ஆண்கள் இந்த மாத்திரை சாப்பிட்டா குழந்தையே பிறக்காதாம்...

Posted By: Saravanan Kirubananthan
Subscribe to Boldsky

பொதுவாக கருத்தடை மாத்திரைகளை ஆண்கள் எடுத்துக் கொள்வதில்லை. அதுபோன்ற மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் தங்களுடைய ஆண்மைத்தன்மைகுறைந்துவிடும் என்ற தவறான எண்ணம் ஆண்களிடையே இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் நிலமையே வேறாகிவிட்டது. பெண்கள் தான் கருவை சுமக்கிறார்கள்.

parenting

அவர்கள் சாப்பிட்டால் தான் பலனளிக்கும் என்ற நிலை மாறி, ஆண்கள் சாப்பிட்டாலும் கருத்தடை மாத்திரை சிறந்த பலனளிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்று நிரூபித்துள்ளது. அதிலும் குறிப்பாக, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள ஆண் கருத்தடை மாத்திரைக்கான முதல் கட்ட ஆய்வு முடிவுகள் பல சாதகமான முடிவுகளைத் தந்திருக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோதனை

சோதனை

50 வயதுக்குட்பட்ட ஆண்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். நான்கு வாரங்கள் வரை இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. சோதனைகளில், பரிசோதனை ஹார்மோன் அடிப்படையிலான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரை நன்கு பலனளிக்கிறது என்று கண்டறியப்பட்டது. பங்கேற்பாளர்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் விந்தணு உற்பத்திக்கு தேவையான இரண்டு ஹார்மோன்களுடன் கணிசமாக குறைந்துவிட்டதாக அமெரிக்க ஆய்வுக் குழு குறிப்பிட்டது.

ஆணுறையும் அவசியம்

ஆணுறையும் அவசியம்

பெண்களின் கருத்தடை மாத்திரைக்கு மாற்றாக உருவாக்கப்படும் ஆண் கருத்தடை மாத்திரையின் கண்டுபிடிப்பில் ஒரு படி முன்னேறியிருக்கிறோம் என்று ஆய்வு எழுத்தாளர் மருத்துவர் ஸ்டீபனி பேஜ் கூறுகிறார். இதற்காக காண்டம் பயன்பாட்டை நிறுத்த வேண்டாம். அடுத்த கட்ட, நீண்ட கால ஆய்வுகள் இன்னும் பல நடைபெற இருக்கிறது. அந்த ஆய்வின் முடிவுகள் மூலம் பக்க விளைவுகளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் இப்போதும் ஆண் கருத்தடை மாத்திரைகள் மீதான ஒரு ஆர்வம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அந்த மருத்துவர் தெரிவிக்கிறார்.

பெண்கள் கருத்தடை

பெண்கள் கருத்தடை

பெண்களுக்கு கருத்தடைக்கான பல வாய்ப்புகள் உள்ளன, ஆனால் பல பெண்களுக்கு ஹார்மோன் மற்றும் பிற முறைகளைப் பயன்படுத்த முடியாது," என்று சியாட்டிலிலுள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வளர்சிதைமாற்றம் மற்றும் உட்சுரப்பியல் பிரிவின் தலைமையில் தலைவரான பேஜ் கூறினார். இந்த காலத்து ஆண்கள் கர்ப்பத்தின் சுமையைப் பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டார்.

3 டோஸ்

3 டோஸ்

இந்த ஆய்விற்காக ஆராய்ச்சியாளர்கள், தினமும் ஒரு முறை பயன்படுத்தும் கருத்தடை மாத்திரையான dimethandrolone undecanoate (DMAU) மாத்திரையை 3 டோஸ் (100, 200 and 400மில்லிகிராம் ) தேர்வு செய்தனர். பவுடர் அல்லது ஆமணக்கு எண்ணெய் ஆகிய இரண்டு சூத்திரங்கள் கொண்டு இந்த மாத்திரைகள் சோதிக்கப்பட்டன.

புது முயற்சி

புது முயற்சி

DMAU, டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ப்ராஸ்டெஸ்டின் போன்ற ஹார்மோன் செயல்பாட்டை ஒருங்கிணைக்கிறது. இந்த ஆய்விற்கு நிதியளித்த யு.எஸ். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது,

இது பல வழிகளில் ஆண் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையை உருவாக்குவதற்கான முந்தைய முயற்சிகளிலிருந்து வேறுபடுகிறது. இரண்டு ஸ்டீராய்டுகளுக்கு மாற்றாக ஒரே ஒரு ஸ்டீராய்டு பயன்படுத்தப்பட்டுள்ளது . முந்தைய முறைகளில் ஆண் கருத்தடை முயற்சிகள் கல்லீரலை பாதித்தது. ஆனால் இந்த புது முயற்சி பக்க விளைவுகள் ஏதும் கிடையாது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1 மாத்திரை

ஒரு நாளைக்கு 1 மாத்திரை

மற்ற டெஸ்டோஸ்டிரோன் வகைப்படுகளைப் போலல்லாமல், இதனை ஒரு நாளுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த ஆய்விற்காக 100 நபர்களை, 20 பேர் கொண்ட 4 குழுவாக பிரித்துக் கொள்ளப்பட்டது. அவர்களுள் சிலருக்கு சர்க்கரை மாத்திரை வழங்கப்பட்டது. சிலருக்கு மேலே சொன்ன மூன்று டோஸ் DMAU வில் ஒரு டோஸ் தினமும் வழங்கப்பட்டது. இந்த மாத்திரை உணவுக்கு பின்தான் கொடுக்கப்படுகிறது.

DMAU

DMAU

இந்த மாத்திரையை அதிக டோஸ் கொடுப்பதால், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் இதர ஹார்மோன்களான LH & FSH ன் உற்பத்தி குறைக்கப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் தான் விந்தணு உற்பத்தியில் முக்கிய பங்காற்றுகின்றன. விந்தணு உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் இயல்பாகவே குறைகின்றன. ஆனால் நீங்கள் பயப்படும்படி, விந்தணுக்கள் ஏதும் குறைவதில்லை.

எடை அதிகரிப்பு

எடை அதிகரிப்பு

டெஸ்டோஸ்டிரோன் குறைபாட்டால் பாலியல் செயல்பாடுகளில் எந்த ஒரு மனநிலை மாற்றம் அல்லது தொந்தரவுகள் போன்ற எந்த சிக்கல்களைளும் பங்கேற்பாளர்கள் சந்திக்கவில்லை என்று ஆய்வின் முடிவகள் கூறுகின்றன. ஆனால் இந்த மருந்தை உட்கொண்டவர்கள் அனைவருக்கும் தோராயமாக 3 முதல் 9 பவுண்ட் எடை அதிகரிப்பு ஏற்பட்டது. மேலும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவில் ஒரு சிறிய குறைபாடு தோன்றியது. மற்ற படி ஆபத்தான எந்த ஒரு பக்க விளைவும் உண்டாகவில்லை.

விந்தணு உற்பத்தி

விந்தணு உற்பத்தி

விந்தணுக்களை உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் குறைவதால் விந்தணு எண்ணிக்கை குறையும் என்பது பொருள் இல்லை என்று பேஜ் கூறுகிறார். விந்தணு உற்பத்தியை குறைக்க, மிக நீண்ட நாட்கள் இந்த கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி சோதனை செய்ய வேண்டும். குறைந்தது மூன்று முதல் ஆறு மாதங்கள் இந்த சோதனை காலம் நீள வேண்டும். என்று கூறுகிறார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல வெறும் 28 நாட்கள் போதாது என்று எடுத்துக் கூறுகிறார் பேஜ். ஆனால், நாங்கள் முன்வைத்த ஆய்வின் மூலம், இந்த மாத்திரையை எடுத்துக் கொள்வதால் விந்தணு உற்பத்திக்கு ஆதரவாக இருக்கும் ஹார்மோனை கட்டுபடுத்த முடியும் என்பதும், இந்த கட்டுப்பாடு, விந்தணு பலமடைவதை தடுக்கலாம் என்பது கண்டறியப்படுகிறது. என்று மருத்துவர்.பேஜ் கூறுகிறார். மேலும் அவர் கூறுவது, இது மிகவும் சின்ன ஆராய்ச்சி. இன்னும் இதனை பற்றி தெரிந்து கொள்ள இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். இதற்கான தொடர்ச்சியான ஆராய்ச்சி வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும், யுசிஎல்ஏ வில் உள்ள லா பயோமெட் ஹார்பரிலும் நடைபெற்று வருகிறது என்று விளக்கினார்.

ஆர்வம் காட்டும் ஆண்கள்

ஆர்வம் காட்டும் ஆண்கள்

பன்னாட்டு ஆய்வுகளில், பெரும்பாலான ஆண்கள் கருத்தடை விஷயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது பேஜின் கருத்து. தற்போது உள்ள நிலவரப்படி, ஆண்கள் கருத்தடை சாதனம் என்பது காண்டம் மட்டும் தான். அதுவும் கருத்தடைக்கான நம்பகத்தன்மை இல்லாத ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார். ஆய்வின் முடிவுகள், எண்டோகிரைன் சொசைட்டி கூட்டத்தில் சிகாகோவில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இத்தகைய கூட்டங்களில் வெளியிடப்படும் ஆய்வுகள் பொதுவாக மருத்துவ இதழில் வெளியீட்டுக்கு மதிப்பாய்வு செய்யப்படும் வரை முதல் நிலை ஆய்வாகவே கருத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Male Birth Control Pill Shows Early Promise

An attempt to develop a safe and effective "male pill" is making headway, according to preliminary results of a small study.