For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சிளங்குழந்தையை பராமரிப்பது எப்படி? புதிய தாய்களுக்கான டிப்ஸ்

புதிதாக தாயாக போகும் பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு டிப்ஸ்கள்

By Lakshmi
|

கருவுற்ற காலம் என்பது ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது. இந்த சமயத்தில் குழந்தைக்கு உடை வாங்குவது, பொம்மைகள் வாங்குவது என ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வோம். புதிய தாய்மார்கள் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் சற்று அதிக கவனம் செலுத்துவது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.நேரம் தவறாமல் பால் கொடுப்பதல்

1.நேரம் தவறாமல் பால் கொடுப்பதல்

குழந்தைக்கு நேரம் தவறாமல் பால் கொடுப்பது அவசியம். பச்சிளம் குழந்தைக்கு 2-3 மணிநேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்க வேண்டியது அவசியம். குழந்தை வளர தாய்பால் மிகவும் அவசியமாகிறது. ஒருநாளைக்கு 8 முதல் 12 முறை பால் கொடுக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் பாட்டிலில் பால் கொடுப்பவராக இருந்தால் 60 முதல் 90 மில்லி லிட்டர் அளவு பால் கொடுக்க வேண்டும்.

2.குழந்தைகளை குலுக்காதீர்கள்

2.குழந்தைகளை குலுக்காதீர்கள்

பிறந்த குழந்தையை விளையாட்டாகவும், கொஞ்சுவதற்காகவும் குலுக்குவது கூடாது. இது குழந்தையின் உட்பகுதிகளில் இரத்த கசிவை ஏற்படுத்தும்.

3. கைகளை கழுவுங்கள்

3. கைகளை கழுவுங்கள்

குழந்தைகளை தூக்குவதற்கு முன்பு ஒவ்வொருமுறையும், உங்கள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டியது அவசியம். பிறந்த குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே எளிதில் நோய் பரவும் வாய்ப்புகள் அதிகம்.

4. குழந்தையின் இருக்கை

4. குழந்தையின் இருக்கை

கார்கள் மற்றும் வண்டிகளில் குழந்தை பாதுகாப்பாகவும், வசதியாகவும் அமர்ந்துள்ளதா என்பதை ஒவ்வொரு முறையும் உறுதி செய்துகொள்ளுங்கள்

5. தூக்கம்

5. தூக்கம்

குழந்தை பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு 16 மணிநேர தூக்கம் அவசியம். ஒவ்வொரு தூக்க நேரமும் 2-4 மணிநேரங்கள் இருக்கலாம். அவ்வாறு தூங்கவில்லை என்றால் பயப்பட அவசியம் இல்லை. உங்கள் குழந்தை பசியாக இருக்கலாம், டையப்பரை மாற்ற வேண்டியதாக அல்லது செறிமான பிரச்சனையாக இருக்கலாம்.

அதே சமயம் குழந்தைக்கு 3 மணிநேரத்திற்கு ஒரு முறை பால் தரவேண்டியதும் அவசியம். குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தாலும் எழுப்பி பால் தர வேண்டும்.

6. டையப்பர்

6. டையப்பர்

டையப்பரில் இரண்டு வகைகள் உள்ளன. மீண்டும் உபயோகப்படுத்த கூடிய வகையிலான டையப்பர். ஒருமுறை மட்டுமே உபயோகிக்க கூடிய வகை டையப்பர்கள். இதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் கட்டாயமாக டையப்பரை ஒருநாளைக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறைகள் மாற்ற வேண்டியது அவசியம்.

டையப்பரால் குழந்தையின் தோல் சிவந்து காணப்பட்டால், ரேஷ் கீர்ம்கள் அல்லது ஆயில்மென்டை பயன்படுத்தவும்.

7. குளிக்க வைத்தல்

7. குளிக்க வைத்தல்

குழந்தை பிறந்த மூன்று வாரங்களுக்கு மிருதுவான பஞ்சு அல்லது துணியால் குழந்தையை துடைத்தால் போதும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இது போன்று செய்தால் போதும். நீங்கள் குழந்தையின் கழுத்து மற்றும் முகத்தை பால் குடித்ததும் துடைத்து விடலாம்.

குழந்தையை மிகவும் சூடான தண்ணீரிலோ அல்லது குளிர்ந்த தண்ணீரிலோ குளிக்க வைக்க கூடாது. குழந்தையை குளிக்க வைக்க பாத் டப்பை பயன்படுத்தலாம். குழந்தையை குளிக்க வைக்கும் முன்னர் தண்ணீரை உங்கள் கைகளில் ஊற்றி மிதமான சூட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

சுத்தமான துணிகளை குழந்தைக்கு பயன்படுத்துவது அவசியம்.

8. நகங்களை வெட்டிவிடுங்கள்

8. நகங்களை வெட்டிவிடுங்கள்

குழந்தையின் நகங்கள் வேகமாக வளரக்கூடியவை. இது குழந்தை கை, கால்களை அசைக்கும் போது கீறல்களை உண்டாக்கும். எனவே அடிக்கடி குழந்தையின் நகங்களை வெட்டி விட வேண்டியது அவசியம்.

முதல் மாதத்தில் குழந்தைகளுக்கு சாக்ஸ் போட்டு விடலாம். ஆனால் அதன் பிறகு கை, கால்களை அசைக்கும் போது சாக்ஸ் நழுவி விடும் என்பதால், நகங்களை வெட்ட வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

baby care for new parents

here are the baby care tips for new parents
Story first published: Monday, May 29, 2017, 14:54 [IST]
Desktop Bottom Promotion