Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
சிம்பிளான... பேச்சுலர் சாம்பார்
மிகவும் சிம்பிளான, அதே வேளையில் மிகவும் ருசியான ஒரு சைடு டிஷ்ஷை இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பு இல்லாத சாம்பார் செய்யுங்கள்.
வீட்டில் செய்யும் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னியை செய்து போரடித்துவிட்டதா? மிகவும் சிம்பிளான, அதே வேளையில் மிகவும் ருசியான ஒரு சைடு டிஷ்ஷை இட்லி, தோசைக்கு செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சாம்பார் செய்யுங்கள். அதுவும் பருப்பு இல்லாத சாம்பார் செய்யுங்கள். இந்த சாம்பாருக்கு பேச்சுலர் சாம்பார் என்று பெயர். பொதுவாக இம்மாதிரியான சாம்பார் பேச்சுலர்களுக்கு ஏற்றது. ஆனால் இதை ஒரு அவசரத்திற்கும் செய்யலாம்.

உங்களுக்கு பேச்சுலர் சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேச்சுலர் சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம்/சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பையும் தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பவுடரை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் சர்க்கரை சேர்த்து மூடி வைத்து, குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பேச்சுலர் சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications











