ஏன் குழந்தை பிறக்கும்போதே அதிக முடியுடன் பிறக்கிறது தெரியுமா?

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

ஒவ்வொரு பிறந்த குழந்தைகளும் வித்தியாசமாக காணப்படுவார்கள். சில குழந்தைகள் தலையில் அதிகமான முடிகளுடன் ஆச்சர்யமான தோரணையில் இருப்பார்கள். இதற்கு தற்போதைய அறிவியல் ஆராய்ச்சி ஒரு புதிய தகவலை கண்டறிந்துள்ளது.

அதாவது கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் நீண்ட கால நெஞ்செரிச்சலை உணர்ந்தால் பிறக்கும் குழந்தைக்கு தலையில் அதிகமான முடிகள் இருக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.நிறைய நிலைகளில் கருவில் வளரும் குழந்தைகளின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் காரணமாகும்.

பிறக்கும் போது அந்த சிறு பிஞ்சு குழந்தையின் வருடும் கைகளும், ரோஜாப் பூ இதழில் உதிர்க்கும் அதன் சிரிப்பும், அழுகையும் இதனுடன் மென்மையான அதன் தலையில் இருக்கும் வருடும் கூந்தலும் யாருக்கு தான் பிடிக்காது.

Why babies born with lots of hair

எல்லோராலும் கவர்ந்திழுக்கக்கூடிய அடர்த்தியான கருமை நிற முடியும் இதை எல்லாம் பார்த்த பிறகு கண்டிப்பாக ஒரு செல்ஃபி எடுத்து உங்கள் செல்லக் குழந்தைகளுடன் கொண்டாட மாட்டிங்களா என்ன. சரி சரி இப்பொழுது அந்த கருமையான அடர்த்தியான முடி தோன்றுவதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா

பிறந்த குழந்தைக்கு முடி வளரும் முறை

லானுகோ என்பது பிறந்த குழந்தையின் மீதுள்ள மென் மயிர் ஆகும். இது அவர்களின் முகம், தோள்பட்டை, முதுகு போன்ற இடங்களில் காணப்படுகிறது. இந்த முடிகள் கருவில் குழந்தை வளர ஆரம்பித்து அப்புறம் கருவுற்று 36-40 வாரங்களில் மறைந்து விடுகிறது. உங்கள் குழந்தை போதுமான முடியுடன் காணப்பட்டால் 4 மாதம் ஆனவுடனே உடலில் உள்ள முடிகள் உதிர்ந்து விடுகின்றன.

லானுகோ (மென் மயிர்) இவைகள் உங்கள் குழந்தையை கருவில் உள்ள அமினோடிக் படலத்திலிருந்து காக்கிறது. உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் தோலானது வெண்ணை போன்று மென்மையானது. இது வெர்னிஸ் என்று அழைக்கப்படுகிறது. எனவே அதன் சருமத்தை பாதுகாக்க இந்த முடி களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

லானுகோ ஒரு மேல்பரப்பாக செயல்பட்டு கருவில் இருக்கும் அமினோடிக் படலத்தால் குழந்தையின் சருமம் பாதிப்படையாமல் காக்கிறது.

Why babies born with lots of hair

கருவுற்ற காலத்தில் நெஞ்செரிச்சல் :

கர்ப்ப காலம் என்பது ஒரு மகிழ்வான தருணமாக இருந்தாலும் அதில் சந்தோஷமாக பயணிப்பது கொஞ்சம் கடினமே. காரணம் கர்ப்ப காலத்தில் நிறைய உடல் உபாதைகள், தொடர்ச்சியான நெஞ்செரிச்சல் போன்றவை இருக்கும். முந்தைய கால மூடநம்பிக்கைகளில் சொல்லப்படும் உண்மை கர்ப்ப காலத்தில் அதிகமான நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் குழந்தைக்கு அதிகமான தலைமுடி இருக்கும்.

இது மூடநம்பிக்கை என்று இருந்தாலும் நம் முன்னோர்கள் ஒன்றும் அறியாமல் சொல்லவில்லை. ஆமாங்க நமது அறிவியல் ஆராய்ச்சியும் இந்த உண்மையை தற்போது கண்டறிந்துள்ளது.

Why babies born with lots of hair

நிறைய கர்ப்பிணி பெண்களிடம் நீண்ட காலமாக செய்யப்பட்ட ஆராய்ச்சியின் பயனாய் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்செரிச்சல் போன்றவற்றை வைத்து ஆராய்ந்ததிலிருந்து தெரிய வந்தது பிறக்கும் குழந்தையின் தலையில் அதிகமான முடிகள் இருக்கின்றன என்பது தான். சில சமயங்களில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்யும் போது கூட இந்த முடிகள் தெரிகின்றன.

நெஞ்செரிச்சலை தடுக்க வீட்டு முறைகள் :

உங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் தலையில் அதிகமான முடிகள் இருக்கும் போது உங்களுக்கு கடுமையான நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு சில வீட்டு வைத்தியங்கள் செய்வதன் மூலம் குறைக்கலாம்.

ஒரு நாளைக்கு நிறைய வேளை என்ற கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுங்கள்

சாப்பிட்ட உடன் படுக்க வேண்டாம். காரம், கசப்பு, புளிப்பு மற்றும் உப்பு வகையான உணவுகளை போதுமான அளவு மட்டுமே எடுத்து கொள்ளுங்கள்.

அல்கலைன் உணவான பாதாம் பருப்பு, அவகேடா, கீரைகள், ஹெர்பல் டீ, பூண்டு, தயிர் மற்ற ஸ்மீத்தி போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள்.

Why babies born with lots of hair

எனவே கர்ப்ப கால நெஞ்செரிச்சலுக்கும் குழந்தையின் தலைமுடிக்கும் உள்ள சம்பந்தம் வெறும் மூட நம்பிக்கை மட்டும் இல்ல என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மேல் எந்த கர்ப்பிணி பெண்களும் நெஞ்செரிச்சல் பற்றி கவலைப்பட மாட்டீர்கள் தானே. ஏனெனில் உங்கள் குழந்தைகளும் புகழ்பெற்ற செலிபிரிட்டிகள் மாதிரி அழகான முடியுடன் பிறக்க போகிறது அல்லவா.

டெலிவரி காலங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். உங்கள் சூழ்நிலை, மரபணுக்கள், ஹார்மோன்கள் மற்றும் பல காரணிகள் சேர்ந்த காலம் தான் அது. இருப்பினும் உங்களை நீங்களே நன்றாக கவனித்து கொண்டு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். உங்கள் குழந்தை எப்படி இருந்தாலும் அவர்களை அன்புடன் பாசத்துடன் பரிவுடன் அணைக்க தயாராகுங்கள்.

English summary

Why babies born with lots of hair

Why babies born with lots of hair
Story first published: Tuesday, November 21, 2017, 19:00 [IST]
Subscribe Newsletter