For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூவராய் பிறந்து கவனிக்க அன்னையென ஒருவரின்றி அனாதையான குழந்தைகள்!

குழந்தைகள் என்பவர்கள் கடவுளின் பரிசுகள்; மூவராய் பிறந்து கவனிக்க அன்னையென ஒருவரின்றி அனாதையான குழந்தைகள் பற்றிய கதையை தான் இந்த பதிப்பில் படித்து அறிய போகிறோம்.!

|

குழந்தைகள் என்பவர்கள் கடவுளின் பரிசுகள்; கடவுளின் பரிசுகளான குழந்தைகளை பத்திரமாய் பாதுகாத்து வளர்க்க வேண்டியது பெற்றோர் என்னும் மனித வடிவில் வாழும் தெய்வங்கள் தான். குழந்தைகள் பெற்றோர் வளர்ப்பில் தான், பெற்றோர் வாயிலாக தான் வாழ்க்கை என்றால் என்ன என்பதையே அறிவர். அப்படி வாழ்க்கையை கற்றுக் கொடுக்க வேண்டிய பெற்றோர்கள் திடீரென வாழ்வில் குழந்தையை விட்டு பிரிந்து சென்று விட்டால், குழந்தைகளின் நிலை என்ன ஆவது? குழந்தைகளின் வாழ்க்கை சோக மயமாகிவிடும்.

Real Life Story: Heartbreaking Story Of Triplets Who Lost Their Mother

அப்படிப்பட்ட ஒரு சோகம் நிறைந்த 3 குழந்தைகளை பற்றி தான் இப்பொழுது காண போகிறோம். மூவராய் பிறந்து கவனிக்க அன்னையென ஒருவரின்றி அனாதையான குழந்தைகள் பற்றிய கதையை தான் இந்த பதிப்பில் படித்து அறிய போகிறோம்.!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அந்த குழந்தைகள் யாறுடையது?

அந்த குழந்தைகள் யாறுடையது?

அமெரிக்க மாகாணத்தில் வாழ்ந்து வந்த ஜேம்ஸ் மற்றும் கரோலின் என்னும் தம்பதியரின் வாழ்வு மிகவும் அழகாக சென்று கொண்டு இருந்தது. காதலித்து, பெற்றோரால் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு காதல் மற்றும் நிச்சயம் இரண்டும் கலந்த வகையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியர் அழகாக தங்கள் வாழக்கையை வாழ்ந்து கொண்டு இருந்தனர்.

இவர்களின் காதல் அடையாளம் விரைவில் கரோலின் வயிற்றில் உருவானது; கரோலின் தங்கள் காதலின் அடையாளத்தை தனது வயிற்றில் ஆசையுடன், அதிக பாசத்துடன் சுமக்க தொடங்கினாள்.

பிரசவ சமயம்!

பிரசவ சமயம்!

கரோலின் தனது கர்ப்ப காலத்தை எந்த வித குறையும் இன்றி வெற்றிகரமாகவே கடந்து வந்தார்; ஒவ்வொரு மாதத்தையம் இரசித்து கடந்தார். கர்ப்ப கால ஸ்கேன் பரிசோதனைகளின் பொழுதே மருத்துவர்கள் கண்டு கொண்டார்கள், கர்ப்பத்தில் உருவாகி வளர்வது ஒரு குழந்தை அல்ல; 3 குழந்தைகள் என்று. அதனை தம்பதியருக்கு தெரிவிக்க வேண்டாம் என்று முடிவு செய்து விட்டனர் மருத்துவர்கள்!

நாட்களும் மாதங்களும் கடந்து பிரசவ சமயம் நெருங்கி கொண்டு இருந்தது; கரோலின் தன்னில் உருவான உயிரை காண போகும் ஆவலில் இருந்தாள்.

விதியின் விளையாட்டு!

விதியின் விளையாட்டு!

எதிர்பார்த்த படியே பிரசவ தேதியும் வந்தது; கரோலின் பிரசவ அறைக்குள் கொண்டு செல்லப்பட்டாள். அவளுக்கு ஆதரவு அளிக்க கணவர் ஜேம்ஸும் பிரசவ அறையில் அனுமதிக்க பட்டார். நேரம் செல்ல செல்ல கரோலின் நிலை மோசமாகி கொண்டே போனது; அதாவது கரோலினின் வயிற்றில் இருந்த பனிக்குட நீர் உடைந்து அது கரோலின் உடலின் இரத்தத்தில் கலந்து விட்டது.

அன்னையின் இதயம்!

அன்னையின் இதயம்!

இது எதிர்பாராத விதமாக நடந்த நிகழ்வு; இந்த சூழலில் மருத்துவர்களால் கரோலின் அல்லது அவளது வயிற்றில் வளரும் குழந்தைகள் யாரேனும் ஒருவரை தான் காப்பாற்ற முடியும் என்று கூறி விட்டனர். இந்த தகவலை கூறும் பொழுது மருத்துவர்கள் கரோலின் வயிற்றில் வளர்வது ஒரு குழந்தை அல்ல; 3 என்னும் தகவலையும் கூறி விட்டார்கள்.!

தம்பதியர் இந்த தகவலை கேட்டு ஆனந்தம் கொண்டார்கள்; அதே நேரத்தில் ஜேம்ஸ் தனது மனைவியை எண்ணி அதிக கவலை கொண்டான். ஆனால் கரோலின் உறுதியாக இருந்தாள்; தான் இறந்தாலும் பரவாயில்லை, தனது குழந்தைகள் உயிர் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்தாள்.

மேலும் படிக்க: ஆண்கள் எந்த வயதில் குழந்தை பெற்றுக்கொண்டால் நல்லது என்று அறிவீரா?

தாயின் தகவல்!

தாயின் தகவல்!

கரோலின் குழந்தையை பெற்று எடுத்த பின் அவர்களை ஒரு முறை ஆசை தீர பார்த்துக் கொண்டாள்; தனது வயிற்றில் உதித்த 3 முத்துக்களையும் ஆசைதீர முத்தத்தால் மூழ்கடித்தாள். கரோலின் உயிர் பிரியும் நிலை நெருங்கி கொண்டே இருந்தது; கரோலின் இறக்க போகும் தருவாயில், தனது கணவர் மற்றும் குழந்தைகளை ஒன்றாய் அருகில் அழைத்து தான் கூறும் செய்தியை தனது கல்லறையில் பதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள்.

உன்னதமான செய்தி!

உன்னதமான செய்தி!

"நான் என் கடைசி மூச்சினை கொடுத்து, என் 3 குழந்தைகளின் மூச்சினை காத்தேன்! குழந்தைகள் என் ஆயுளையும் சேர்த்து நீடுழி வாழ வேண்டும்" என்ற உன்னதமான தகவலை கூறி முடித்த பின் தனது உயிரை விட்டு விட்டாள். ஜேம்ஸ் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்து விட்டான்; கரோலினை நல்ல முறையில் அடக்கம் செய்தான். தனது மற்றும் கரோலின் பெற்றோர் உதவியுடன் குழந்தைகளை வளர்க்க தொடங்கினான்.

கல்லறை பிறந்த நாள்!

கல்லறை பிறந்த நாள்!

குழந்தைகள் பிறந்த நாளினை கரோலின் கல்லறையில் சென்று கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கேற்ற வகையில் ஏற்பாடுகளை செய்து குழந்தைகளின் முதல் பிறந்த நாளை தனது இறந்து போன மனைவியின் கல்லறையில் கொண்டாடினான். இந்த நல்ல நாளில் தான் கரோலின் கூறி சென்ற செய்தி அடங்கிய கல்லை அவளின் கல்லறையில் பொறுத்தினான், ஜேம்ஸ்.

கரோலின் தேவதையாக குழந்தைகளை ஆசிர்வதித்து, என்றென்றும் ஜேம்ஸ் மற்றும் குழந்தைகளுடனேயே இருந்து வருவாள்; அவர்களுக்கு பக்க பலமாக, ஆதரவாக இருந்து காத்து வருவாள்..! அவர்கள் வாழ்க்கை நல்ல முரையில் நகர நமது பிரார்த்தனைகளை சமர்பிப்போமாக!

மேலும் படிக்க: ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: Heartbreaking Story Of Triplets Who Lost Their Mother

Real Life Story: Heartbreaking Story Of Triplets Who Lost Their Mother
Story first published: Monday, October 8, 2018, 17:18 [IST]
Desktop Bottom Promotion