For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் பொதுவான உபாதைகள்!!!

By Aruna Saravanan
|

கர்ப்பிணி பெண்களூக்கு பிரசவ காலம் என்பது மிக மிக மகிழ்ச்சியான செய்தி. ஒவ்வொரு பெண்களும் அனுபவிக்க வேண்டிய நிகழ்வு. ஒரு உயிர் தம்முள் வளர்கின்றது என்ற நினைப்பே ஒரு பெண்ணுக்கு பூரிப்பையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். அக்காலக் கட்டத்தில் தங்களது ஆரோக்கியத்தை நல்ல முறையில் கவனித்து கொள்ளுதல் அவசியம்.

கர்ப்பிணி பெண்களுக்கு பல வித உடல் உபாதைகள் வரும். இதற்கு காரணம் ஹார்மோன் மாற்றமே. வாந்தி, மயக்கம், சோர்வு, வீக்கம் போன்ற பல பிரச்சனைகள். இதற்கு ஒவ்வொருத்தரும் பல வேறுபட்ட காரணங்கள் கூறுகின்றனர். வீட்டில் பெரியவர்களிடம் கேட்டால் இதெல்லாம் பொதுவான பிரச்சனையே கவலை வேண்டாம் என்று கூறுவர்.

இந்த பிரச்சனைகளுக்காக பெண்கள் கவலை பட தேவையில்லை. எளிய முறையில் அவற்றை சரி செய்து விட முடியும். அப்படியும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை சந்திக்க வேண்டும். இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கான எளிய தீர்வை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாந்தி

வாந்தி

எல்லா கர்ப்பிணிகளுக்கும் வரும் ஒரு அடிப்படை பிரச்சனை வாந்தி. இருந்தாலும் இது அதிகமாக இருந்தால் மருத்துவரை அனுகவும்.

மார்னிங் சிக்னஸ்

மார்னிங் சிக்னஸ்

கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதால் மார்னிங் சிக்னஸ் ஏற்படுகின்றது. இது காலையில் மட்டும் இல்லாமல் அந்த நாள் முழுவதும் தொடர்கின்றது. இதை தவிர்க்க வேண்டுமெனில் அளவாக சாப்பிட வேண்டும். அதனுடன் வீட்டில் வெளிச்சமும் காற்றும் இருப்பது மிக மிக அவசியம்.

வீக்கம்

வீக்கம்

கர்ப்பிணி பெண்களுக்கு வரும் மற்றுமொரு பிரச்சனை வீக்கம். இது ஒவ்வொர பெண்களுக்கும் மாறு படும். இதை தவிர்க்க அதிக நேரம் நிற்க வேண்டாம். பொருத்தமான ஷூவை அணியவும். ஆரோக்கியமாக இருக்கலாம்.

அதிக உடல் பருமன்

அதிக உடல் பருமன்

கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் உடல் பருமன் ஏற்படுகின்றது. இது பொதுவே. இதனால் உணவு விஷயத்தில் கட்டுபாடு வைக்காமல் நன்றாக உண்ணுங்கள். இது உண்ண வேண்டிய நேரம்.

தூக்கமின்மை

தூக்கமின்மை

கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன் பிரச்சனை வருவதாலும் அதன் மாற்றத்தாலும் வரும் பல பிரச்சனைகளில் ஒன்று தூக்கமின்மை. இதை தவிர்க்க காப்பி, ஆல்கஹால் மற்றும் கொழுப்பு அடங்கிய உணவை தவிர்க்க வேண்டும்.

அயற்சி மற்றும் சோர்வு

அயற்சி மற்றும் சோர்வு

கர்ப்பிணிகளுக்கு அயற்சியும் சோர்வும் அதிகமாக இருக்கும். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கக் கூடும். இதை சமாளிக்க இரும்பு சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

முதுகு வலி

முதுகு வலி

உடம்பில் பாரம் அதிகரிப்பதால் முதுகு வலி கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகின்றது. பொருத்தமான காலணிகளை அணியவும், அதிக பளு உள்ள பொருட்களை சுமக்க வேண்டாம். இப்படி செய்வதால் வலி குறையும்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

இரண்டு மற்றும் மூன்றாம் காலங்களில் அடி வயிற்று வலி வருவது இயல்பே. இதற்காக பயம் வேண்டாம். வயிறு விரிவதால் இந்த வலி ஏற்படுகின்றது. குழந்தை வளர வளர வயிறும் வளார்கிறது அப்பொழுது இந்த வலி பொதுவே. இதற்கு மருத்துவரை அனுகுவது நல்லது.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

மெட்டபாலிக் மாற்றத்தால் கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டும். அதனுடன் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

கால் வலி

கால் வலி

கால் வலி அவதியால் பாடுபடும் பல கர்ப்பிணி பெண்களை காண முடியும். இதற்கு தீர்வு என்னவென்றால் வலி இருக்கும் இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின் காலை சற்று சுற்றி பயிற்சி செய்வதும் நல்லது. தூங்க செல்லும் முன் இந்த பயிற்சியை செய்தால் வலி இல்லாமல் நிம்மதியாக தூங்க முடியும்.

மூச்சு விட சிரமப்படுவது

மூச்சு விட சிரமப்படுவது

கர்ப்பிணி பெண்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகின்றது. அப்பொழுது பதட்டம் அடையாமல் ரிலாக்ஸாக அமரவும். பின்பும் சரியாக வில்லையென்றால் மருத்துவரை அணுகவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Pregnancy Problems

Giving birth to a child is indeed what every women carves for and this feeling is unmatched to any other pleasures of life. But with this bliss comes some inconveniences that are experienced by every women before becoming a mother. Some of the common pregnancy problems are as follows:
Desktop Bottom Promotion