குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாம ரொம்ப அழுவாங்க-ன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உலகில் எந்த ஒரு மோசமான சப்தத்தையும் நம்மால் சகித்துக் கொள்ள முடியும். ஆனால் குழந்தையின் அழுகை குரலை மட்டும் ஒருவராலும் சகித்துக் கொள்ள முடியாது. குழந்தைகள் அழுதால், பலர் பதற்றம் அடைவார்கள். பொதுவாக குழந்தைகள் தங்களுக்குள்ள அனைத்து பிரச்சனைகளையும் அழுகையின் மூலம் தான் நமக்கு வெளிக்காட்டும். ஒரு வயது ஆகும் வரை குழந்தைகள் தாயை தான் முற்றிலும் சார்ந்திருப்பார்கள்.

ஒரு குழந்தையின் பிரச்சனையை யாரால் உணர முடியாமல் போனாலும், தாயால் உணர முடியாமல் இருக்க முடியாது. குழந்தை அழ ஆரம்பிக்கும் போது, தாய்மார்கள் அவர்களது அழுகையைப் போக்குவதற்கு பலவற்றை யோசித்து மேற்கொள்வார்கள். முக்கியமாக இரண்டாவது குழந்தையாக இருந்தால், குழந்தையின் பிரச்சனையை தாய்மார்களால் விரைவில் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் முதன்முறையாக தாய்மையை அடைந்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது. சில சமயங்கள் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுதால், புதிய தாய்மார்கள் காரணம் தெரியாமல் சில சமயங்களில் அழுவார்கள். இந்த பிரச்சனையைத் தவிர்ப்பதற்கு குழந்தைகள் எந்த காரணங்களுக்கு எல்லாம் விடாமல் தொடர்ச்சியாக அழுவார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் குழந்தையின் பிரச்சனையை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசி

பசி

ஒரு குழந்தை அழுவதற்கான முதன்மையான காரணமாக இருப்பது பசி. குழந்தை சமாதானம் ஆகாமல் அழுதவாறு இருந்தால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களது பசியைப் போக்குவது தான். அதிலும் தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளாக இருந்தால், அவர்களது வயிறு மிகச்சிறியது என்பதால், அவர்களுக்கு மிகச்சிறிய இடைவெளியில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும். எனவே உங்கள் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும் போது அழுதாலோ அல்லது விளையாடிக் கொண்டிருக்கும் போது அழுதாலோ, அவர்களுக்கு உடனே பால் கொடுங்கள். குழந்தை பசியால் அழுதிருந்தால், பால் குடிக்க ஆரம்பித்தும் அழுகையை நிறுத்திவிடும்.

அழுக்கான டயப்பர்

அழுக்கான டயப்பர்

எந்த ஒரு குழந்தைக்கும் ஈரப்பதமான அல்லது அழுக்கான டயப்பர் பிடிக்காது. இப்படி தாங்கள் டயப்பரால் சந்திக்கும் அசௌகரியத்தை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். எனவே உங்கள் குழந்தை பால் குடித்த பின்பும் தொடர்ச்சியாக அழுதவாறு இருந்தால், அவர்களது டயப்பரைப் பாருங்கள். டயப்பர் ஈரமாக இருந்தால், உடனே மாற்றுங்கள். அதன் பின் பாருங்கள் குழந்தை அழுகையை விட்டு, நிம்மதியாக தூங்கும். உங்கள் குழந்தை டயப்பரால் அசௌகரியத்தை உணராமல் இருக்க வேண்டுமானால், 2-3 மணிநேரத்திற்கு ஒருமுறை டயப்பரை மாற்றுங்கள். இதனால் டயப்பர் அரிப்புக்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம்.

டயப்பர் அரிப்பு

டயப்பர் அரிப்பு

அழுக்கான டயப்பர் போன்றே டயப்பர் அணிந்த பகுதிகளான உள் தொடை, பிட்டம், அந்தரங்க பகுதிகளில் அரிப்புகள் ஏற்பட்டாலும், அதை குழந்தைகள் அழுகையின் மூலம் தான் வெளிக்காட்டுவார்கள். டயப்பர் அழற்சி ஏற்பட்டால், அவ்விடமானது சிவந்து, வலிமிக்கதாக இருக்கும். உங்கள் குழந்தையின் பிட்டப்பகுதி அப்படி இருந்தால், உடனே கடைகளில் விற்கப்படும் ராஷ் க்ரீம் வாங்கிப் பயன்படுத்துங்கள். மேலும் இந்த அழற்சி போகும் வரை, குழந்தைகளுக்கு டயப்பரை அணிவிக்காமல் இருங்கள். இதனால் அவர்கள் மிகுந்த சௌகரியத்தை உணர்வார்கள்.

பல் முளைத்தல்

பல் முளைத்தல்

உங்கள் குழந்தை பிறந்து 6 மாதம் ஆகிவிட்டதா? அப்படியானால் 6-8 மாதத்திற்குள் அவர்கள் அடிக்கடி அதிகம் அழுவார்கள். ஏன் தெரியுமா? இக்காலத்தில் அவர்களுக்கு பற்கள் முளைக்க ஆரம்பிப்பதால் தான். பற்கள் முளைக்கும் ஆரம்ப காலத்தில் குழந்தைகள் ஈறுகளில் வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்திற்கு உள்ளாவார்கள். இக்காலத்தில் அவர்கள் கையில் கிடைப்பது அனைத்தையும் வாயில் வைத்து நன்கு கடிப்பார்கள். இம்மாதிரியான காலத்தில் அவர்களது கையில் குளிர்ச்சியான கேரட்டைக் கடிக்கக் கொடுங்கள். இது அவர்களுக்கு இருக்கும் அசௌகரியத்தைப் போக்கும்.

அதிகப்படியான சோர்வு

அதிகப்படியான சோர்வு

குழந்தைகள் அதிகளவு களைப்பை உணரும் போது, என்ன செய்வதென்று தெரியாமல் தொடர்ந்து அழுவார்கள். இம்மாதிரியான நேரத்தில் அவர்களால் தூங்க முடியாது. ஆகவே அவர்களது அழுகையைப் போக்க அவர்களை கொஞ்சுங்கள் அல்லது அவர்களுக்கு சுடுநீர் குளியல் மேற்கொள்ள வைத்து தாய்ப்பால் கொடுத்து, சிறிது நேரம் அவர்களுடன் விளையாடினால் உறங்கிவிடுவார்கள்.

வயிற்று பிரச்சனைகள்

வயிற்று பிரச்சனைகள்

குழந்தை வாய்வுத் தொல்லையால் கஷ்டப்பட்டாலோ அல்லது இதர வயிற்று பிரச்சனையால் அவஸ்தைப்பட்டாலோ, தொடர்ச்சியாக அழுவார்கள். அதிலும் உங்கள் குழந்தை உண்ட உடனேயே அதிகமாக அழுதால், அவர்களுக்கு வயிற்று பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. இம்மாதிரியான நேரத்தில் சுடுநீரில் அவர்களை குளிப்பாட்டுங்கள். இதனால் வயிற்றில் உள்ள அசௌகரியம் நீங்கி, நன்கு உறங்கிவிடுவார்கள். இல்லாவிட்டால், அவர்களது வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியை வையுங்கள். இதனால் வாய்வுத் தொல்லை நீங்கி, குழந்தையும் அழுகையை நிறுத்திவிடும்.

கவனத்தை ஈர்க்க...

கவனத்தை ஈர்க்க...

குழந்தைகள் தனியாக இருக்க விரும்புவதில்லை. அவர்கள் அருகில் யாரேனும் இருந்தாக வேண்டும். அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், மற்றவர்களது கவனத்தை ஈர்ப்பதற்கு அழுவார்கள். குழந்தைகளுக்கு அவர்களை கொஞ்சினால் பிடிக்கும். எப்போதும் தன்னை யாரேனும் கொஞ்ச வேண்டுமென்று விரும்புவார்கள். முக்கியமாக தாய் கொஞ்ச வேண்டுமென்று மிகவும் ஆசைப்படுவார்கள். தாய் தன் அருகில் இருந்து, தன்னைத் தூக்காமல் இருந்தால், குழந்தைகள் இன்னும் அதிகமாக அழுவார்கள். எனவே இம்மாதிரியான நேரத்தில் தாய் தூக்கி அரவணைத்தாலே குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடுவார்கள்.

ஏப்பம் வராமல் இருந்தால்...

ஏப்பம் வராமல் இருந்தால்...

சில சமயங்களில் குழந்தைகள் தாய்ப்பால் குடித்து முடித்த பின் விடாமல் அழுவார்கள். இதற்கு காரணம், குழந்தைகள் காற்றை விழுங்கியிருப்பதாக இருக்கலாம். இந்த விழுங்கிய காற்றினை ஏப்பத்தின் மூலமாக வெளியேற்றாமல் இருந்தால், அது அவர்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி அழுகையை உண்டாக்கும். எனவே குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பின், அவர்களது முதுகை சிறிது நேரம் தடவிக் கொடுங்கள். இதனால் அவர்களுக்கு விரைவில் ஏப்பம் வந்துவிடும்.

குளிர் அல்லது வெப்பம்

குளிர் அல்லது வெப்பம்

உங்கள் குழந்தை மிகுந்த குளிரையோ அல்லது வெப்பத்தையோ உணர்ந்தால், அதை அழுகையின் மூலம் தான் நமக்கு உணர்த்தும். எனவே குளிர் காலத்தில் குழந்தைகள் தூங்கும் போது எப்போதும் அவர்களைத் துணியால் சுற்றி, வெதுவெதுப்பான நிலையில் வைத்திருங்கள். அதேப் போல் குழந்தைகளுக்கு மிகவும் இறுக்கமான உடைகளை அணிவிக்காமல், சற்று தளர்வான உடைகளை அணிவியுங்கள். அவர்கள் தூங்கும் போது, ஏதேனும் போர்வை அல்லது துணியைப் போர்த்திவிடும் போது அழுதால், துணி அல்லது போர்வையை அகற்றிவிடுங்கள்.

உடல்நலக் குறைவு

உடல்நலக் குறைவு

குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், விடாமல் தொடர்ச்சியாக அழுவார்கள். அதிலும் அவர்களுக்கு காய்ச்சல், மூக்கு ஒழுகல், வறட்டு இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், மிகவும் அதிகமாக அழுவார்கள். இந்நிலையில் அவர்களை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons Why Your Baby is Crying a Lot

Here are the top reasons why your baby is crying a lot. Read on to know more...
Story first published: Thursday, February 15, 2018, 17:06 [IST]
Subscribe Newsletter