ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...

Posted By:

Andhra Style Ginger Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் இருக்கும்.

ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன்பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம் சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும். மேலும் இஞ்சியை வைத்து செய்யப்படுவதால் இந்த சட்னி மிகவும் ஆரோக்கியமானதும் கூட.

Andhra Style Ginger Chutney Recipe How to Make Andhra Style Inji Chutney

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- தனியா - 1/2 ஸ்பூன்
- இஞ்சி - 2 இன்ச்
- பெரிய வெங்காயம் - 2
- வர மிளகாய் - 3
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- வெல்லம் - 1 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு

தாளிக்க:

- எண்ணெய் - 1 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உளுந்தம்பருப்பு - 1 ஸ்பூன்

செய்முறை:

- இஞ்சியை மண் இல்லாமல் நன்றாக கழுவி, சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

- வெங்காயத்தைக் கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கொத்தமல்லி விதைகள், வர மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, பருப்பு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் மெல்லியதாக நறுக்கிய இஞ்சித் துண்டுகளைச் சேர்க்கவும். வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.

- வெங்காயம் பதம் மாறியதும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.

- இது ஆறியதும் ஒரு மிக்சி ஜாரில் வதக்கிய கலவை புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, அனைத்தும் சேர்ந்து ஒரு மென்மையான, கெட்டியான விழுதாக வரும் வரை அரைத்து ஒரு கிண்ணத்துக்கு மாற்றவும்.

- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதை சட்னி மீது கொட்டி நன்றாக கிளறினால் சுவையான ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி ரெடி!

[ of 5 - Users]
Story first published: Monday, March 30, 2026, 21:57 [IST]
Desktop Bottom Promotion