1 கப் வேர்க்கடலை வெச்சு.. இப்படி ஆந்திரா ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..

Posted By:

Andhra Style Peanut Chutney Recipe In Tamil: காலையில் இட்லிக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வேர்க்கடலை சட்னி என்றால் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் அந்த வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சட்னி செய்யாமல், ஆந்திரா ஸ்டைலில் வேர்க்கடலை சட்னியை செய்யுங்கள்.

இப்படி சட்னி செய்யும் போது, வீட்டில் உள்ளவர்கள் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள். மேலும் இந்த ஸ்டைல் சட்னியை ஒருமுறை செய்து கொடுத்தால், வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். அந்த அளவில் இந்த சட்னியின் சுவை ருசியாக இருக்கும்.

Andhra Style Peanut Chutney How To Make a Andhra Style Verkadalai Chutney

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறு நெல்லிக்காய் அளவு
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேர்க்கடலை - 1 கப்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், புளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து, 30 நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 1 கப் வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சிறிது சேர்த்து, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், 1/2 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 வரமிளகாய் மற்றும் 1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Saturday, May 3, 2025, 8:12 [IST]
Desktop Bottom Promotion