குழந்தை பிறக்கும் போது இப்படியெல்லாம் இருக்குமா? திகைப்பூட்டும் புகைப்படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் போதே தனித்தன்மையுடன் தான் பிறக்கிறது. அவை வளர வளர தங்கள் வாழும் சூழலுக்கு ஏற்ப அவை உருவாமாறுகிறது.உள்ளே இருக்கும் திறமைகள் மற்றும் குணநலன்கள் என்றால் நமக்கு எந்த வித்யாசமும் தெரிவதில்லை ஆனால் பிறக்கும் போதே வித்யாசமாக தெரிந்தால் என்ன செய்வது?

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் மூன்று லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. அவற்றில் மிக அரிதான வகையிலும் விசித்திரமாகவும் பிறந்த குழந்தைகளைப் பற்றிய சுவாரஸ்யத் தொகுப்பு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏலியன் பேபி :

ஏலியன் பேபி :

பாகிஸ்தானில் இருக்கும் கில்ஜிட் என்ற ஊரில் 2010 ஆம் ஆண்டு இந்தக் குழந்தை பிறந்தது. இதனை எல்லாரும் ஏலியன் பேபி என்று அழைத்தார்கள். சிவந்த கண்கள், உடல் முழுவதும் வரி வரியாக என பார்க்கவே விசித்திரமாக இருந்தது.

Harlequin எனப்படுவது ஒரு வகையான சரும வியாதி. சருமத்தோல்கள் எல்லாம் சிவந்திருக்கும். தோல் முழுமையாக வளராது. நம் சருமத்தில் இருக்கக்கூடிய கெரட்டீன் லேயர் அதிகமாக பாதிக்கப்படுவதால் இது உண்டாகும். இக்குறைபாடு இருப்பவர்களுக்கு எளிதாக பாக்டீரியா தொற்று ஏற்படும்.

Image Courtesy

பாப்பாக்கு மூக்கு மேல கோபம் எப்டி வரும்? :

பாப்பாக்கு மூக்கு மேல கோபம் எப்டி வரும்? :

டிமோதி எலி தாம்சன் என்ற குழந்தை ப்ரீமெச்சூட் பேபியாக 2015 மார்ச் 4 அன்று பிறந்தது. குழந்தையைப் பார்த்த யாவருக்கும் ஆச்சரியம். அவரது உருவத்தை பார்த்த அந்த தாய், இது அதிசய குழந்தை என்று அரவணைத்துக் கொண்டார்.

குழந்தைக்கு Congenital Arhinia என்ற ஒரு வகை குறைபாடுடன் பிறந்திருக்கிறது. இக்குறைப்பாடு உடையவர்களுக்கு பிறக்கும் போதே மூக்கு இருக்காது. அதே போல நுகர்ந்து பார்க்கும் தன்மையும் இருக்காது. இது மிகவும் அரிதான ஒன்று. 197 மில்லியன் பேரில் ஒருவருக்குத் தான் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

உலகம் முழுவதிலும் இதேக் குறைப்பாட்டுடன் 50 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Image Courtesy

மீன் பையன் :

மீன் பையன் :

கிழக்கு சீனாவில் உள்ள ஜின்ஹு என்ற பகுதியைச் சேர்ந்த சாங் செங் என்ற குழந்தைக்கு பிறக்கும் போதே சருமத்துளைகள் இல்லாமல் பிறந்திருக்கிறது. இதனால் சருமம் தன்னைன் தானே குளிர்வித்துக் கொள்ள முடியாது. இதனால் சருமம் திட்டு திட்டாக தடியாகிடும்.

இது ஆறு லட்சம் பேர்களில் ஒருவருக்குத் தோன்றிடும். இது குழந்தை பிறந்த பத்து நாட்களிலேயே நாம் கண்டுபிடித்து விடலாம்.

Image Courtesy

நடுவுல கொஞ்சம் தோலைக் காணோம் :

நடுவுல கொஞ்சம் தோலைக் காணோம் :

2012 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் பிறந்த ஈஸ்டன் என்ற குழந்தை Epidermolysis Bullosa என்ற குறைபாட்டுடன் பிறந்தது. இது மிகுந்த வலிதரக்கூடிய அதே சமயத்தில் குணப்படுத்தப்படுத்த முடியாத மரபணு குறைபாடு.

சருமத்தில் குறிப்பாக மூட்டுப் பகுதிகளில் தோல் வளராமல் இருக்கும்.

Image Courtesy

வினோத குழந்தை :

வினோத குழந்தை :

2006 ஆம் ஆண்டு நேபாளில் இருக்கும் சாரிகோட் என்ற பகுதியில் இந்தக் குழந்தை பிறந்தது. விசித்திரமாக பிறந்திருக்கும் இந்தக் குழந்தையைப் பார்க்க ஏராளமானோர் திரண்டனர்.

தலைப்பகுதி முற்றிலும் இல்லாமலும்,உருண்ட பெரிய கண்களுமாய் பார்க்கவே விசித்திரமாய் இருந்தது. இந்தக் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே இறந்து விட்டது.

Image Courtesy

இரண்டு தான் ஆனால் ஒன்று :

இரண்டு தான் ஆனால் ஒன்று :

2015 ஏப்ரல் 18 அன்று ஜார்கண்ட்டில் நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்தது. இது ஹிந்துக் கடவுளின் அவதாரம் என்று சொல்லி ஏராளமானார் வந்து அந்தக் குழந்தையைப் பார்த்துச் சென்றனர்.

இது பாலிமெலியா என்ற குறைபாடு. இக்குறைபாட்டினால் குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கை கால்கள் கூடுதலாக இருக்கும்.

Image Courtesy

நெற்றிக்கண்ணில் எத்தனை விழி? :

நெற்றிக்கண்ணில் எத்தனை விழி? :

2012 ஆம் ஆண்டு இந்த குழந்தை பிறந்தது. வாயும் மூக்கும் இல்லாது நெற்றியில் ஒற்றைக்கண்ணுடன் பார்க்கவே பயங்ரமாய் இருந்தது அந்தக் குழந்தை. அதில் இரண்டு விழிகளும் இருந்தன.

வாய் மற்றும் மூக்கு இல்லாத காரணத்தால் மூச்சு விட முடியாமல் பிறந்த சில நிமிடங்களிலேயே அந்தக் குழந்தை இறந்து விட்டது.

Image Courtesy

உள்ளே வெளியே :

உள்ளே வெளியே :

2015 ஆம் ஆண்டு இந்தியாவில் இந்தக் குழந்தை பிறந்தது. மிகவும் அரிதான ectopia cordis என்ற குறைபாட்டுடன் இந்தக் குழந்தை பிறந்தது. இந்தக் குறைபாடு இருப்பவர்களுக்கு இதயம் இடமாறியிருக்கும்.

இந்தக் குழந்தைக்கு வெளியில் மார்புப்பகுதியில் இருந்தது. இதனைஉள்ளே வைத்து அறுவை சிகிச்சை செய்து விடுவார்கள். ஆனால் அறுவை சிகிச்சை தாங்கும் சக்தி அந்தக் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

Image Courtesy

தலையில் :

தலையில் :

இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் ரூனா பேகம் என்ற குழந்தை பிறந்தது. குழந்தை வளர வளர, தலை மட்டும் அபரிதமாக வளர்ந்தது.கிட்டதட்ட 94 செ.மீ சுற்றளவுக்கு வளர்ந்து விட்டது.

இக்குழந்தைக்கு Hydrocephalus என்ற குறைபாடு இருந்திருக்கிறது. இக்குறைபாடு இருப்பவர்களுக்கு மூளையில் அதிக தண்ணீர் சேரும். இது பிறந்த குழந்தைகளை எந்தப் பருவத்திலும் தாக்கலாம். இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் மரணம் கூட நிகழலாம்.

Image Courtesy

இரட்டைப் பிறவி :

இரட்டைப் பிறவி :

மார்ச் 2004 ஆம் ஆண்டு எகிப்தில் மனார் என்ற குழந்தை பிறந்தது பிறக்கும் போது இன்னொரு குழந்தையின் தலை மட்டும் சேர்ந்து இருந்தது. மானாரின் தலைக்கு மேலே இஸ்லாம் என்று பெயிரிடப்பட்ட அந்தக் குழந்தையும் இருந்தது.

அந்த தலை தானாக கண்களைச் சிமிட்டவும், சிரிக்கவும் மட்டுமே செய்ய முடியும். அறுவை சிகிச்சை மூலமாக அந்த தலையை அகற்றினார்கள். ஆனாலும் மனார் சிறிது காலம் மட்டுமே வாழ்ந்தார், மூளையில் ஏறபட்ட தொற்று காரணமாக மனார் ஆப்ரேஷன் நடைப்பெற்ற ஒரு வருடத்தில் உயிரிழந்தார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

List of Babies Were Born With The Most Unusual Disorder

List of Babies Were Born With The Most Unusual Disorder