முள்ளம்பன்றியின் முள்ளை கொண்டு வளைகாப்பு! தமிழர் பாரம்பரிய இரகசியம்!

Written By:
Subscribe to Boldsky

பெண்களது வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின் போதும், ஒவ்வொரு சடங்குகள் நடக்கின்றன. அந்த சடங்குகள் ஒவ்வொன்றின் பின்னும் பல பல அர்த்தங்கள் மறைந்திருக்கின்றன. சடங்குகள், சம்பரதாயங்களை கடைப்பிடிப்பது நமது காலாச்சரத்தை வலுவாக்குவதற்காக மட்டுமல்லாமல், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் வழிவகுக்கின்றது.

காலங்கள் செல்ல செல்ல சில வார்த்தைகள் மருவி வேறொரு வார்த்தையாக உருவெடுப்பதை போல, சில சடங்குகளும், சம்பிரதாயங்களும் என்று ஒவ்வொன்றாக அழிந்து கொண்டே வருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளைகாப்பு

வளைகாப்பு

வளைகாப்பு என்ற சடங்கு கணவன், பெற்றோர்கள் முன்னிலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு 5, 7, 9 ஆவது மாதங்களில் ஏதாவது ஒன்றில் நடத்தப்படுகிறது. முதலில் எல்லாம் பெண்ணை தாய்வீட்டிற்கு அழைத்து வந்து, வளைகாப்பு நிகழ்ச்சியை தாய் வீட்டில் செய்தார்கள். இப்போது கணவன் வீட்டில் வளைகாப்பு செய்து, பின்னர் தாய் வீட்டிற்கு பெண்ணை அனுப்பி வைக்கின்றனர்.

முள்ளம்பன்றியின் முள்

முள்ளம்பன்றியின் முள்

வளைகாப்பின் போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.

முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். "வகிடு" என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டு வைத்தால், அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் சீமந்தம் நடத்துகிறார்கள்.

பிரசவ பயம்

பிரசவ பயம்

கருவுற்ற பெண்ணுக்கு தனது பிரசவ காலம் நெருங்க நெருங்க மனதில் பயம் அதிகரிக்கிறது. அந்த பயத்தை போக்க அனுபவம் மிகுந்த தாய், அக்கா, அண்ணி, சித்தி, பெரியம்மா போன்றவற்கள் தங்களது அனுபங்களை சொல்லி தேற்றுகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த சடங்குகளை செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என சில பூஜைகளையும் சில இடங்களில் செய்கிறார்கள்.

பயந்தால் குழந்தைக்கு என்னவாகும்?

பயந்தால் குழந்தைக்கு என்னவாகும்?

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது பருவகாலத்தில், தாய் வாழும் சூழல், தாயின் மனநிலை, உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது. தாய் பயந்த சுபாவத்துடன் இருந்தால், பிறக்கும் குழந்தையும், எதற்கெடுத்தாலும் பயப்படும் குணத்தை கொண்டிருக்கும். எனவே கர்ப்பிணி பெண்களை மகிழ்விக்க இந்த சடங்குகள் நடத்தப்படுகிறது.

குழந்தையின் கேட்கும் திறன்

குழந்தையின் கேட்கும் திறன்

குழந்தையின் கேட்கும் திறன் அறிவியல் படி 20 ஆவது வாரத்தில் தொடங்குகிறது. அப்போது குழந்தை வெளியில் இருக்கும் சில சப்தங்களை கேட்க தொடங்குகிறது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியானது, அந்த குழந்தையை வரவேற்கும் விதமாகவும் நடத்தப்படுகிறது.

வளையல் ஓசை

வளையல் ஓசை

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பிற்கு, கண்ணாடி வளையல் தான் அணிவார்கள். கண்ணாடி வளையல் திருஷ்டியை கழிப்பதற்கும், தீய சக்திகளை அண்டவிடாமலும் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி கண்ணாடி வளையல் குழந்தைக்கு தாலாட்டாகவும் அமைகிறது!

அதுமட்டுமின்றி, அந்த காலத்தில் கழிப்பறைக்கு வெளியில் தான் செல்ல வேண்டும். இரவில் தனியாக சென்றால் கர்ப்பிணி பெண் பயம் கொள்வாள். அதுவே கண்ணாடி வளையல் அணிந்து சென்றால், வளையல் ஓசை கேட்டு, மற்றவர்கள் எழுந்து கர்ப்பிணி பெண்ணுடன் துணைக்கு செல்வார்கள்.

வளையல் உடைய வேண்டும்!

வளையல் உடைய வேண்டும்!

கர்ப்பிணி பெண்ணின் கரங்களில் இருக்கும் வளையல்கள் பிரசவத்திற்கு முன்னால் உடைய வேண்டும் என்று கூறுவார்கள், அதற்கு காரணம், கண்ணாடி வளையல் உடைய வேலை செய்ய வேண்டும் என்பதாகும். இதனால் சுகப்பிரசவம் ஏற்படும். உடற்பயிற்சி தேவை என்பதை அந்த காலத்திலேயே இப்படி சொல்லியிருக்கிறார்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Why we are celebrating bangle ceremony for pregnant women

Why we are celebrating bangle ceremony for pregnant women
Story first published: Thursday, August 3, 2017, 14:54 [IST]