ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபி... அரை மணி நேரத்தில் செஞ்சு வீட்ல எல்லோரையும் அசத்துங்க...!

Posted By:

Andhra Pepper Chicken Recipe in Tamil: சண்டே வந்தாலே சிக்கன் சாப்பிட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாக மாறிவிட்டது. இன்று உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? வழக்கமான சிக்கன் செய்யாமல் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வித்தியாசமான சிக்கன் சைடு டிஷ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கனை செய்யுங்கள்.

இந்த ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் சாதம், பிரியாணி மட்டுமின்றி தோசை, சப்பாத்தி போன்ற டிபன் வகைகளுடன் சேர்த்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். சோயா சாஸ் சேர்த்து செய்யப்படுவதால் இது ரெஸ்டாரண்ட்டில் சாப்பிடும் சுவையில் இருக்கும், எனவே இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.

Andhra Pepper Chicken Recipe How to Make Andhra Pepper Chicken

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சூப்பரான பேப்பர் சிக்கனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா பெப்பர் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

- அரை கிலோ சிக்கன்(எலும்பில்லாதது சிறந்தது)
- 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1/2 அங்குல இஞ்சி
- 5 பூண்டு பல் நறுக்கியது
- 1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1 ஸ்பூன் சோம்பு பொடி
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 3 பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

- சிக்கனை எலும்பு இல்லாமல் சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர் அதனை கழுவி வைத்துக் கொள்ளவும்.

- பின்னர் அதில் உப்பு, மஞ்சள் தூள், 1 ஸ்பூன் கருப்பு மிளகு தூள், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நன்றாக கிளறி மேரினேட் செய்யவும். இதை அரை மணி நேரம் அப்படியே ஊற விடவும்.

- வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சியை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு கடாயில், எண்ணெயை ஊற்றி சூடாக்கி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கவும். அரை நிமிடம் வதக்கிய பின்னர் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்,பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

- வெங்காயம் மென்மையாகும் வரை தொடர்ந்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் அனைத்து மசாலாப் பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்க்கவும்.

- சிறிது தண்ணீர் தெளித்து மசாலா பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மசாலா அடிபிடிக்காமல் இருக்க தொடர்ந்து கிளறவும்.

- பின்னர் நறுக்கிய சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும். மசாலா அனைத்து துண்டுகளிலும் படும்படி நன்கு கிளறவும்.

- உப்பின் அளவை சரிபார்த்து சிக்கனை மூடி போட்டு, மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை வேக விடவும். இடையிடையே மூடியைத் திறந்து சிக்கனை நன்கு கிளறி விடவும்.

- பின்னர் மூடியைத் திறந்து மீண்டும் தீயை அதிகரித்து தண்ணீர் முழுவதுமாக வற்றும் வரை சிக்கனை நன்கு கிளறவும்.

- கடைசியாக 1 ஸ்பூன் கருப்பு மிளகு தூள் மற்றும் சோயா சாஸ் சேர்த்து சிக்கனுடன் நன்றாக கலக்கவும்.

- இறுதியாக சிறிது கறிவேப்பிலை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி!

[ of 5 - Users]
Desktop Bottom Promotion