For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பாலோடு இந்த பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கவே கூடாதாம்..ஏன் தெரியுமா?

உங்கள் குழந்தையின் குடல் உணர்திறன் கொண்டது. உங்கள் குழந்தையின் நல்ல குடல் ஆரோக்கியத்திற்காக இந்த ஆரோக்கியமற்ற பால் கலவைகளை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

|

குழந்தைகள் எப்போதும் வண்ணமையமான, இனிப்பான மற்றும் பொறிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளையே அதிகம் சாப்பிட விரும்புகிறார்கள். அவர்கள் ஆரோக்கியமான உணவில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் உங்கள் குழந்தைகளின் நல்ல ஆரோக்கியத்தைத் தவிர வேறு எதையும் பெரிதாக விரும்ப மாட்டீர்கள் என்பது தெரியும். மேலும், உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய நீங்கள் முயற்சி செய்யலாம். சில நேரங்களில் அது ஒரு பெரிய கிளாஸ் பால், ஆரோக்கியமான சாலட் அல்லது பழங்கள் நிறைந்த கிண்ணமாக இருக்கலாம். இருப்பினும், சில சமயங்களில் நாம் சில உணவுகளை அவர்களுக்குக் கொடுக்கும் கலவையானது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

Avoid giving these milk combinations to your kids for their health’s sake in tamil

பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்ற உணவு சேர்க்கைகளை கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். உதாரணமாக, பழங்கள் மற்றும் பால் கலவைகள் எப்போதும் ஒன்றாக சேர்வது நல்லதல்ல. இவை குழந்தைக்கு உடனடி உணவு விஷமாகவும், கடுமையான வயிற்று வலி, செலியாக் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு கொடுக்காமல் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பால் கலவைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால் மற்றும் பழங்கள் கலவை

பால் மற்றும் பழங்கள் கலவை

உங்கள் குழந்தையின் குடல் உணர்திறன் கொண்டது. உங்கள் குழந்தையின் நல்ல குடல் ஆரோக்கியத்திற்காக இந்த ஆரோக்கியமற்ற பால் கலவைகளை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். நிபுணர்களின் கூற்றுப்படி, இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள 3 உணவு சேர்க்கைகளை குழந்தைகளுக்கு தாய்மார்கள் எப்போதும் கொடுக்காமல் தவிர்க்க வேண்டும்.

பால் மற்றும் திராட்சை

பால் மற்றும் திராட்சை

உங்கள் குழந்தைகள் திராட்சை சாப்பிடும் போது, அந்த நேரத்தில் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். திராட்சைப்பழத்தில் உள்ள பழ அமிலம் மற்றும் வைட்டமின் சி உடன் தொடர்பு கொள்ளும்போது பால் புரதம் கெட்டியாகி, இரைப்பை குடல் வலி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துகிறது. ஆதலால், உங்கள் குழந்தைக்கு திராட்சை மற்றும் பாலை ஒன்றாக சேர்த்து கொடுக்க வேண்டாம்.

பால் மற்றும் முலாம்பழம்

பால் மற்றும் முலாம்பழம்

பாலில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது மற்றும் இது புரதம், கால்சியம் நிறைந்த உணவாகவும் இருக்கிறது. நீங்கள் தர்பூசணி, மற்றும் முலாம்பழம் சாப்பிட்டு ஒரே நேரத்தில் பால் குடித்தால், தர்பூசணியில் உள்ள அமிலம் பாலில் உள்ள புரதத்தை பிணைக்கக்கூடும். இதனால், பால் பெரும்பாலும் தயிராக புளிக்க வைக்கப்படும். இதனாலேயே இந்த உணவுக் குழுக்களை ஒன்றாக உட்கொண்ட பிறகு உங்கள் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகலாம்.

பால் மற்றும் சிட்ரிக் பழங்கள்

பால் மற்றும் சிட்ரிக் பழங்கள்

ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃபுரூட், தக்காளி மற்றும் புளி போன்ற சிட்ரிக் உணவுகளில் வைட்டமின் சி உள்ளது. மேலும் இந்த பழங்கள் பாலை தயிராக்க வைக்கிறது. ஆதலால், இரண்டு உணவுகளுக்கும் இடையில் குறைந்தது ஒரு மணி நேர இடைவெளியை வைத்திருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் குழந்தைக்கு இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிட கொடுக்காதீர்கள்.

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

உங்கள் குழந்தைகளுக்காக வீட்டில் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்திகளை தயாரிக்கும் போது இந்த விதிகளை எப்போதும் மனதில் வைத்திருங்கள். ஆர்கானிக் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு சாறு தயாரிக்கவும். காய்கறிகள் அல்லது பால் பொருட்களுடன் பழங்களை ஒன்றாக கலக்க வேண்டாம். ஒரு நேரத்தில் ஒரு பழச்சாறு மட்டுமே தயாரிக்கவும். பழச்சாறுகளில் அதிக சர்க்கரை சேர்க்கமால் இருப்பது நல்லது. பழங்களில் பச்சை அல்லது சிவப்பு ஆப்பிள்கள், ஆரஞ்சு, அன்னாசி, தர்பூசணி, எலுமிச்சை, திராட்சை, கொய்யா போன்றவற்றை மற்ற உணவுக் குழுக்களுடன் கலக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில், குழந்தைகளுக்கு பல நேரங்களில் ஒவ்வாமை பிரச்சனை ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Avoid giving these milk combinations to your kids for their health’s sake in tamil

Here we are talking about the Avoid giving these milk combinations to your kids for their health’s sake in tamil.
Story first published: Wednesday, February 1, 2023, 15:22 [IST]
Desktop Bottom Promotion