நீங்கள் கர்ப்பம் அடைய நம்ப முடியாத சில வழிகள்!

By: Srinivas
Subscribe to Boldsky

குழந்தைக்கு திட்டமிடாத நிலையில் கருத்தரிப்பது என்பது சற்றே சவாலான ஒரு சூழ்நிலை... இல்லையா? ஆனால் உங்களை அறியாமலேயே கர்ப்பமாக பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்பதை நீங்கள் அறிவீர்களா?

பல நேரங்களில் தம்பதியர் பல்வேறு காரணங்களால் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இருக்கமாட்டார்கள். ஒருவேளை அவரகளிடையே உறவு சிறக்காமல் இருக்கலாம் அல்லது அவர்கள் குறைந்த வயதினராகவோ அல்லது நிதிநெருக்கடியிலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமலோ இருக்கலாம். காரணம் எதுவாயினும் எதிர்பாராத கர்ப்பம் அந்த சூழ்நிலையில் அவர்களுக்குப் பெரும் மன உளைச்சலையும் நெருக்கடியும் தரக்கூடும்.

எனவே உறவில் ஈடுபடுமுன் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்வதும் எதிர்பாராமல் எந்த வழியில் எல்லாம் கருத்தரிப்பு நேரக்கூடும் என்பதை அறிந்து வைத்திருப்பதும் எப்போதுமே நல்லது. நம்ப முடியாத சில வழிகளில் எவ்வாறு கருத்தரிப்பு ஏற்படக்கூடும் என்பதை இப்போது நாம் காணலாம்.

1. ஆசன வாய் மூலம் உறவு : எதிர்பாராத கருத்தரிப்புக் காரணிகளில் ஆசனவாய் மூலம் உறவு கொள்ளுதலும் ஒன்று. பலரும் இதன் மூலம் கருத்தரிக்க முடியாது என நினைக்கின்றனர். ஆனால் ஆசனப் பாதையிலிருந்து விந்துவானது பெண்ணின் யோனிப் பாதையில் கசிந்தால் கர்ப்பத்திற்கு வாய்ப்புகள் உருவாகும்.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

2. ஆணுறை கிழிதல்: ஆணுறை பாக்கெட்டை கடினமாகக் கிழிக்க முற்படும்போது குறிப்பாக பல்லால் கடித்து திறக்க முற்படும்போது அதில் பொத்தல்களோ அல்லது கீரல்களோ ஏற்பட வாய்ப்புள்ளது. இது கருத்தரிக்க வாய்ப்பாக அமையும்.

3. "வெற்று" விளையாட்டு ஆண்கள் உள்ளாடையுடன் உறவுக்கு முன் விளையாட்டுகள் செய்யும்போதும் விந்து உள்ளாடையிலிருந்து கசிந்து பெண்ணுறுப்பில் நுழையுமானால் அங்கும் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

4. ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும்போது கருத்தரிப்பு? ஆமாம், இது நடக்காத ஒன்று என்பதுபோலத் தோன்றினாலும், இது சாத்தியமே. இதை சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கிறார்கள்

5. எண்ணை வழுவழுப்பாக்கிகள் (லூப்ஸ்): ஆணுறைகளுடன் நீங்கள் எண்ணைகளைப் பயன்படுத்தினால், அது ஆணுறையை விலகிப் போகச் செய்து அல்லது குறுந்துளைகளை ஏற்படுத்தி அதனால் கர்ப்பம் தரித்தலை ஏற்படச்செய்யும்.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

6. பாத் டப் குளியல் : ஆண் பெண் இருவரும் பாத் டப்பில் குளிக்கையில் ஆண் விந்துவை வெளியேற்றினால் அது பெண்ணுறுப்புக்குள் புகவும் அதனால் கருத்தரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

7. கருத்தடை மருந்துகள்: ஒரு நாளும் தவறாமல் கருத்தடை மாத்திரை உட்கொண்டாலும் கூட நீங்கல் கருத்தரிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த மருந்துகள் 100 சதவிகிதம் வேலை செய்யும் என்று சொல்ல முடியாது.

8. விரல் வில்லங்கம்: உங்கள் ஆடவர் தன்னுடைய விந்துவை அறியாமல் விரலில் தொட்டுவிட்டு உங்களிடம் விளையாடும்போது அந்த விரலை பெண்ணுறுப்பினுள் செலுத்தினாலும்கூட கர்ப்பம் ஏற்பட வாய்ப்புண்டு.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

9. ஆணுறை முனை இடைவெளி: ஆணுறையை அணியும்போது அதன் முனையில் உள்ள சிறு இடைவெளியை விடாமல் இறுக்கமாக அணிந்தால் விந்து பக்கவாட்டில் வெளியேறிக் கசிந்து பெண்ணுறுப்பில் செல்ல வாய்ப்பிருக்கிறது.

10. ஆண் குடும்பக் கட்டுப்பாடு : வாசெக்டமி எனப்படும் ஆண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆணுடன் உறவில் ஈடுபட்டாலும் சில நேரங்களில் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அறுவை சிகிக்சை செய்யப்பட்ட பாகங்கள் திரும்ப வளர்ந்துவிட வாய்ப்புகள் உள்ளன.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

11. கருப்பாதை முடிச்சுகள்: உங்கள் கருப்பாதையை குடும்பக் கட்டுப்பாட்டிற்காக முடிச்சு போட்டிருந்தாலும் கருத்தரிக்க வாய்ப்புள்ளது ஏனென்றால் இந்த செயல்முறை 100 சதவிகிதம் உத்தரவாதமானது அல்ல.

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

12. ஷவர் குளியல் உறவு: பலரும் ஷவர் குளியலின் போது கொள்ளும் உறவு கருத்தரிப்பைத் தடுக்கும் என நினைக்கின்றனர். ஆனால் விந்து நுழைந்து சென்றுவிட வாய்ப்பிருப்பதால் கருத்தரிப்பு ஏற்படலாம்.

புரிஞ்சுக்கோங்க.. ஜாக்கிரதைய விளையாடுங்க..

English summary

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!

12 Surprising Ways You Can Get Pregnant Without Knowing!
Story first published: Monday, October 17, 2016, 13:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter