பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பான மன இறுக்கத்தால் நிறைய பெண்கள் அவஸ்தைப்படுவார்கள். இது கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னும் தான்.

இப்படி பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைக் குறைக்க ஒருசில உணவுகள் உதவும். அந்த உணவுகளை பெண்கள் தங்களது பிரசவத்திறகு பின் சாப்பிட்டு வந்தால், மன இறுக்கத்தில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாதாம்

பாதாம்

பாதாமில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளையில் செரடோனின் என்னும் ஹார்மோனின் சுரப்பைத் தூண்டி, மனதை அமைதியுடனும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும். எனவே பாதாமை பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிடுவது நல்லது.

அவகேடோ

அவகேடோ

அவகேடோ என்னும் வெண்ணெய் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை மூளைச் செல்களுக்கு ஊட்டமளித்து, பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைத் தடுக்கும்.

மீன்

மீன்

மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பது சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியமில்லை. மேலும் மீனில் வைட்டமின் ஈ உள்ளதால், இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைச் சீராக்கும்.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழமும் மன இறுக்கத்தைக் குறைக்கும். எனவே சற்று டென்சனாக இருக்கும் போது, வாழைப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள பொட்டாசியம் மனநிலையை மேம்படுத்தும்.

தேங்காய்

தேங்காய்

தேங்காய் அல்லது இளநீரை பெண்கள் குடித்து வந்தாலும், மன இறுக்கம் தடுக்கப்படும். ஏனெனில் இதிலும் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் ஏராளமான அளவில் உள்ளது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து வளமாக உள்ளது. இது மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, செரடோனின் உற்பத்தி குறைவதைத் தடுக்கும்.

ஆளி விதை

ஆளி விதை

ஆளி விதையில் புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன இறுக்கத்தைத் தடுக்கும் உட்பொருட்கள் ஏராளமாக உள்ளது.

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ்

சோயா பீன்ஸ் பிரசவத்திற்கு பின் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று. ஏனெனில் இதில் உள்ள ஆல்பா-லினோலினிக் அமிலம், மன இறுக்கத்தைத் தடுக்கும்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளும் மன இறுக்கத்தைத் தடுக்கும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். இவைகள் மூளைச் செல்களுக்கு நல்ல பாதுகாப்பை வழங்குகிறது.

நெய்

நெய்

பிரசவத்திற்கு பின் பெண்கள் தங்களின் உணவில் நெய்யை சேர்த்து வருவதன் மூலம், அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன இறுக்கத்தைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Prevent Postnatal Depression

Here are some foods to prevent postnatal depression. Read on to know more...
Story first published: Saturday, October 1, 2016, 17:53 [IST]
Subscribe Newsletter