ஆண் விதைகளின் அளவைக் கொண்டு ஆண்களின் கருவளத்தை அறிய முடியும் எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களுக்கு இருக்கும் சிறிய விரைகள் மூன்று விஷயங்களை உணர்த்தும். அவை குறைவான டெஸ்டோஸ்டிரோன், குறைவான விந்தணு எண்ணிக்கை மற்றும் அதிகமான ஈஸ்ட்ரோஜென். அதோடு, சிறிய அளவிலான விரைகள் ஆண்களின் மோசமான வாழ்க்கை முறையையும் குறிக்கிறது.

எனவே ஆண்கள் தங்களின் கருவளத்தை மேம்படுத்த மது, புகை போன்றவற்றைத் தவிர்ப்பதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் போதிய அளவிலான தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் விரைகளின் அளவு ஆண்களின் கருவளத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது என்பது குறித்த சில உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

விந்து உற்பத்தி விரைகளின் அளவைப் பொறுத்தது. எனவே பெரிய அளவிலான விரைகள் இருந்தால், அந்த ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி அதிகமாக இருக்கும்.

உண்மை #2

உண்மை #2

இரண்டு ஆரோக்கியமான ஆண்களை ஒப்பிடுகையில், பெரிய விரைகளைக் கொண்ட ஆணுக்கு உடலுறவில் ஈடுபடும் போது, அதிகளவிலான விந்து வெளியேறும்.

உண்மை #3

உண்மை #3

புள்ளி விவரப்படி, பல ஆண்களுக்கு சிறிய அளவிலான விரைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு, 12 ஆண்களுள் ஒருவருக்கு கருவளம் மோசமான நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

உண்மை #4

உண்மை #4

வயது அதிகரிக்கும் போது, ஆண்களின் உடலால் விந்தணுவை அதிக அளவில் உற்பத்தி செய்ய முடியாமல் போகிறது. மேலும் ஆண்களின் கருவளம் சிறப்பாக இருக்க, உடலில் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவாகவும் இருக்க வேண்டும். விந்தணுவின் உற்பத்தி விரைகளின் அளவினால் மட்டுமின்றி, வேறு சில காரணிகளாலும் பாதிக்கப்படும்.

உண்மை #5

உண்மை #5

ஆண்களின் விரைகளின் அளவு சுருங்குவதற்கு குறைவான அளவிலான டெஸ்டோஸ்டிரோனும் ஓர் முக்கிய காரணமாகும்.

உண்மை #6

உண்மை #6

ஆண்கள் 30 வயதை கடந்த பின், ஒவ்வொரு வருடத்தைக் கடக்கும் போதும், டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக விரைகளின் அளவு சுருங்கும்.

உண்மை #7

உண்மை #7

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாலும், ஆண்களின் விரைகளின் அளவு குறைய ஆரம்பிக்கும். ஆண்கள் குடிப்பழக்கத்தை உடனே நிறுத்தினால், இப்பிரச்சனையில் இருந்து உடனடியாக விடுபடலாம்.

உண்மை #8

உண்மை #8

ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறையும் போது, உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாகிறது என்று அர்த்தம். ஆண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால் தான், சில ஆண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக ஆரம்பிக்கின்றன.

உண்மை #9

உண்மை #9

மருத்துவ காரணங்களுக்காக ஈஸ்ட்ரோஜென் எடுக்கும் ஆண்களின் விரைகள் சுருங்குவது நன்கு தெரியும். இதைக் கொண்டே அதிகமான ஈஸ்ட்ரோஜெனுக்கும், சிறிய விரைகளுக்கும் தொடர்பு இருப்பதை நன்கு அறியலாம்.

உண்மை #10

உண்மை #10

சிறிய அளவிலான ஆண் விரைகள் மலட்டுத்தன்மை, விறைப்புத்தன்மை பிரச்சனை, உடல் பருமன், ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது மற்றும் புரோஸ்டேட் பிரச்சனைகளை உண்டாக்கும். அதற்காக சிறிய விரைகள் கொண்ட அனைத்து ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று அச்சம் கொள்ள வேண்டாம். மருத்துவ பரிசோதனையின் முடிவில் தான் அனைத்தும் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Is Male Fertility Linked To The Size Of Your Testicles?

Small testicles could mean three things: Low testosterone levels, low sperm count and even high estrogen levels.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter