For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செல்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்... அதிலிருந்து விலக்கி வைப்பது எப்படி?

செல்போனை பெரியவர்கள் அதிகம் உபயோகிப்பதே தவறு என்று கூறும் இந்த காலக்கட்டத்தில், குழந்தைகள் செல்போனிற்கு மிகவும் அடிமையாகி விட்டனர் என்பது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம்.

|

இன்றைய காலக்கட்டத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மொபைல் போன் இல்லாமல் இருக்க முடிவது கிடையாது. ஷாப்பிக் முதல் வங்கி சேவைகள் அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே செய்திட முடிவதால் சோம்பேறியாக மாறியது மட்டுமின்றி, இயற்கையுடன் ஒன்றி வாழ மறந்து விட்டோம் என்று கூட சொல்லலாம். அவசரத்திற்கு உதவ வந்த செல்போன், தற்போது இன்றியமையாததாக மாறியதன் காரணம் நம்முடைய சோம்பேறித்தனம் தான்.

Reason Why Parents Must Keep Mobile Phones At Safe Distance From Their Kids In Tamil

செல்போனை பெரியவர்கள் அதிகம் உபயோகிப்பதே தவறு என்று கூறும் இந்த காலக்கட்டத்தில், குழந்தைகள் செல்போனிற்கு மிகவும் அடிமையாகி விட்டனர் என்பது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம். அதிலும், பிறந்தது முதலே குழந்தைகளை செல்போன் கொடுத்து பழக்குவது என்பது, உங்கள் குழந்தைக்கு நீங்களே கெட்டது செய்யும்படியான ஒரு செயல். அதற்கு உதாரணமாக நிஜத்தில் நிகழ்ந்த ஒரு துரிய சம்பவத்தைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செல்போன் அபாயம்

செல்போன் அபாயம்

சமீபத்தில் பரேலியில் நடந்த ஒரு சம்பவத்தில், ஒரு தம்பதியினர் தங்கள் 8 மாத குழந்தையை இழந்துள்ளனர். எப்போதும் போல அவர்கள் மொபைல் போனை சார்ஜ் போட்டு, குழந்தை தூங்கும் அதே கட்டிலின் மீது வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் அந்த மொபைல் போன் வெடித்து தீப்பற்றி எரிந்ததில், 8 மாத குழந்தை பலத்த தீக்காயம் அடைந்து உயிரிழந்தது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், மற்ற பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. குறிப்பாக, கைக்குழந்தைகள், சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்திருப்போர் செல்போனை பயன்படுத்தும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்காதீர்கள்

குழந்தைகளிடம் செல்போனைக் கொடுக்காதீர்கள்

செல்போன்களில் இருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சுகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட ஆபத்தானவை என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த கதிர்வீச்சுகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், மிகச் சிறிய குழந்தைகளுக்கு அருகில் மொபைல் போன்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல், செல்போன் ஸ்கிரீன்களில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள், பேட்டரி வெடிக்கும் அபாயம், போன்றவற்றை பரேலி சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்தக் காரணங்கள் உங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நீங்கள் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களைப் பற்றி எடுத்துரைக்கின்றன.

குழந்தைகளிடம் ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது?

குழந்தைகளிடம் ஏன் செல்போன் கொடுக்கக்கூடாது?

கதிர்வீச்சு அபாயம்

செல்போன் போன்ற சாதனங்களிலிருந்து வெளிவரும் மின்காந்த புலங்களின் (EMFs) நீண்டகால வெளிப்பாடு மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. உடற்கூறியல் மற்றும் உடலியல் வேறுபாடுகள் காரணமாக குழந்தைகள் இந்த ஆபத்தால் மேலும் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். அனைத்து செல்போன்களும் ரேடியோ அதிர்வெண் கதிர்வீச்சு எனப்படும் ஒரு வகை EMF கதிர்வீச்சை வெளியிடுகின்றன. சில சமயங்களில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு என்றும் இவை குறிப்பிடப்படுகிறது. இந்த கதிர்வீச்சுகள் அனைத்து மனிதர்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும். அதிலும் குழந்தைகளுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. 2008 ஆம் ஆண்டு இயற்பியல் மருத்துவம் மற்றும் உயிரியலில் வெளியிடப்பட்ட ஆய்வில் காட்டப்பட்டுள்ளபடி, குழந்தைகளின் மூளை பெரியவர்களின் மூளையை விட அதிக அளவில் கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. அந்த ஆய்வில், குழந்தைகளின் மூளை திசு பெரியவர்களின் மூளையை விட இரண்டு மடங்கு கதிர்வீச்சை உறிஞ்சுகிறது. இதுவே, அதிகப்படியான பாதிப்பிற்கு காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

செல்போன் ஸ்கிரீனின் ஒளி

செல்போன் ஸ்கிரீனின் ஒளி

மனிதர்கள் மீது நீல ஒளியின் தாக்கங்கள், குறிப்பாக கண் ஆரோக்கியம், தூக்கம், அறிவுதிறன் மற்றும் நடத்தை ஆகியவற்றின் மீது ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நீல ஒளி என்று வரும்போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. குறிப்பாக நீல ஒளிக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் குழந்தைகள். ஏனெனில், குழந்தையின் கண்ணின் லென்ஸ்கள் பெரியவர்களின் லென்ஸைப் போல திறம்பட நீல ஒளியை வடிகட்டாது. 25 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களை விட குழந்தைகளின் விழித்திரை 45% அதிக நச்சு நீல ஒளியை உறிஞ்சுவதாகவும், குழந்தைகள் பெரும்பாலும் டிஜிட்டல் சாதனங்களை தங்கள் முகங்களுக்கு நெருக்கமாக வைத்திருப்பதாலே இது நிகழ்வதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வெடிக்கும் அபாயம்

வெடிக்கும் அபாயம்

மொபைல் போன்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் பல நடந்துள்ளன. மொபைன் வெடிப்பதற்கு பொதுவாகக் கூறப்படும் காரணங்கள் மோசமான பேட்டரிகள் மற்றும் சார்ஜர்கள் அல்லது ஷார்ட் சர்க்யூட்கள். இருப்பினும், எந்த காரணமும் இல்லாமல் தொலைபேசிகள் வெடித்த நிகழ்வுகளும் உள்ளன. இதுபோன்ற ஒரு சம்பவம், மொபைன் போனை பேண்ட் பாக்கெட்டில் ஒரு பையன் வைத்திருந்த போது வெடித்துள்ளது. எனவே, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளிடமோ மற்றும் குழந்தைகளை சுற்றியோ செல்போன் இருப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

முடிவுரை

முடிவுரை

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவே அனைத்தையும் பார்த்து பார்த்து செய்கிறார்கள். குழந்தைகள் கேட்கும் பொருளை எல்லாம் தங்கள் சக்திக்கு மீறியும் வாங்கி கொடுக்கிறார்கள். ஆனால், அதற்காக குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றை வாங்கி கொடுப்பதோ, ஆசைப்படுகிறார்கள் என்று செய்து கொடுப்பதோ தவறான ஒன்றாக முடிகிறது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களை செல்போன்களிடம் இருந்து முடிந்தவரை விலக்கி வைக்க முயல்வதே இதுபோன்ற அபாயங்களில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான ஒரே வழி. செல்போனை தவிர்த்து, விளையாட்டின் மீது குழந்தைகளை கவனம் செலுத்த செய்வது ஒன்றே குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்விற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason Why Parents Must Keep Mobile Phones At Safe Distance From Their Kids In Tamil

In this article, we shared about why parents must keep mobile phones at safe distance from their kids. Read on...
Story first published: Saturday, September 24, 2022, 22:09 [IST]
Desktop Bottom Promotion