உங்கள் குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா? இத செய்ங்க... தானா சாப்பிடுவாங்க...

Posted By: suganthi rajalingam
Subscribe to Boldsky

தினமும் உங்கள் வீட்டில் ஒரு வெஜிடபிள் போரே நடக்குதா. ஆமாங்க காய்கறிகள் பிடிக்காமல் உங்கள் குழந்தைகள் ஓடி ஒழிந்து கொள்கிறார்களா. எவ்வளவு காலம் துரத்தி துரத்தி ஊட்டுவீங்க. சாப்பாட்டுக்குள் மறைத்து, விளையாட்டு காட்டி ஊட்டும் பழைய கதைகள் எல்லாம் இப்போது சாத்தியமாகாது. இப்ப இருக்கிற குழந்தைகளின் உணவு முறையே மாறி விட்டது. நொறுக்கு தீனிகளும், பீட்சா, சாக்லெட், பர்கர் என்று குழந்தைகளை சுற்றி சுற்றி வரும் உணவுகளுக்கு மத்தியில் இது சாத்தியமாகுமா. கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புது ட்ரிக்ஸ்

புது ட்ரிக்ஸ்

கண்டிப்பாக முடியாது உங்கள் பழைய ட்ரிக்ஸ் எல்லாம் வேலைக்கே ஆகாது. இப்ப இருக்கிற குழந்தைகளின் காய்கறிகள் போரை திருத்தணும்னா கண்டிப்பாக நாங்கள் சொல்லும் வழிகளை பின்பற்றுங்க. அப்புறம் பாருங்க உங்கள் குழந்தைகள் காய்கறிகளுடன் நட்பாகி விடுவார்கள். இந்த ட்ரிக்ஸ்கள் கண்டிப்பாக உங்கள் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும். உங்களுக்கும் காய்கறிகளை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிக்கும் வேலை இனி இருக்காது. உங்க கிட்ஸ் இனி வெஜ் லவ்வர் ஆகிவிடுவாங்க.

பட்டர் ஸ்டைல்

பட்டர் ஸ்டைல்

பெரும்பாலான குழந்தைகள் கீரை, பிரக்கோலி போன்றவற்றை வெறுப்பதற்கு காரணம் குழந்தைகளின் நாவின் சுவை மொட்டுகள்அதன் கசப்பு தன்மைக்கு மிகவும் சென்ஸ்டிவ் ஆக இருக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே குழந்தைகள் இந்த மாதிரியான கசப்பு உணவிலிருந்து விலகிச் செல்கிறார்கள். ஆனால் இந்த உணவுகளில் கால்சியம், பாலிபினோல், ஃப்ளோனாய்டுகள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் அடங்கி இருப்பதால் தாய்மார்களாகிய நாம் தான் இதன் கசப்பு சுவையை மறைத்து கொடுக்க வேண்டும். எனவே அதற்கு பட்டர் ஸ்டைல் சிறந்தது என்று கூறுகிறார். 1 டேபிள் ஸ்பூன் பட்டருடன் அவித்த உருளைக்கிழங்கு, பச்சை பீன்ஸ், ப்ரக்கோலி, கீரைகள் இவற்றை சேர்க்கும் போது அதன் கசப்பு சுவை மாறி குழந்தைகளுக்கு சுவையான உணவாக மாறுகிறது. மேலும் காய்கறிகளில் உள்ள விட்டமின் ஏ, ஈ மற்றும் டி3 போன்ற அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை குழந்தைகளின் உடல் உறிஞ்சி கொள்ளவும் பட்டர் உதவுகிறது. நல்ல கொழுப்பு மற்றும் உடல் எடை பராமரிப்பையும் சேர்ந்தே தருகிறது.

நல்ல பசி பிறகு சாப்பாடு

நல்ல பசி பிறகு சாப்பாடு

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்.அதைத் தான் நாம் காய்கறிகள் விஷயத்திலும் பின்பற்ற வேண்டும். உதாரணமாக "என் குழந்தை பள்ளியில் இருந்து வரும் போதே மிகுந்த பசியுடன் வந்தால் அவளுக்கு கேரட், செலரி, வெள்ளரிக்காய் சாலட் தயாரித்து அதில் மிளகாய் தூள் தூவி கொடுப்பேன். ஆனால் அவள் அதை விரும்பவில்லை என்றாலும் தற்சமயம் பசிக்கு அதை கொஞ்சமாவது எடுத்து சாப்பிடுவாள்" என்று ஒரு இல்லத்தரசி குறிப்பிடுகிறார்.

குழந்தைகளே தேர்ந்தெடுத்தல்

குழந்தைகளே தேர்ந்தெடுத்தல்

நீங்கள் சூப்பர் ஸ்டோர் போன்ற கடைகளில் காய்கறிகளை வாங்காமல் உங்கள் குழந்தைகளை நேரடியாக அறுவடை செய்து வரும் ப்ரஷ்ஷான காய்கறி மார்க்கெட்டிற்கு அழைத்து செல்லுங்கள். இந்த காய்கறிகள் மிகுந்த சுவையோடு பார்ப்பதற்கும் உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்கும். அவர்களையே காய்கறிகளை தேர்வு செய்ய விருப்பப்படுத்துங்கள்.

அலங்கரியுங்கள்

அலங்கரியுங்கள்

பொதுவாக குழந்தைகள் கண்களை கவரும் விதத்தில் கலர்புல்லா அலங்கரிக்கப்பட்ட உணவுகளையே விரும்புவார்கள். "என் 7-12 வயதுள்ள மூன்று குழந்தைகளும் உணவை பரிமாறும் அழகைத் தான் விரும்புவார்கள்" என்று ஊட்டச்சத்து நிபுணரும் மற்றும் கிரேக்க யோகார்ட் கிச்சன் எழுத்தாளருமான டோபி அமிடோர் என்பவர் கூறுகிறார். ஆனால் வெளியில் கடைகளில் அலங்கரிக்கப்படும் உணவுகள் மோனோசோடியம் குளூட்டமேட், சோயா எண்ணெய் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்களை கொண்டு அலங்கரிக்கின்றன. எனவே கூடிய வரை குழந்தைகளுக்கு உணவை வீட்டிலேயே தயாரித்து அவர்களுக்கு பிடித்தமான விதத்தில் பூண்டுப் பொடி, வெங்காயப் பொடி, உலர்ந்த வெந்தயப் பொடி, கோஷர் உப்பு, சாஸ், சிவப்பு மிளகாய், வெங்காயத் தாள் மற்றும் தயிர் இவற்றை கொண்டு அலங்கரித்து கொடுங்கள்.

நண்பர்களுடன் சாப்பிடுதல்

நண்பர்களுடன் சாப்பிடுதல்

அன்றைய காலத்தில் பின்பற்றிய கூட்டாஞ்சோறு பழக்கத்தை குழந்தைகளிடம் கொண்டு வாருங்கள். அவர்கள் நண்பர்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து சாப்பிட சொல்லுங்கள். அவர்கள் சாப்பிடும் போது உங்கள் குழந்தைகளும் அடம் பிடிக்காமல் காய்கறிகளை சாப்பிடுவார்கள். அதன் சுவையை உணர முற்படுவார்கள். இந்த நட்பு வட்டார அழுத்தம் அவர்களை சாப்பிட தூண்டும்.

வீடியோ காட்சிகள்

வீடியோ காட்சிகள்

உங்கள் குழந்தைகளை டிவி முன்னிலையில் உட்கார வைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் பற்றிய வீடியோக்களை போட்டு அவர்களை உற்சாகப்படுத்தி சாப்பிட வைக்கலாம் என்று சிபூல்லோ என்பவர் கூறுகிறார். "Copy-Kids Eat Fruits and Vegetables" என்ற வீடியோ காட்சிகள் 12 பாகங்களையும் 12 காய்கறிகள் மற்றும் பழங்களை பற்றியும் கூறுகிறது.

தேர்ந்தெடுக்க சொல்லிக் கொடுங்கள்

தேர்ந்தெடுக்க சொல்லிக் கொடுங்கள்

குழந்தைகள் காய்கறி மார்க்கெட்டில் நல்ல காய்கறிகளை பார்த்து தேர்ந்தெடுக்க சொல்லிக் கொடுங்கள். நீங்கள் கூறும் உற்சாகமான வார்த்தைகள் அவர்களுக்கு காய்கறிகள் மீதான விருப்பத்தை அதிகரிப்பதோடு உண்பதற்கான ஈடுபாட்டையும் அதிகரிக்கும்.

ஒப்பந்தம் பேசுதல்

ஒப்பந்தம் பேசுதல்

இரண்டு காய்கறிகளை கொடுத்து அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய சொல்லலாம். இரவு உணவிற்கு ப்ரக்கோலி அல்லது கேரட் எது வேண்டும் என்று அவர்களிடம் கேட்கும் போது கண்டிப்பாக அவர்கள் ஒன்றை தேர்வு செய்வார்கள். விருப்பத்தை அவர்களிடம் கொடுக்கும் போது அவர்களின் தேர்வும் நிச்சயமாகிறது.

முன் மாதிரியாக இருங்கள்

முன் மாதிரியாக இருங்கள்

நீங்கள் ஆரோக்கியமான உணவு சாப்பிடுவதில் உங்கள் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருங்கள். அவகேடா முதலிய பழங்களை நாமே வெறுத்து ஒதுக்கும்போது அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முன் அமர்ந்து நீங்கள் அதை ரசித்து சாப்பிட ஆரம்பியுங்கள். அவர்களும் உங்களுடன் சேர்ந்து விருப்பமாக சாப்பிடுவார்கள்.

பசியை பயன்படுத்தி கொள்ளுங்கள்

பசியை பயன்படுத்தி கொள்ளுங்கள்

குழந்தைகள் சாப்பிட உட்காரும் போது உணவிற்கு முன்பு வண்ணமயமான காய்கறிகளை சாஸ் உடனோ அல்லது ஹம்மஸ் ஆகவோ செய்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள். கண்டிப்பாக அவர்கள் பசிக்கு அதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் அதை கண் கவரும் விதத்தில் பரிமாறும் போது அவர்கள் அதை விரும்புவார்கள். காய்கறிகளுக்கு பிறகு அவர்களுக்கு உணவை கொடுங்கள் என்று ஷாப்பிரோ கூறுகிறார்.

நொறுக்கு தீனிகளை தவிருங்கள்

நொறுக்கு தீனிகளை தவிருங்கள்

பகல் நேரங்களில் குழந்தைகள் அதிகமாக நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதை தவிருங்கள். இதனால் அவர்கள் சாப்பிடும் போது பசி ஏற்பட்டு காய்கறிகள் மற்றும் உணவை முழுவதும் சாப்பிடுவார்கள். எனவே இந்த மாதிரியான சிறிய அழுத்தத்தை அவர்களுக்கு கொடுங்கள் என்று ஷாப்பிரோ கூறுகிறார்.

குட்டி செஃப் ஆக்குங்கள்

குட்டி செஃப் ஆக்குங்கள்

என் இரகசிய விஷயங்களில் ஒன்று என் குழந்தைகளை சமையலில் ஈடுபடுத்திக் கொண்டு இருப்பது" என்று ஊட்டச்சத்து நிபுணரும், ஆரஞ்சு கவுண்டி உரிமையாளருமான மைக்கேல் லாய் கூறுகிறார். எப்பொழுதும் என் மூன்று குழந்தைகளும் என்னுடன் இணைந்து க்ரீன் ஸ்மூத்தி, ப்ரஸ்ஸல்ஸ் முளைகளை கொண்டு ஆலிவ் ஆயில், உப்பு மற்றும் மிளகு சேர்த்து வதக்குவது போன்ற வேலைகளில் எனக்கு உதவியாக இருப்பர். இதன் மூலம் அவர்களே சமைப்பதால் காய்கறிகள் மீதான விருப்பமும் அவர்களுக்கு அதிகரிக்கிறது என்று கூறுகிறார்.

காய்கறிகள் கொண்டாட்டம்

காய்கறிகள் கொண்டாட்டம்

எப்படி நாம் பண்டிகையின் போது உணவுக் கொண்டாட்த்தில் ஈடுபடுகிறமோ அதே மாதிரி ஒரு காய்கறி கொண்டாட்டத்தை ஏற்படுத்துங்கள். ஒரு மேஜை அதன் மேல் முழுவதும் வண்ணமயமான காய்கறிகள், அழகான தட்டுகளின் வரிசை, ஸ்பூன்கள் என்று அடுக்கி வையுங்கள். காய்கறிகளை கொண்டு வித விதமான உருவங்கள் மற்றும் வடிவங்களை உருவாக்கி குழந்தைகளை கவரும் விதத்தில் வையுங்கள். அவர்களையும் அதைச் செய்ய உற்சாகப்படுத்துங்கள். இந்த முறை கண்டிப்பாக அவர்கள் காய்கறிகளை விரும்பி உண்ண உதவும்.

கூழ் வடிவில் கொடுங்கள்

கூழ் வடிவில் கொடுங்கள்

3-5 வயதை உடைய குழந்தைகள் காய்கறிகளை விரும்புவதோடு கூழ் வடிவ காய்கறி அமைப்பை அதிகமாக விரும்புவதாக அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வானது தெரிவிக்கிறது. 1/2 அவகேடா பழத்துடன், கீரை ஒரு கப், வாழைப்பழம் பாதி, 1/4 கப் பூசணி, 1/2 கப் பாதாம் பால், தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்மூத்தி மாதிரி ரெடியாக்கி கொடுக்கலாம். காய்கறி சூப், காய்கறி கூழ், க்ரீம் வடிவில் கொடுக்கும் போது குழந்தைகள் அதை விரும்புவார்கள்.

வற்புறுத்த வேண்டாம்

வற்புறுத்த வேண்டாம்

ஒரு சில காய்கறிகளின் சுவை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை வற்புறுத்தாதீர்கள். காய்கறிகளை உணவுடனோ அல்லது வேறு ஒரு வழியிலோ அவர்களை வற்புறுத்தாமல் கொடுங்கள்.

அம்மாக்களின் தந்திரங்கள்

அம்மாக்களின் தந்திரங்கள்

உங்கள் குழந்தைகள் சிக்கன் சூப் விரும்பி சாப்பிடுவார்கள் என்றால் அதனுடன் காய்கறிகளை சேர்த்து கொடுக்கலாம். "ஒவ்வொரு நாள் வெள்ளிக் கிழமையும் கோழி சூப்புடன் பர்னிப்ஸ், கோசுக் கிழங்கு, காரட், காலி பிளவர், வெங்காயம் மற்றும் செலரி இவைகளை சேர்த்து தயாரித்து என் குழந்தைகளிடம் கொடுப்பேன். மேலும் இதை வடிகட்டி கொடுக்கும் போது அவர்கள் இந்த காய்கறிகளை பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் அதன் ஊட்டச்சத்து முழுவதையும் அவர்கள் தினந்தோறும் பெறுகின்றனர். எனவே இந்த மாதிரியான தந்திரங்களை அம்மாமார்கள் கடைபிடிக்க வேண்டும் "என்று அமிடோர் கூறுகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Tricks to Get Your Kids to Eat Vegetables

To help you turn your veggie loather into a veggie lover— without a knockdown-dragout- battle-of-the-broccoli—Eat This, Not That! checked in with a group of nutrition experts to see what they’ve learned through trial and error.
Story first published: Monday, March 26, 2018, 11:40 [IST]