For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுகொழு குழந்தை பிறக்கணும்னா இந்த 5 யும் செய்ங்க…

கர்ப்ப காலத்தில் சில ஊட்டச்சத்துக்களான புரோட்டீன்கள், போலிக் அமிலம், விட்டமின் ஏ, கால்சியம் போன்றவை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதோடு கர்ப்ப காலத்தை எந்த வித பிரச்சினைகளு

|

கர்ப்ப காலம் என்றாலே பெண்கள் தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் குழந்தைக்கும் சேர்த்து ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும். அந்த காலத்தில் அவர்களுக்கு கண்டிப்பாக ஒரு சரிவிகித உணவு தேவை. ஆமாங்க அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களான புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், கொழுப்புகள் மற்றும் விட்டமின்கள், தாதுக்கள் இவைகள் எல்லாம் தேவைப்படுகிறது. சில ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியத்தை கொடுப்பதோடு கர்ப்ப காலத்தை எந்த வித பிரச்சினைகளும் இல்லாத சந்தோஷமான தருணமாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. புரோட்டீன்கள் :

1. புரோட்டீன்கள் :

உங்கள் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் முக்கியம். குழந்தையின் இரத்தம், எலும்பு, உறுப்புகள், தசைகள் மற்றும் திசுக்கள் இவைகள் வளர இந்த சத்து தான் உதவுகிறது. ஆனால் இதை அளவுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ள கூடாது. தினசரி உணவில் உங்கள் கர்ப்ப காலத்தின் முதல் பகுதியில் 0.5 கிராம், இரண்டாம் பகுதியில் 6.9 கிராம், மூன்றாவது பகுதியில் 22.7 கிராம் என்ற அளவில் எடுத்து கொள்ள வேண்டும். மூன்றாம் பகுதியின் இறுதியில் உங்களுக்கு 78 கிராம் புரோட்டீன் தேவைப்படும்.

2. போலிக் அமிலம்

2. போலிக் அமிலம்

உங்கள் குழந்தையின் நரம்பு, மூளை மற்றும் தண்டுவட வளர்ச்சிக்கு போலிக் அமிலம் மிகவும் முக்கியம். மேலும் கருவில் வளரும் குழந்தையின் எடை அதிகரிக்கவும், ஹூமோகுளோபின் பிரச்சினைகள் இல்லாமல் இருப்பதற்கும், குறைமாத பிரசவம் பிரச்சினைகளை தடுப்பதற்கும் உதவுகிறது.ஒரு நாளைக்கு 500 மைக்ரோ கிராம் அளவு கருவுற்ற பெண்கள் எடுத்து கொள்ளலாம்.

3. இரும்புச்சத்து

3. இரும்புச்சத்து

ஹூமோகுளோபின் தான் நமது இரத்தத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்து செல்கிறது. எனவே இதற்கு இரும்புச்சத்து தேவை. கருவில் குழந்தை வளரும் போது குழந்தைக்கும் தாயுக்கும் போதிய இரும்புச் சத்து இருக்க வேண்டும். இல்லையென்றால் பிறக்கின்ற குழந்தைக்கு அனீமியா, எடை குறைதல், குறை பிரசவம் போன்றவைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியப் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 35 மில்லி கிராம் அளவு இரும்புச் சத்து தேவைப்படுகிறது. அசைவ உணவுகளில் அதிக அளவு இரும்புச் சத்து கிடைக்கிறது. சைவ உணவுகளிலிருந்து இரும்புச்சத்தைப் பெற வேண்டும் என்றால் அதற்கு விட்டமின் சி அடங்கிய பொருட்களான நெல்லிக்காய், லெமன் மற்றும் தக்காளி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இவை இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

4. கால்சியம்

4. கால்சியம்

கால்சியம் உங்கள் கருவில் வளரும் குழந்தையின் எலும்பு க்கும், பற்களின் வலிமைக்கும் உதவுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது. தாய்மார்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் வராமல் தடுக்கிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் கருத்துப்படி கருவுற்ற பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 1200 மில்லி கிராம் அளவு கால்சியம் தேவைப்படுகிறது. இது இயற்கையாகவே பாலில் இருப்பதால் தினமும் பால் குடிப்பது நல்லது.

5. விட்டமின் ஏ :

5. விட்டமின் ஏ :

விட்டமின் ஏ குழந்தையின் பார்வைக்கும், நோயெதிர்ப்பு சக்தி மற்றும் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதிலும் கருவுற்ற காலத்தின் மூன்றாவது பகுதியில் குழந்தையின் விரைவான வளர்ச்சியால் விட்டமின் ஏ பற்றாக்குறை ஏற்படும். எனவே விட்டமின் ஏ அடங்கிய உணவுகளான பால், பட்டர், முட்டை, காரட், மீன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு தேவையான விட்டமின் ஏ வின் அளவு 800 மைக்ரோ கிராம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Pregnancy Food Chart and 5 Key Nutrients For a Healthy Pregnancy

Pregnancy demands good nourishment for the health of the baby and mother. Proteins, vitamin A, calcium, folic acid, iron these are nutrients needed in during pregnancy period.
Story first published: Monday, March 19, 2018, 17:46 [IST]
Desktop Bottom Promotion