For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விந்தணுக்கள் எளிதில் நீந்தி கருப்பையை அடையணுமா? இந்த மாதிரி செய்யுங்க...

|

சீக்கிரம் கருத்தரிக்க வேண்டுமா? பல ஆண்டுகளாக கருத்தரிக்க முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறீர்களா? கருத்தரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் தோல்வியைத் தான் இதுவரை சந்தித்துள்ளீர்களா? ஒரு பெண் கருத்தரிக்க வேண்டுமானால், அந்த செயல்பாட்டில் கர்ப்பப்பை வாய் சளியும் முக்கிய பங்காற்றுகிறது. கர்ப்பப்பை வாய் சளி இல்லாமல், விந்து செல்கள் முட்டைகளை உரமாக்க முடியாது.

அது ஏன் என்று யோசிக்கிறீர்களா? சரி, விந்தணுக்கள் முட்டையை அடைவதற்கு நீந்தி, நீண்ட நேரம் பயணிக்க வேண்டும். கர்ப்பப்பை வாய் சளி தான் விந்தணு மென்மையான பயணத்தை மேற்கொள்ள உதவி புரிகிறது. மேலும் கர்ப்பப்பை வாய் சளி தான் கருவளத்தின் அளவு மற்றும் ஓவுலேசன் சுழற்சியை முடிவு செய்கிறது. இங்கு பெண்ணின் கர்ப்பப்பை வாய் சளியை வளமாக்க உதவும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: கர்ப்பமாக கூடாது, ஆனா 'அது' பண்ணணும்.. எப்படி? தெரிஞ்சுக்க இத படிங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

தண்ணீர் அதிகம் குடிக்கவும். தண்ணீர் குடிப்பதால் கருவளம் எப்படி அதிகரிக்கும் என்று நீங்கள் கேட்கலாம். கர்ப்பப்பை வாய் சளி நீரைக் கொண்டது. எனவே, உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைவாக இருந்தால், இப்பிரச்சனை ஏற்படும். நீங்கள் தண்ணீரை போதுமான அளவு குடிக்காமல் இருந்தால், கர்ப்பப்பை வாய் திரவங்கள் வறண்டு போகக்கூடும். இந்த திரவங்கள் போதுமான அளவு இல்லாமல் போகும் போது, கர்ப்பப்பை வாயின் வழுவழுப்புத்தன்மை குறைந்துவிடும். இதனால் விந்தணுக்களால் கருமுட்டையை உரமாக்க முடியாமல் போகிறது. அதுவே தினமும் சரியான அளவு தண்ணீரைக் குடிக்கும் போது, கர்ப்பப்பை வாயில் விந்தணுக்களால் கருமுட்டையை எளிதில் அடைவதற்கு வழிவகுக்கும்.

MOST READ: கர்ப்பமாவதற்கு எத்தனை முறை உடலுறவு கொள்ள வேண்டும்?

வழி #2

வழி #2

பூண்டு அதிகம் சாப்பிட வேண்டும். பூண்டு கர்ப்பப்பை வாய் சளியை மெலிதாக்கச் செய்யும். அதோடு பூண்டில் ஜிங்க், சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி, ஃபோலேட், வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி6 நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் தான், கருமுட்டையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

MOST READ: லூப்ஸ் ஆண்களின் விந்தணுக்களை அழிக்குமா? உண்மை என்ன?

வழி #3

வழி #3

பச்சை இலைக் காய்கறிகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும். பச்சை இலைக் காய்கறிகள் கருவுறுவதற்கு மிகவும் முக்கியமானது. இது உடலில் உள்ள அதிகப்படியான அமிலத்தைக் குறைத்து காரத்தன்மையை அதிகரிக்கிறது. இது கர்ப்பப்பை வாய் சளி மற்றும் விந்தணுக்களுக்கு மிகவும் நல்லது.

MOST READ: ஆண்களே! விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு குட்-பை சொல்லணுமா? இந்த ஜூஸ் குடிங்க...

வழி #4

வழி #4

ஈவ்னிங் ப்ரைம்ரோஸ் ஆயில் ஹார்மோன்களை சீராக்க, கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் உடலில் சளியை உற்பத்தி செய்ய உதவக்கூடியது. மேலும் இது உடலில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இந்த எண்ணெய் விந்து செல்களின் இயக்கத்திற்கு சாதகமாக மென்மையான சூழ்நிலையை உருவாக்கி தரும். அதற்கு இந்த எண்ணெய் கேப்ஸ்யூலை தினமும் உட்கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த கேப்ஸ்யூலை உட்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள்.

MOST READ: இந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா?

வழி #5

வழி #5

இருமலுக்கான சிரப் சளியைக் கையாளக்கூடியது என்பதால், இது கர்ப்பப்பை வாய் சளிக்கும் நன்றாக வேலை செய்யும். இருமலுக்கான சிரப்களில் உள்ள குய்ஃபெனெசின் எனப்படும் மூலப்பொருள் கர்ப்பப்பை வாய் திரவங்களை மெல்லியதாக மாற்றும். ஆனால், இதை ஒருபோதும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், இதை ஓவுலேசன்/அண்டவிடுப்பின் அடுத்த நாள் மட்டுமே உட்கொள்வது நல்லது. மேலும், இருமலுக்கான சிரப்பை குடித்த பின் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

MOST READ: பாலுணர்ச்சியைத் தூண்டி நீண்ட நேரம் குதூகலமாக இருக்க உதவும் உணவுகள்!

எச்சரிக்கை

எச்சரிக்கை

நீங்கள் இருமலுக்கான சிரப்பை குடிக்கும் முன் மருத்துவரை அணுகவும். உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை அல்லது வேறு ஏதேனும் நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால், இந்த வழியைப் பின்பற்றுவதைத் தவிர்த்துவிட வேண்டும்.

MOST READ: 2 மாதத்தில் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வளிக்கும் ஓர் அற்புத ஆயுர்வேத மருந்து!

வழி #6

வழி #6

க்ரீன் டீ ஆண்கள் மற்றும் பெண்களின் கருவளத்திற்கு நல்லது என சில ஆய்வுகள் கூறுகிறது. க்ரீன் டீயில் கேட்டசின்கள், ப்ளேவோனாய்டுகள், பாலிஃபீனால்கள் மற்றும் ஹைப்போஜாந்தின் போன்றவை உள்ளது. அதோடு, க்ரீன் டீயில் L-தியனைன், ஜிங்க் மற்றும் மாங்கனீசு போன்ற மன அழுத்த ஹார்மோன்களை குறைக்கும் உட்பொருட்கள் உள்ளன. மேலும் க்ரீன் டீயை ஒரு நாளைக்கு ஒரு கப் மட்டுமே குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Make Your Cervical Mucus More Fertile

How to make your cervical mucus more fertile? Cervical mucus can also decide your fertility levels and ovulation cycles. Read this!