நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள் என்பதை வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள்!!!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

கர்ப்ப காலத்தில், ஒரு பெண்ணின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உருவாகின்றன. இதில் சில மாற்றங்களை நாம் மிக எளிதில் அடையாளம் காண முடியும். இத்தகைய மாற்றங்கள் மற்றும் அறிகுறிகளை எச்சரிக்கையுடன் எதிர்க்கொண்டு, வீட்டில் மற்றும் மருத்துவர்களின் உதவியுடன் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் சோதனைகளை மேற்கொண்டு உங்களின் கர்ப்பத்தை எவ்வுளவு சீக்கிரம் முடியுமோ அவ்வுளவு சீக்கிரம் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

அது கர்ப்ப காலங்களில், உங்களின் உடல் மற்றும் மனதில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்வதற்கு உங்களை தயார்ப்படுத்த உதவும். கர்ப்ப கால அறிகுறிகள் பெண்ணிற்கு பெண் வேறுபடுகின்றன. ஆனாலும் அனைத்துப் பெண்களும் கர்ப்ப காலத்தில் இந்த வழக்கமான முன்னறிகுறிகளையே அனுபவிக்கின்றனர்.

இதில் பெரும்பாலான அறிகுறிகள் அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்கின்றன மற்றும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிகுறிகளை எளிதில் அடையாளம் காண முடியும்.

இந்தப் பொதுவான கர்ப்ப கால அறிகுறிகள் சில நேரங்களில் உங்கள் உடலில் ஏற்பட்டுள்ள சில நோய்களின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் கர்ப்பமாக இருக்கலாம் என உங்களுக்கு உணர்த்தும் சில அறிகுறிகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீங்கிய மார்பகங்கள்

வீங்கிய மார்பகங்கள்

மார்பக வீக்கங்கள் மற்றும் மார்பக வலி போன்றவவை, முதல் கர்ப்ப கால அறிகுறிகளில் மிகவும் முக்கியமானவை. உங்களுக்கு இந்த அறிகுறிகள் தென்பட்டால், நீங்கள் மிக விரைவாக ஒரு மருத்துவர் அல்லது சிறப்பு மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

அசெளகரியமான நிலை

அசெளகரியமான நிலை

நீங்கள் உங்கள் மார்பகத்தில் அனுபவிக்கும் அசெளகரியத்தை எதனுடனும் ஒப்பிட முடியாது தான். ஆனால் இது வழக்கமாக நீங்கள் உங்கள் மாதவிடாய் காலங்களின் அனுபவிக்கும் அசெளகரியத்தை விட சற்று வலுவானதாக இருக்கும். முதல் மூன்று மாதங்களைத் தொடர்ந்து, இந்த வலியானது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் ​​உங்கள் உடலானது புதிய ஹார்மோன்களின் அளவிற்கு சரிசெய்ய பழக்கப்பட்டுவிடும்.

களைப்பு

களைப்பு

களைப்பானது கர்ப்ப காலத்தில் காணப்படும் மற்றொரு மிகவும் பொதுவான ஆரம்ப அறிகுறியாகும். உங்களுக்கு ஏற்படும் அதிக பசியானது மிகவும் நன்கு அறியப்பட்ட ஆரம்ப கர்ப்ப அறிகுறியாக உள்ளது. மேலும், நீங்கள் முன்பு அனுபவித்து சுவைத்த உணவுகளின் மீது உங்களுக்கு வெறுப்பு வரும். இதுவும் மற்றொரு அறிகுறியாக கருதப்படுகின்றது.

தவறிய அல்லது மிகவும் லேசான மாதவிடாய் காலம்

தவறிய அல்லது மிகவும் லேசான மாதவிடாய் காலம்

இந்த வேதனை கர்ப்ப காலத்தில் வந்து வந்து போகலாம். ஒரு தவறவிட்ட, தாமதமான அல்லது மிகவும் லேசான மாதவிடாய் காலம் என்பது உங்களுடைய கர்ப்ப கால முன் அறிகுறிகளாக உள்ளன. அதிலும் இத்தகைய அறிகுறிகள் பொதுவான மற்றும் தெளிவான மாதவிடாய் பருவம் உள்ள பெண்ணிற்கு கண்டிப்பாக பொருந்திப் போகின்றன.

விரும்பத்தகாத வாசனை

விரும்பத்தகாத வாசனை

ஒரு விரும்பத்தகாத, உயர்ந்த வெறுப்பூட்டும் வாசனையானது உங்களின் முதல் மாத கர்ப்ப அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். இது பொதுவாக புதிதாக திருமணமான மற்றும் கர்ப்பமான பெண்களுக்கு அசாதாரணமானது அல்ல.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அடிக்கடி சிறுநீர் கழித்தல் என்பது மிகவும் பொதுவான கர்ப்ப கால அறிகுறிகளில் ஒன்றாக விளங்குகின்றது. உங்கள் கர்ப்பத்தின் முதல் மாதம் முழுவதும், இதை விட வேறு அறிகுறிகள் எதுவும் உங்களுக்கு தென்பட வாய்ப்பில்லை. அனைத்து பெண்களுக்கும் கரு உருவான ஒரு மாதம் வரை இது தென்படாவிட்டாலும், வேறு சில பெண்களுக்கு இது மிகவும் ஆரம்ப கர்ப்ப காலத்திலேயே தென்படத் தொடங்கும்.

உங்களுக்கு மேற்கூறிய அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், அதை வெகு சீக்கிரம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அது உங்களின் குழந்தை ஆசையை உறுதிப்படுத்த உங்களுக்கு உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Symptoms That Tell You Are Pregnant

There are certain symptoms that tell, you are pregnant. So read to know which are the signs and how to know if you are pregnant.
Story first published: Friday, April 8, 2016, 11:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter