Latest Updates
-
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...!
ஆடி கொழுக்கட்டை
சிலர் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏதாவது இனிப்புகளை செய்து அம்மனுக்கு படைப்பதுண்டு. நீங்கள் இந்த வார ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஏதாவது ஸ்பெஷலாக செய்ய விரும்பினால், ஆடி கொழுக்கட்டை செய்யுங்கள்.
ஆடி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்நாளில் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று பூஜைகளை செய்து அம்மனை வணங்குவார்கள். சிலர் ஆடி வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் ஏதாவது இனிப்புகளை செய்து அம்மனுக்கு படைப்பதுண்டு. நீங்கள் இந்த வார ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஏதாவது ஸ்பெஷலாக செய்ய விரும்பினால், ஆடி கொழுக்கட்டை செய்யுங்கள். இந்த ஆடி கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு ஆடி கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆடி கொழுக்கட்டையின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெல்லம்/சர்க்கரை - 3/4 கப்
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* அரிசி மாவு - 1 1/2 கப்
* ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
* சுக்குப் பொடி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தை எடுத்துக் கொண்டு, அத்துடன் துருவிய தேங்காயை சேர்த்து கையால் பிசைய வேண்டும்.
* அப்படி பிசையும் போது, அது நீர் விட்டு வரும் போது, அதில் சுக்கு பொடி, ஏலக்காய் பவுடரை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அரிசி மாவை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.
* பின் பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக/கொழுக்கட்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் உருட்டிய உருண்டைகளை போட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* கொழுக்கட்டையின் மேல் தேங்காய் தெரிய ஆரம்பித்தால், நீரில் இருந்து கொழுக்கட்டைகளை எடுத்து விடுங்கள். இப்போது சுவையான ஆடி கொழுக்கட்டை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications










