Latest Updates
-
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம்
1/2 கப் வேர்க்கடலையும், எலுமிச்சை பழமும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னியை அரைங்க..டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Andhra Style Groundnut Chutney Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னிகள் அரைத்து போரடித்து விட்டதா? புதுசா ஏதாவது சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? அப்ப நம்ம அக்கட தேசமான ஆந்திரா ஸ்டைல் சைடிஷ்களை ட்ரை பண்ணி பாருங்க. வழக்கமான சட்னிகளுக்கு மாற்றாக சற்று காரமான அதே சமயம் புளிப்பான சட்னியை செய்ய வேண்டுமா? அப்ப இந்த ஆந்திரா ஸ்டைல் எலுமிச்சை வேர்க்கடலை சட்னியை ஒரு தடவை முயற்சி செய்து பாருங்க.
இந்த வேர்க்கடலை சட்னி வழக்கமாக செய்யும் வேர்க்கடலை சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த ஆந்திரா வேர்க்கடலை சட்னி பூண்டு, வேர்க்கடலை, வெங்காயம் மற்றும் வீட்டிலுள்ள எளிய பொருட்களையும் வைத்து தயாரிக்கப்படுகிறது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிமையாக இருப்பதோடு சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய வெங்காயம்
- 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 3 பூண்டு பல்
- 1/2 கப் பச்சை வேர்க்கடலை
- 3 வர மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- சிறிதளவு கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்
- 1 வர மிளகாய்
செய்முறை:
- ஒரு கடாயில் ½ டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறி மென்மையாகும் வரை சமைக்கவும். அவற்றை எடுத்து தனியாக வைக்கவும்.
- அதே கடாயில், மீதமுள்ள ½ டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி வேர்க்கடலை மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும்.
- மிதமான தீயில் வேர்க்கடலை பொன்னிறமாகி வாசனை வரும் வரை சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வறுக்கவும். பின்னர் ஆறியதும் மிளகாயை சின்ன சின்ன துண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், பூண்டு, வேர்க்கடலை, உடைத்த வர மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- இதை மென்மையான விழுதாக அரைக்கவும். இந்த சட்னி கெட்டியாக இருந்தால் மட்டுமே சுவை நன்றாக இருக்கும். எனவே முடிந்த அளவிற்கு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பின்னர் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இந்த சட்னியை அப்படியே சாப்பிடலாம், தேவைப்பட்டால் தாளித்துக் கொள்ளவும்.
- சட்னியைத் தாளிக்க ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதில் கடுகை போட்டு தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு வர மிளகாயை உடைத்து அதில் சேர்க்கவும்.
- இறுதியாக ஒரு சிட்டிகை பெருங்காயத்தை சேர்த்து இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி நன்கு கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் வேர்க்கடலை சட்னி ரெடி.



Click it and Unblock the Notifications











