இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க....

Posted By:
Subscribe to Boldsky

இரட்டைக் குழந்தைகளின் மீது விருப்பமா? உங்களுக்கு இரட்டைக் குழந்தை பிறக்க வேண்டுமா? இரட்டைக் குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு மரபணுக்களுடன் அதிர்ஷ்டமும் வேண்டும். மேலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க ஒருசில உணவுகளும் உதவும்.

Fertility Foods That Help You To Conceive Twins

அந்த உணவுகளை உட்கொண்டு வந்தால், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இங்கு இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சேனைக்கிழங்கு

சேனைக்கிழங்கு

நைஜீரியா பகுதியில் உள்ள யருபா பழங்குடியினர் இரட்டைக் குழந்தைகளை அதிகம் பெற்றெடுப்பதாக தெரிய வந்துள்ளது. இதுக்குறித்து ஆராய்ந்ததில் அவர்கள் தங்கள் உணவில் சேனைக்கிழங்கை அதிகம் சேர்த்து வந்தது தெரிய வந்தது.

சேனைக் கிழங்கில் பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் மற்றும புரோஜெஸ்டிரோன்கள் வளமாக உள்ளது. இந்த கிழங்கில் உள்ள கெமிக்கல் ஓவுலேசனை வேகப்படுத்தும். மேலும் காட்டு சேனைக்கிழங்கை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, இரட்டைக் குழந்தை பிறந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஃபோலிக் அமில உணவுகள்

ஃபோலிக் அமில உணவுகள்

ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தகைய ஃபோலிக் அமிலம் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றில் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதுக்குறித்து ஆஸ்திரேலிய குழுவினர் ஆராய்ந்ததில் சாதாரண உணவுகளுடன் ஃபோலிக் அமில உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்ட 40% பெண்களுக்கு இரட்டைக் குழந்தைப் பிறக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட்

காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட்

காம்ப்ளஸ் கார்போஹைட்ரேட் முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளது. இந்த உணவுகள் ஓவுலேசனை அதிகரிக்கும் மற்றும் இன்சுலின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைக்கும். மேலும் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் உணவுகளை பெண்கள் அதிகம் உட்கொண்டு வந்தால், அது இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பை அதிகரிப்பதோடு, குழந்தைக்கு நரம்பு குழாய் குறைபாடுகளைத் தடுக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களான சீஸ், பட்டர், தயிர் மற்றும் பால் போன்றவை இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். பால் பொருட்களில் உள்ள கால்சியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. பால் பொருட்கள் இரட்டைக் குழந்தை பிறக்கும் வாய்ப்பை அதிகரிப்பதோடு, குழந்தையின் ஆரோக்கியமான எலும்புகளுக்கும் நல்லது.

ஆனால் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடல் பருமனை உண்டாக்கும். எனவே எதிலும் அளவாக இருங்கள்.

குறிப்பு

குறிப்பு

மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை உட்கொண்டால், இரட்டைக் குழந்தை கட்டாயம் பிறக்கும் என்று சொல்ல முடியாது. இந்த உணவுகள் இரட்டைக் குழந்தைகளுக்கான வாய்ப்பை தான் அதிகரிக்கும். மேலும் இரட்டைக் குழந்தை பிறப்பதற்கு மரபணுக்கள் முதன்மையானதாக உள்ளதால், பரம்பரையில் யாருக்கேனும் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தால் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fertility Foods That Help You To Conceive Twins

Here are some fertility foods that help you to conceive twins. Read on to know more...
Story first published: Tuesday, October 25, 2016, 13:36 [IST]
Subscribe Newsletter