Latest Updates
-
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...! -
யமனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.. -
முகத்தில் உள்ள ஹோலி நிறங்களை நீக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1 வாழைப்பழமும் இருந்தா.. இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. 2 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சந்திர-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
ருசியான... பிடிக்கருணை கிழங்கு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
Lunar Eclipse 2026: சந்திர கிரகணத்தின் போது நிலா ஏன் சிவப்பு நிறமாக மாறுகிறது தெரியுமா?
தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!
ஈரான் போர் பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்பிரைஸாக தங்கம், வெள்ளி விலைகள் குறைந்துள்ளன. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 4000 ரூபாய்க்கு மேல் குறைந்து இன்ப அதிர்ச்சி தந்துள்ளது.பிப்ரவரி 28ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா இராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் கூட்டு தாக்குதலை நடத்த தொடங்கின. இதனால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பெருமளவில் உயரும் என கூறப்பட்டது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. கடந்த மூன்று வர்த்தக நாட்களாக தங்கம் விலை இறங்குமுகமாக இருக்கிறது.
போர் தொடங்கிய பிப்ரவரி 28 ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 650 ரூபாய் விலை உயர்ந்து 15,550 ரூபாயாக இருந்தது. அடுத்ததாக ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கமாக தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் ஈரான் போரை காரணமாக கூறி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1ஆம் தேதி அன்றும் தங்கத்தின் விலை உயர்த்தப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 225 ரூபாய் விலை உயர்ந்து 15,775 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஈரான் போர் தீவிரமடைந்ததால் இந்த வாரம் முழுவதுமே தங்கம் விலை ஏறுமுகமா தான் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த மூன்று நாட்களாகவே தங்கம் விலை குறைந்திருக்கிறது. திங்கட்கிழமை அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 115 ரூபாய் விலை குறைந்து 15,660 ரூபாய்க்கு விற்பனையானது, செவ்வாய்க்கிழமை நேற்று 195 ரூபாய் விலை குறைந்து 15,465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் தங்கத்தின் விலை மேலும் 265 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 15,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 2,120 ரூபாய் விலை குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மூன்று நாட்களில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 575 ரூபாய் விலை குறைந்திருக்கிறது ஒரு சவரன் என பார்க்கும்போது 4600 ரூபாய் விலை சரிவு கண்டிருக்கிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 289 ரூபாய் விலை குறைந்து 16,582 ரூபாய்க்கும் ஒரு சவரன் 2,312 ரூபாய் விலை குறைந்து 1,32,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கமும் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஒரு கிராம் 150 ரூபாய் விலை குறைந்து 13,100 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1200 ரூபாய் விலை குறைந்து 1,04,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை இன்றைய தினம் குறைந்திருக்கிறது. ஒரு கிராமுக்கு இருபது ரூபாய் குறைந்து 295 ரூபாய்க்கும் ஒரு கிலோவுக்கு 20000 ரூபாய் குறைந்து 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. போர் தொடங்கிய பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்தது அதன் பிறகு இந்த மூன்று நாட்களில் விலை சரிந்து விட்டது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
Credit: Goodreturns



Click it and Unblock the Notifications











