளகாய், புதினா, சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் பாதி எலுமிச்சையின் சாற்றினை பிழிந்துவிட்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான பீட்ரூட் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 12, 2024, 7:57 [IST]
Desktop Bottom Promotion