For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான பத்து காரணங்கள்!!!

By Super
|

பெரும்பாலான பெண்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 11 முதல் 13 மாதவிடாய் சுழற்சிகள் இருக்க வேண்டும். அதிகமான மாதவிடாய் சுழற்சியின் கால அளவு 28 நாட்கள் (இது ஒரு மாதவிடாய் சுழற்சியின் சராசரி கால அளவு). ஆனால் சாதாரண மாதவிடாய் சுழற்சி 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும். ஒருவேளை மாதவிடாய் சுழற்சியானது தவறினாலோ அல்லது ஒழுங்கற்றதாக இருந்தாலோ, உடனடியாக மருத்துவரிடம் சென்று சோதிப்பது நல்லது.

மாதவிடாய் சுழற்சிகள் மாறுபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாதவிடாய் சுழற்சி ஒவ்வொரு மாதமும் தவறாமல் இருக்கிறது. ஆனால் அது 35 நாட்கள் இடைவெளிக்குள் வந்துவிட்டது என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று பொருள். ஆனால் அதுவே 40 நாட்களுக்கு மேல் வரவில்லை அல்லது நின்று விட்டது என்றால் உடனடியாக ஒரு மகப்பேறு மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.

பொதுவாக பெண்கள் கர்ப்பமாக முயற்சி எடுக்காத வரை, அவர்களுக்கு மாதவிடாய் தவறிப்போவதை விட, மற்ற எந்த விஷயமும் பெண்களின் இதயத்திற்கு அச்சத்தை கொடுப்பதில்லை.

ஏனெனில் மாதவிடாய் தாமதமானால், முதலில் நினைவுக்கு வருவது கர்ப்பம். ஆனால் தாமதமாக மாதவிடாய் வருவதற்கு கர்ப்பம் என்ற ஒரே ஒரு காரணம் மட்டும் தானா இருக்கிறது என்று கேட்டால், அது தான் இல்லை. ஆம், மாதவிடாய் தவறினால், அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இங்கு அவற்றில் 10 காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் வாழ்க்கையில் பல விஷயங்களை பாதிக்கிறது. அதில் மாதவிடாய் சுழற்சியும் ஒன்று. சில வேளைகளில் அதிக மன அழுத்தம் இருப்பதை வெளிப்படுத்துவதன் விளைவாக உடலின் ஹார்மோனில் சுரப்பு குறைகிறது. இதன் காரணமாக கருப்பையில் இருந்து கருமுட்டை உருவாவது மற்றும் மாதவிடாய் ஏற்படுவது தடைபடுகிறது. ஆகவே இந்நேரத்தில் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது அல்லது நர்ஸிடம் கலந்தாலோசித்து நிதானமாக உடலை ரிலாக்ஸ் செய்வதன் மூலம் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும். இதற்கு சில மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலங்கள் ஓய்வு எடுப்பதன் மூலம் சாத்தியமாகலாம்.

உடல்நலக் குறைவு

உடல்நலக் குறைவு

திடீரென ஏற்படும் நோய், குறுகிய நோய் அல்லது ஒரு நீண்ட காலமாக இருக்கும் நோயும் மாதவிடாயை தாமதமாக ஏற்படுத்தும். இது பொதுவாக தற்காலிகமானது தான். இது தான் மாதவிடாய் தாமதத்திற்கு காரணம் என்று அறிய வந்தால், உடனே மருத்துவரை சந்தித்து எப்போது மாதவிடாய் ஏற்படும் என்பதில் ஆலோசனை பெறலாம்.

அட்டவணை மாற்றம்

அட்டவணை மாற்றம்

மாறிவரும் கால அட்டவணைகள், உண்மையில் உடல் கடிகாரத்தின் ஓட்டத்தை மாற்றிவிடும். இது குறிப்பாக பகல் ஷிப்ட், இரவு ஷிப்ட் என்று வேலையானது மாறி மாறி அமைந்தால் ஏற்படும். இது போன்று அடிக்கடி வேலை மாற்றம் ஏற்படுவதன் விளைவாக, மாதவிடாய் சுழற்சியும் மாறுவதை உணர முடியும். ஆகவே முடிந்தால் வேலையை ஒரே ஷிப்டில் தொடர்வது நல்லது அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் ஷிப்ட் மாற்றுவது நல்லது.

மருந்துகள் மாற்றம்

மருந்துகள் மாற்றம்

தாமதமாக அல்லது மாதவிடாய் வராமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், புதிய மருந்தை முயற்சி செய்திருப்பதும் ஆகும். ஆகவே புதிய மருந்தின் பக்க விளைவுகளை பற்றி மருத்துவரிடமோ அல்லது நர்ஸிடமோ கட்டாயம் விசாரிக்க வேண்டும். சில சமயங்களில் கர்ப்ப தடை மருந்துகள் இது போன்ற விளைவுகளை சாதாரணமாக ஏற்படுத்துகின்றன. எனவே மருந்துகளை மாற்றினால், அது மாதவிடாய் சுழற்சிக்கு எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முன்னரே அறிந்து கொண்டு, பின் வாங்க வேண்டும். ஒருவேளை மருந்துகளை மாற்றியதால் தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது என்று நினைக்கவில்லை என்றாலும் இதுவே உண்மை.

அதிக எடையுடன் இருப்பது

அதிக எடையுடன் இருப்பது

அளவுக்கு அதிகமாக எடை இருந்தால், ஹார்மோன்கள் மாதவிடாய் சுழற்சியை மாற்றி சில சமயம் அவற்றை நிறுத்திவிடும். பெரும்பாலான பெண்களுக்கு தங்களின் எடை குறைந்தவுடன், அவர்கள் அதிக எடையுடன் இருப்பதாக நினைத்தாலும், அவர்களுக்கு மீண்டும் சாதாரண மாதவிடாய் சுழற்சிகள் ஏற்படுவதுடன், கருவுறுதலும் ஆரம்பமாகின்றன.

எடை குறைவாக இருப்பது

எடை குறைவாக இருப்பது

உடலில் தேவையான கொழுப்பு இல்லை என்றால் வழக்கமான மாதவிடாய் வராது. சில நேரங்களில், இந்த மாதவிடாய் சுழற்சி முற்றிலும் நின்று போகக்கூடிய வாய்ப்பு அதிகம். இதற்கு அம்னோரியா என்று பெயர். ஆகவே இதற்கு எடை அதிகரிப்பது வழக்கமான நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கும். மேலும் இந்த காரணம் தான் பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. முக்கியமாக அதிக வேலை பளு உள்ள பெண்களுக்கும் அல்லது தொழில்முறை தடகள வீராங்கனைகளுக்கும், இந்த தவறுதல் காரணமாகிறது.

தவறான கணித்தல்

தவறான கணித்தல்

மாதவிடாய் சுழற்சி ஒரு பெண்ணில் இருந்து மற்ற பெண்ணிற்கு வேறுபடும். சராசரி மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, அது எல்லோருக்கும் பொருந்தாது. சில வேளைகளில் தவறாக கணக்கிடுவதனால், அது காலதாமதமாக வருவதாக நம்புகிறோம். ஆகவே ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி இருந்தால், எப்போது கரு முட்டை உற்பத்தியாகும் என்று தெரியும் பட்சத்தில், கருமுட்டை வெளியேறிய இரண்டு வாரங்கள் கழித்து, தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை கவனியுங்கள். அது தங்களுடைய மாதவிடாய் சுழற்சியை சரியாக கணிக்க உதவும்.

பெரி-மாதவிடாய்

பெரி-மாதவிடாய்

பெரி-மாதவிடாய் என்பது இனப்பெருக்க வயதில் இருந்து இனப்பெருக்கம் செய்ய இயலாத வயதுக்கு மாறுவதற்கான காலம் ஆகும்.

இந்த கால கட்டத்தில் மாதவிடாய் இலேசாகவும், அதிகமாகவும் காணப்படும். அடிக்கடி அதிகமாகவும் அல்லது அடிக்கடி குறைவாகவும் ஆனால் பெரும்பாலும் சாதாரண மாதவிடாய் சுழற்சி போன்று இருக்காது. ஆகவே கர்ப்பம் ஆக விரும்பவில்லை எனில் கர்ப்பத்தடை காரணிகளை உபயோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். ஏனெனில் இன்னும் சிறிது காலம் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உள்ளது.

இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்

இறுதி மாதவிடாய்/மெனோபாஸ்

மெனோபாஸ் என்பது வாழ்க்கையில் இன்மேல் கருத்தரிக்க வாய்ப்பு இல்லாத அல்லது மாதவிடாய் நிற்க கூடிய ஒரு பருவம். மெனோபாஸ் இயற்கையாக நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு அல்லது கருத்தடை அறுவை சிகிச்சை மூலம் இது சாத்தியமாகலாம் அல்லது ஹீமோதெரபி அதாவது மருந்துகள் எடுத்து கொள்வதன் மூலமாக இதை அடைய முடியும்.

கர்ப்பம் தரித்தல்

கர்ப்பம் தரித்தல்

இறுதியாக தான்! கர்ப்பமாக இருப்பதால், மாதவிடாய் தவறி இருக்கலாம்! இதற்கு ஒரு எளிய கர்ப்ப பரிசோதனை செய்வதன் மூலம், அறிந்து கொள்ள முடியும். சிறுநீர் கர்ப்ப சோதனை மற்றும் இரத்த கர்ப்ப சோதனைகள் ஹார்மோன் ஹெச்.சி.ஜியை கண்டறிய உதவும். இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும். பொதுவாக சிறுநீர் சோதனையை எளிமையாக வீட்டிலேயே செய்து கொள்ளலாம். இதற்கான சோதனை கிட் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Reasons Your Period is Late

Nothing strikes fear into the heart of any woman like a missed period, unless she is trying to get pregnant. Am I pregnant? Pregnancy is the first thing that we think of when our period is delayed. But is pregnancy the only reason for people to have a late period? Here are the 10 most common reasons that you missed your period.
Desktop Bottom Promotion