For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் உணவுகள்!

|

தற்போது காலநிலை மோசமாக உள்ளதால், குழந்தைகள் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் அடிக்கடி அவஸ்தைப்படக்கூடும். உங்கள் குழந்தை இதுப்போன்று அடிக்கடி ஏதேனும் உடல்நல கோளாறால் அவஸ்தைப்பட்டால், குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

மேலும் நீங்கள் உங்கள் குழந்தைக்கு போதிய சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுப்பதில்லை என்பதற்கான அறிகுறியும் கூட. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சில உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது. அந்த உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயிர்

தயிர்

தயிரில் உள்ள புரோபயோடிக்ஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். மேலும் ஆய்வுகளில் தயிரை உணவில் அதிகம் சேர்க்கும் குழந்தைகளை விட தயிர் சாப்பிடாத குழந்தைகள் அடிக்கடி உடல்நல பிரச்சனையால் அவஸ்தைப்படுவதாக தெரிய வந்துள்ளது.

கேரட்

கேரட்

கேரட்டில் கரோட்டினாய்டு உள்ளது. மேலும் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு கேரட்டை அடிக்கடி கொடுத்து வாருங்கள்.

பூண்டு

பூண்டு

பூண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும். மேலும் இது இரத்த வெள்ளையணுக்களின் அளவை அதிகரிக்கும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் நார்ச்சத்து, பைட்டோ கெமிக்கல் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவை.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள், சுவாச பிரச்சனைகளைத் தடுக்கும். ஒருவேளை குழந்தைகளுக்கு அலர்ஜி இருந்தால், வால்நட்ஸைக் கொடுக்காதீர்கள்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

அனைத்து வகையான பெர்ரிப் பழங்களும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. பெர்ரிப் பழங்களில் வைட்டமின்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமான அளவில் உள்ளது.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள் குடல் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும் அதிகரிக்கும். ஆகவே உங்கள் குழந்தைகளின் அன்றாட உணவில் சிறிது பருப்புக்களை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

முட்டை

முட்டை

குழந்தைகளுக்கு முட்டை மிகவும் சிறப்பான ஓர் காலை உணவு. இதில் உள்ள புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Boost Immunity In Kids

Are there any specific foods for immunity in kids? Yes, there are some foods for kids immunity and it is good to feed your kid such foods regularly.
Story first published: Thursday, September 1, 2016, 17:18 [IST]
Desktop Bottom Promotion