For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அழகான அம்மாவாக இருப்பது எப்படி?

By Maha
|

பெண்கள் இளமையில் இருக்கும் அழகை, திருமணம் முடிந்தவுடன் கவனிக்க தவறிவிடுகின்றனர். அழகிற்கு வயதுவரம்பு இல்லை. அழகு என்பது நம் தோற்றத்தில் நம்மை மாற்றி அதன் மூலம் நமக்கு நம்பிக்கையை கொடுக்கும் ஒரு தந்திரம். ஆதலால் திருமணம் முடிந்து ஒரு அம்மாவான பின் நாம் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எப்படி கவனித்து கொள்கிறோமோ, அதே போல் நம்மை நாம் கவனித்து கொள்வது மிக மிக அவசியம்.

வேலைக்கு சென்றாலாவது நம்மை நாம் அழகுப்படுத்தி கொண்டு வெளியில் செல்லலாம். ஆனால் வீட்டில் இருக்கும் நமக்கு எதற்கு இந்த அழகு என்று இல்லாமல், வீட்டில் வேலையின்றி இருக்கும் நேரத்தில் நம்மை எப்படி அழகாக வைத்து கொள்வது என்று யோசித்து, அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஒருசில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, பின்பற்றி வாருங்கள்.

How to Be a Classy Mom
1. சுகாதாரத்தின் மேல் கவனம் கொள்ளுதல் ஒரு அடிப்படையான விஷயம். அது அவர்களின் கம்பீரத்தை உணர்த்தும். முதலில் தினமும் குளிக்கும் பழக்கத்தை தொடர்வது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு குளிக்கும் வழக்கத்தை கொள்ள வேண்டும். முகத்தை கழுவ, முகத்திற்கு ஏற்ற சோப்பை பயன்படுத்தவும். இல்லையேல் வீட்டில் உள்ள கடலை மாவு சிறந்த பலனைத் தரும்.

2. அவ்வபோது அக்குள், கால்கள் மற்றும் அந்த பகுதிகளில் உள்ள தேவையற்ற முடியை நீக்கவும். இதற்கு அதிக விளம்பரங்கள் வருகின்றன. அவை கண்டு உங்கள் தோலுக்கு ஏற்ற பொருளை உபயோகிக்கவும். இல்லை ஷேவ் செய்ய அதற்கு தகுந்த ஷேவ்விங் ப்ளேடை உபயோகிக்கவும்.

3. கூந்தலை பராமரிக்க, செயற்கைப் பொருட்களை பயன்படுத்துவதை விட, இயற்கைப் பொருட்களை பயன்படுத்துவது நல்லது. இதனால் கூந்தல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

4. தினமும் எளிய முறையில் அலங்கரித்து கொள்ளலாம். இதனால் எப்போதும் பார்க்க லக்ஷ்னமாகவும் இருக்கும். அதனால் இதை தவிர்க்க வேண்டாம். தோல் வறண்டு இருந்தால், அதை ஈரப்பதமூட்டும் வகையில் நல்ல சருமத்திற்கு ஏற்ற க்ரீம்களை பயன்படுத்துங்கள். மேலும் சூரிய ஒளியால் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு ஏற்ற கற்றாழையை பயன்படுத்துவது நல்லது.

5. வழக்கமாக அணிய சில எளிய நகைகளை தேர்ந்தெடுத்து அணியவும். குழந்தைகள், கழுத்தணிகள் மற்றும் காதணிகளை ஆசையுடன் இழுப்பர். அதனால் அதற்கேற்றவாறு அணிகலன்களை அணிவது நல்லது.

6. பார்லருக்கு சென்று தான் பெடிக்யூர் செய்து கொள்ள வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருந்த படியே நேரம் கிடைக்கும் பொழுது, கை நகங்கள் மற்றும் கால் நகங்களை சுத்தம் செய்து கொள்ள, சுடு தண்ணீரில் ஊற வைத்து ஒரு நல்ல சோப்பு மற்றும் பிரஷை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

7. தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா போன்றவைகளை செய்தலால் உடம்பு ஆரோக்கியமாகவும், நல்ல கட்டுமானத்துடனும் இருக்கும். தூக்கம் வரும் சமயமோ அல்லது மாலை வேளையிலோ குழந்தைகளை வெளியே தினமும் பூங்காவிற்கு அழைத்து செல்லலாம். இதனால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கலாம்.

8. எப்போதும் சிரித்து கொண்டு, பற்களை வெண்மையாக வைத்து கொள்ள வேண்டும். இது வெளிதோற்றத்திற்கு சிறந்த உதவியாக இருக்கும். பல் மருத்துவரின் ஆலோசனை கொண்டு நடந்து கொள்ளுதல் அவசியம்.

9. அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் அனைத்து வேலைகளையும் சரிவர செய்ய இயலும். மேலும் அது அழகு கூட்டும். உங்களை போலவே அம்மாவாக இருக்கும் சிலரிடம் நட்பை கொண்டு, அவர்களின் ஆலோசனைகளை பெறவும்.

English summary

How to Be a Classy Mom | அழகான அம்மாவாக இருப்பது எப்படி?

Stay at home moms especially may have a hard time staying motivated to look good when they don't get out as often. Here are some tips for staying classy after becoming a mom.
Story first published: Monday, January 21, 2013, 17:13 [IST]
Desktop Bottom Promotion