For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவது நல்லது தானா?

இரவில் உள்ளாடை இல்லாமல் உறங்குவதால் உண்டாகும் நன்மைகள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

நாம் அனைவரும் இரவு உறக்கத்தின் போது, நல்ல வசதியான ஆடையை தான் அணிந்து கொள்ள விரும்புகிறோம். அதாவது, நாம் வெளியில் செல்லும் போது அணிந்து செல்லும் ஆடையை விட இரண்டு சைஸ் அதிகமான ஆடையை தான் நாம் இரவில் அணிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்.

இதற்கு காரணம் என்னவென்றால், காற்றோட்டமாக இருக்க வேண்டும் என்பது தான். நாள் முழுவதும், இறுக்கமான ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறோம். இரவிலாவது கற்றோட்டமான ஆடைகளை அணியலாமே என்பது தான் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கும். இரவில் முக்கியமாக பெண்கள் ஏன் உள்ளாடை அணியாமல் உறங்க வேண்டும் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்ணுறுப்பு சுவாசத்திற்கு...

பெண்ணுறுப்பு சுவாசத்திற்கு...

கண்டிப்பாக பெண்ணுறுப்பானது வெளிக்காற்றை சுவாசிக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் பாக்டிரியாக்கள் அங்கு அதிகரித்துவிடும். ஆனால், நாள் முழுவதும், வேலை நேரங்களிலும், வெளியிடங்களுக்கு செல்லும் போது உள்ளாடை இல்லாமல் இருக்க முடியாது. குறைந்தது இரவிலாவது உள்ளாடை இல்லாமல் இருக்கலாமே..!

துணி மெட்டிரியல்

துணி மெட்டிரியல்

உள்ளாடைகள் ஒருவேளை சில்க், நைலான் போன்ற மெட்டிரியல்களால் ஆனாதாக இருக்கலாம். இவ்வாறு இருந்தால், பெண்ணுறுப்பிற்கு நாள் முழுவதும் புதிக காற்று செல்லவே செல்லாது. காட்டானாக இருந்தால் மட்டும் தான் வெளிக்காற்று பெண்ணுறுப்பிற்கு செல்லும். ஒருவேளை உங்களது உள்ளாடை காட்டனாக இருந்தால், தேவைப்பட்டால் நீங்கள் இரவிலும் அணிந்து கொள்ளலாம்.

தொற்றுகள்

தொற்றுகள்

பெண்ணுறுப்பிற்கு வெளிக்காற்று கிடைக்காமல் இருந்தாலும், உள்ளாடைகள் ஈரத்தன்மையுடன் இருந்தாலோ பாக்டீரியாக்களின் தொற்று அதிகரிக்கும். பாக்டீரியாக்கள் குறிப்பாக இரவில் அதிகரித்துவிடும், இதனால் உங்களுக்கு பூஞ்சை தொற்று போன்ற பிரச்சனைகள் பெண்ணுறுப்பில் உண்டாகலாம்.

சுத்தம் செய்ய..

சுத்தம் செய்ய..

பெண்ணுறுப்பு என்று எந்த ஒரு தனி கவனிப்பும் தேவைப்படுவதில்லை. பெண்ணுறுப்பு தன்னை தானே சுத்தம் செய்து கொள்ளும். ஆனால் பெண்ணுறுப்பு தன்னை தானே சுத்தம் செய்து கொள்ள அதற்கு காற்று தேவைப்படுகிறது. எனவே தான் இரவில் உள்ளாடைகள் இல்லாமல் உறங்க வேண்டியது அவசியம்.

இதை விரும்பவில்லையா?

இதை விரும்பவில்லையா?

நீங்கள் இரவில் உள்ளாடையின்றி உறங்குவது சௌகரியமாக இருக்காது என்று எண்ணினால், நீங்கள் கொஞ்சம் பெரிய சைஸ் காட்டன் உள்ளாடையை அணிந்து உறங்கலாம். இது உங்களுக்கு சிறந்ததாக அமையும்.

ஆண்களுக்கும் இது போலவா?

ஆண்களுக்கும் இது போலவா?

ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகள் அணிவது, விந்தணுக்களின் திறனை குறைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் புதிய ஆய்வுகள் இதனால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைய இது காரணமாக இருக்காது என்று கூறுகிறது. எனவே ஆண்கள் தங்களது விருப்பத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

should you remove your underwear before sleeping

should you remove your underwear before sleeping
Story first published: Monday, October 9, 2017, 16:24 [IST]
Desktop Bottom Promotion