For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா...?

By Boopathi Lakshmanan
|

வளைகாப்பு விழா இந்தியா போன்ற கலாச்சார மிக்க நாடுகளில் இன்னும் கர்ப்பிணி பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமது சமூதாயத்தின் நலன் கருதி தான் இருக்கும். இத்தகைய காரியங்கள் காப்பிணி பெண்ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லா வித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும். நீங்கள் முன்பே காப்பமாகி குழந்தையை பெற்றவர்களானாலும் நான் கூறும் செய்தி உங்களுக்கு பிரம்மிப்பாக தான் இருக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என்று ஆராய்சிசியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார் பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள். இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியானவை என்றும் கூறுகின்றனர்.

நீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ் காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செய்யப்படும் சம்பிரதாயங்களை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வளையல் விழா

வளையல் விழா

பிரசாந்த் மருத்துவமனையை சேர்ந்த மகப்பேறு இயல் மருத்துவரான கீதா பிரியா 'வளையல்களை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும் போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியை மட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணர முடியும் தன்மையை கொண்ட சிசு இத்தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்' என்று கூறுகிறார். இது தான் நமக்கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.

பிரசவ இடம்

பிரசவ இடம்

வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால் அப் பெண்ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரசத்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்

பயணம்

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவதற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வர முடியும். இது உடலுறவை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்

இசையின் அற்புதங்கள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொண்டிருந்தால் இந்த மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்க முடியும். இது சிசு கேட்கும் திறனை அதிகரிக்கும். மிகவும் அதிகமான மன அழுத்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந்த எடை கொண்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை

உணவு முறை

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப்போது நல்ல சத்தான உணவும் இதற்கு உதவும் என்று நம்புவோம். இந்த ஒரு காரியத்தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டும். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.

நெய் சாப்பாடு

நெய் சாப்பாடு

இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப காலப் பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல்லும் போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத்தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்படட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்

எந்த ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். இது ஒரு முக்கியமான ஆலோசனையாகும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Will Wearing Bangles Ease Delivery?

There are many other traditional functions that are associated with pregnant women. Out of the functions, bangle ceremony is considered as the most important. If you have also experienced this in your life, now there is surprising news for you.
Desktop Bottom Promotion