For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கன்னித்திரையில் ஏற்படும் கிழிசல் குறித்து பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

|

நான் 22 வயது நிரம்பிய பெண். சைக்கிளிங் செய்துக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சிறிய விபத்து காரணமாக எனது கன்னித்திரையில் (Hymen) கிழிசல் ஏற்பட்டுவிட்டது. நான் பிறந்த வளர்ந்த சமூகத்தில் ஒரு பெண் கற்புடையவள் என்பதை இதை வைத்து தான் ஊர்ஜிதம் செய்வார்கள்.

ஒருவேளை என் வருங்கால கணவர் இதை வைத்து நான் கற்புடையவள் அல்ல என முடிவுக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் உள்ளத்தில் அதிகரிக்கிறது. இதுக்குறித்து என் அம்மாவிடம் கூறவும் அச்சமாக இருக்கிறது. இதனால், என் மீது சந்தேகம் கொள்வார்களோ? என்று பயப்படுகிறேன். அவர் என் மீது நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார்.

Is There Any Chance to Reconstruct Hymen?

Cover Image Source: soc.ucsb.edu

இந்த ஒரு சிறிய பிரச்சனையால் என் இல்வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமோ என்று கருதி வந்தேன். அப்போது தான் கன்னித்திரை கிழிசலை ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்ய முடியும் என்று இணையத்தின் உதவியில் அறிய வந்தேன்.

இதை எப்படி, எங்கே செய்ய முடியும். மேலும், புதிய கன்னித்திரையானது முதலிரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடும் வரை பாதுகாப்பாக இருக்குமா? அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் அது சேதமடைய வாய்ப்புகள் இருக்கிறதா? என்பது குறித்து அறிந்துக் கொள்ள விரும்புகிறேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாராட்டு!

பாராட்டு!

பெண்கள் மத்தியில் இப்படியான சந்தேகம் நீண்ட காலமாக இருக்கிறது. முதல் முறையாக ஒரு பெண் வெளிப்படையாக இதுக்குறித்து பேசி இருக்கிறார், கேள்வி கேட்டிருக்கிறார் என்பதே பாராட்டுதலுக்கு உரியது தான். கன்னித்திரை என்பது பெண்ணுறுப்பு திறப்பு பகுதியில் ஒரு மெலிசான தசை என்று குறிப்பிடலாம். இது உடலுறவில் ஈடுபட்டால் தான் கிழிசல் ஏற்படும் என்பதல்ல. உண்மையில், பெண்களை காட்டிலும் ஆண்கள் தான் நமது சமூகத்தில் இதுக்குறித்த தெளிவான உண்மைகளை அறிந்துக் கொள்ள வேண்டும்.

பேரார்வம்!

பேரார்வம்!

ஆண்களுக்கு எப்போதுமே கற்பின் மீது ஒரு பேரார்வம், பெரும் ஜாக்கிரதை உண்டு. தான் திருமணத்திற்கு முன்னர் எத்தனை உறவில் இருந்தாலும், தனக்கு வாய்க்க போகும் பெண் பத்தினியாக இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். இன்றும், இந்தியாவின் பல பகுதிகளில் கன்னித்திரை கிழிசலை வைத்து பெண்களின் கற்பு எடைப்போட பட்டு வருகிறது என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

கேரண்டி!

கேரண்டி!

பிளாஸ்டிக் செய்துக் கொள்வதன் மூலமாக கன்னிதிரையை மீண்டும் ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இது எத்தனை நாள் நீடிக்கும் என்பதற்கு கேரண்டி என்பதை யாராலும் அளிக்க முடியாது. ஜிம்னாஸ்டிக், பளுதூக்கும் பெண்கள், தடகள வீராங்கனைகள் அல்லது மீண்டும் எதிர்பாராத விபத்து காரணமாக அது கிழிசல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே, ரீ-கன்ஸ்ட்ரக்ட் என்பது முறையான முழுமையான தீர்வு அல்ல.

சரியான முறையா?

சரியான முறையா?

ரீ-கன்ஸ்ட்ரக்ட் செய்துக் கொள்வது என்பது பெண்களுக்கான ஒரு தீர்வு முறையாக இருப்பினும். அதை எதற்காக செய்துக் கொள்கிறோம் என்பதும் ஒரு கேள்வி. திருமணத்திற்கு முன் தவறான உறவில் இருந்தவர்கள் வருங்கால கணவரிடம் தன் நடத்தையை முறையாக காண்பித்துக் கொள்ள, சந்தேகம் எழாமல் இருக்க இத்தகைய சர்ஜரி செய்துக்க் கொள்கிறார்கள். நடுவயது பெண்களும் கூட, தங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்காக இத்தகைய சர்ஜரி செய்துக் கொள்வதாக அறியப்படுகிறது.

ஹைமெனோப்ளாஸ்டி!

ஹைமெனோப்ளாஸ்டி!

ஹைமெனோப்ளாஸ்டி (hymenoplasty) எனப்படும் கன்னித்திரை கிழிசல் ரீ-கன்ஸ்ட்ரக்ட் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய 15,000 முதல் 70,000 வரை செலவாகலாம். வெளிப்படையாக பெண்கள் இந்த சர்ஜரி செய்துக் கொள்ள முன்வரும் போதும் சில மருத்துவமனைகள் குறைவாகவும், இரகசியமாக செய்துக் கொள்ள வரும் பெண்களிடம் அதிகமாகவும் பணம் வாங்கப்படுவதாக அறியப்படுகிறது.

மாற்றம் தேவை!

மாற்றம் தேவை!

முடிந்த வரை... வருங்கால கணவருக்கு சந்தேகம் வந்தால் நடந்த உண்மையை விளக்குங்கள். மற்றும் வேறு எந்தெந்த காரணங்களால் கன்னித்திரை கிழிசல் உண்டாக வாய்ப்புகள் உண்டு என்பதை புரிய வையுங்கள். 33% மட்டுமே பெண்ணுக்கான சரியான உரிமை அல்ல. பெண்கள் இந்த சமூகத்தில் பெறவேண்டிய உரிமைகள் பலவன இருக்கின்றன.

பெண்கள் தகர்க்க வேண்டிய தடைகள், கடினமான சமூக முறைகள், சாடல்கள் நிறைய இருக்கின்றன. அதில் முதலில் தகர்க்க வேண்டியது, கன்னித்திரை கிழிசல் ஏற்பட்டால் அவள் கற்புடையவள் அல்ல என்று கூறும் கூற்றை. முதலில் எதுவாக இருந்தாலும் முழுமையாக அறிந்து, புரிந்து பேச வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: basics அடிப்படை
English summary

Is There Any Chance to Reconstruct Hymen?

Is There Any Chance to Reconstruct Hymen? What is the procedure or surgery & what is cost of the hymenoplasty surgery in India?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more