For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குறைபிரசவத்தில் குழந்தை பிறந்தால், உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

|

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஒரு மாதத்தில் தாய்ப்பால் நிறைய அளித்தால், குழந்தையின் மூளை வளர்ச்சி, கவனிக்கும் திறன், கற்கும் திறன் ஆகியவை அதிகரிக்கும். அதேபோல் அந்த குழந்தைக்கு வயது 7 ஆகும்போது, மூளையின் செயல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

Mother's feeding makes brain development faster for pre-term babies

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை தீவிர குழந்தை சிகிச்சை பிரிவில் வைத்திருக்கும்போது, உடனடியாக முடிந்த வரை தாய்மார்கள் தாய்ப்பால் கொடுபது மிக அவசியம் . இவை மருத்துவ சிகிச்சையோடு, தாய்ப்பாலின் மகத்துவமும் சேர்ந்து விரைவில் குழந்தை முழுவளர்ச்சி அடைய உதவுகின்றது.


போதிய வளர்ச்சி இல்லாமல் முன்னதாக பிறக்கும் குழந்தைக்கும், கல்லீரல், மூளை மற்றும் மற்ற உறுப்புகள் சரிவர முழுமையடைந்திருக்காது.

அந்த சமயங்களில் தாய்ப்பால்கள் கொடுக்கும்போது, வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது என அமெரிக்காவிலுல்ள, பிரிக்காம் மகப்பேறு மருத்துவமனையின் தலைமை ஆராய்ச்சியாளரும், மருத்துவருமான மேண்டி பிரவுன் கூறுகிறார்.

தாய்ப்பாலின் மகத்துவம் எவ்வாறு குறைபிரசவக் குழந்தைகளுக்கு நன்மைகளைத் தருகிறது என ஆராயும் நோக்கில் இந்த ஆராய்ச்சியை சுமார் 180 குறைப் பிரசவ குழந்தைகளிடம் மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சி அவர்கள் 7 வயது ஆகும் வரை தொடர்ந்தது.

ஆனால் நிறைய தாய்மார்கள் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க சிரமப்படுகின்றனர். காரணம் அந்த குழந்தைகளுக்கு உதடுகள் சரிவர வளர்ச்சி அடைந்திருக்காது.

மேலும் குழந்தையால் குடிக்க முடியாமல் திணரும். இந்த நேரங்களில் தாய்ப்பால் கொடுப்பது சவாலாகவே இருக்கும். இதற்கு மருத்துவ மனைகளிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்களின் தக்க உதவியோடு, தாயால் குழந்தைக்கு தாய்ப்பாலை கொண்டு சேர்க்க முடியும் என அவர் கூறுகிறார்.

காரணம் இந்த சமயத்தில் தாய்களுக்கு மன அழுத்தம், சரியான தூக்கமில்லாமலும், ஹார்மோன் மாற்றங்களாலும், அவர்களின் உடல் பாதிக்கப்படும். இந்த மாதிரியான கட்டங்களில் அவளுக்கு அரவணைப்பும், போதிய ஊடச்சத்தும் மிக முக்கியம்.

இந்த 7 வருட ஆய்வில், குறைபிரசவக் குழந்தைகளுக்கு அதிகம் தாய்ப்பால் தரப்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சி, கற்கும் திறன் ஆகியவை , மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டது.

English summary

Mother's feeding makes brain development faster for pre-term babies

Mother's feeding makes brain development faster for pre-term babies
Desktop Bottom Promotion