For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தையின் மேனி நீலநிறமா இருக்கா? இதயநோய் இருக்கலாம்... ஜாக்கிரதை

பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை. அதுவே நீல நிறமாக மாறிவிட்டால் அது இதய குறைபாடு உடைய குழந்தை என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.

By Jaya Chitra
|

குழந்தைகளுக்கு வரும் பிறவி இருதய நோய்களில் மிகவும் சிக்கலானது குழந்தை நீல நிறமாக மாறும் புளூ பேபி சிண்ட்ரோம். பிறக்கும் குழந்தைகள் பிங்க் நிறமாக இருந்தால்தான் ஆரோக்கியமான குழந்தை. அதுவே நீல நிறமாக மாறிவிட்டால் அது இதய குறைபாடு உடைய குழந்தை என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம். பிறந்தது முதல் ஒரு மாதம் வரை உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கு இந்த நோய் பாதிக்கிறது.

பிரசவம் பெண்களுக்கு மறுபிறவி. குழந்தையை பார்த்த உடன் பெண்கள் பிறவிப் பயனை அடைந்து விடுவார்கள். இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் ஆயிரம் பேரில் 34 பேர் இறந்து விடுகின்றனர் என்கிறது ஒரு புள்ளி விபரம். இதில் பத்து சதவிகிதக் குழந்தைகள் பிறவி இதயக்குறைபாட்டினால் பிறக்கிறார்களாம். 3 சதவிகித குழந்தைகள் தீவிர இதய குறைபாட்டுடன் பிறக்கின்றனராம்.

blue baby syndrome,

உடலில் ஆக்ஸிசன் அளவு குறைந்து கார்பன் டை ஆக்ஸைடு அதிகமானால் உடல் நீலநிறமாகிவிடும். இதயத்தில் குறைபாடு இருந்தால் இத்தகைய பாதிப்பு வரும். இதயத்தில் ஒட்டையுடன் உள்ள குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை சிகிச்சை மூலம் எளிதில் காப்பாற்றலாம். இரண்டாவது சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ் எனப்படும் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளின் உடல் நீல நிறத்தில் மாறி விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான குழந்தை

ஆரோக்கியமான குழந்தை

குழந்தை பிறந்தவுடன் தோல், இளஞ்சிவப்பாக இருக்கும். ஒரு நிமிடத்துக்கு 100 முறை இதயம் துடிக்கும். சுவாசம் சீராக இருக்கும்.

இதெல்லாம் பிறந்த குழந்தைக்கான ஆரோக்கியமான குழந்தைக்கான அடையாளங்கள். குழந்தை பிறந்து சில மணிநேரத்தில் நன்றாக கத்தி அழும். சில நாட்கள் வரை அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்கும். மலம் கழிக்கும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பது ஆரோக்கியமான அறிகுறி.

புளூ பேபி

புளூ பேபி

இந்தியாவில் பிறக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளில் சிலர் நீல நிற குழந்தையாகப் பிறக்கின்றனர். இதில் 50 சதவிகித குழந்தைகள் மட் டுமே முறையான சிகிச்சை கிடைத்து உயிர் வாழ்கின்றனர். மீதி குழந்தைகள் இறந்து விடுகின்றனர். இதய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது இதய மருத்துவத்தில் "சயனாட்டிக்' எனப்படும். இது போன்ற குழந்தைகள் புளூ பேபி என்று அழைக்கப்படுவர்.

இதயத்தில் பாதிப்பு

இதயத்தில் பாதிப்பு

இதய ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளின் உடல் நீல நிறமாக மாறும். இது போன்ற குழந்தைகள் "ப்ளூ பேபி' என்று அழைக்கப்படுவர். இது இதய மருத்துவத்தில் சயனாட்டிக் எனப்படும். இதயத்திற்கு வரும் அசுத்த ரத்தத்தை சுத்தப்படுத்தி அதனை பிற பகுதிகளுக்கு பம்ப் செய்து அனுப்புவது இதயத்தின் வேலை. இதில் கோளாறு ஏற்பட்டால்தான் குழந்தையின் உடல் நீல நிறமாக மாறும்.

புளூ பேபிக்கு காரணம்

புளூ பேபிக்கு காரணம்

மரபணுக்குறைபாடு, பெற்றோர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலும் இது தாக்கும். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பமாக இருக்கும் போது அதிக அளவில் மாத்திரை சாப்பிட்டாலும் பாதிக்கும். கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும் குழந்தையை பாதிக்கும். ரூபெல்லா தடுப்பூசி போடாமல் விடுவதும் குழந்தையை பாதிக்கும்.

இதயத்தில் பாதிப்பு அறிகுறிகள்

இதயத்தில் பாதிப்பு அறிகுறிகள்

இதயத்துடிப்பில் வித்தியாசமான ஒலி, அடிக்கடி சளி பிடிப்பது, நிமோனியா தாக்குவது, எடை குறைவாக இருப்பது, குறைவாக பால் குடிப்பது, அடிக்கடி மயக்கம், நினைவிழத்தல், கை, கால் வீக்கம் ஏற்பட்டாலும் மருத்துவரிடம் அழைத்துச்செல்வது அவசியம்.

தடுப்பது எப்படி

தடுப்பது எப்படி

மரபணு குறைபாடு இருக்கிறதா என்று முதலிலேயே பரிசோதனை செய்து கொள்வது நல்லது. கர்ப்பிணிகளுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தால் முறையாக சிகிச்சை அளித்து கட்டுப்படுத்த வேண்டும். பிறந்த குழந்தைகள் தாய்பால் குடிக்கும் போது பாதிப்பு ஏற்பட்டால் மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, அதிக வியர்வை ஏற்பட்டாலோ இதய சிகிச்சை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.

குழந்தையை காப்பாற்றலாம்

குழந்தையை காப்பாற்றலாம்

கருவிலேயே குழந்தையின் இதய குறைபாடு கண்டறியப்பட்டால் அதை கலைக்கவே மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதே நேரத்தில் பிறந்த பின்னர் இந்த குறைபாடு கண்டறியப்பட்டால் அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றலாம். பரிசோதனை மூலம் குழந்தையில் இதய குறைபாட்டினை அறிந்து கொண்டு சிகிச்சையை தொடங்கலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பிறந்து 18 மணிநேரமே ஆன குழந்தையில் இதயகுறைபாட்டினை அறிந்து அறுவை சிகிச்சை மூலம் பிழைக்க வைத்தனர். எனவே நீல நிற பேபி என்றாலும் கவலை வேண்டாம். தகுதியுள்ளவை தப்பிப்பிழைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: parenting baby
English summary

Blue Baby Syndrome: Causes, Symptoms And Treatment

Blue Baby Syndrome is a type of a blood disorder in which the blood is not able Know the causes, symptoms, treatment of blue baby syndrome.
Desktop Bottom Promotion